டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த நிலை குறித்து நிதி அமைச்சகம் திங்கள்கிழமை விளக்கம் அளித்தது. ரஷ்யா-உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக நிதி நிலைமைகளில் இறுக்கம் போன்ற உலகளாவிய காரணிகள் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், டாலருக்கு எதிராக, பிரிட்டிஷ் பவுண்ட், ஜப்பானிய யென் மற்றும் யூரோ போன்ற நாணயங்கள் ரூபாயை விட அதிக அளவில் பலவீனமடைந்துள்ளன. 2022 இல் இந்த நாணயங்களுக்கு எதிராக இந்திய ரூபாய் வலுவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோக்களின் வெளியேற்றம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணம் என்று அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் தரவுகளை நிதி அமைச்சகம் சுட்டிக்காட்டியது. ரூபாயின் மதிப்பு 2018 முதல் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது. 2018-இறுதியில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 69.79க்கு அருகில் இருந்தது. மேலும் 2019 இறுதியில் இது 71.27 ஆகவும், பின்னர் 2020-இறுதியில் 73.05 ஆகவும் உயர்ந்தது. டிசம்பர் 2021 இறுதிக்குள் இந்திய ரூபாயின் மதிப்பு 74.30 ஆனது.
அதற்கு முன்னதாக, 2014 ஆம் ஆண்டில், டிசம்பர் இறுதியில் ரூபாய் 63.33 ஆக இருந்தது. ஆனால் 2015 மற்றும் 2016 இறுதியில் இந்த மதிப்பு 66.33 மற்றும் 67.95 ஆக உயர்ந்தது. இருப்பினும், 2017 இறுதியில் மீண்டும் 63.93 ஆனது.
மக்களவையில் கேள்விகளுக்குப் பதிலளித்த நிதி அமைச்சர், பெயரளவிலான அந்நிய செலாவணி விகிதம் ஒரு பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகளில் ஒன்றாகும் என்பதை எடுத்துக்காட்டினார்.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாணயத்தின் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, போட்டித்தன்மையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது பொருளாதாரத்தை சாதகமாக பாதிக்கும். வீழ்ச்சி இறக்குமதியின் விலைகளை உயர்த்துகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அன்னியச் செலாவணி சந்தையை தொடர்ந்து கண்காணித்து, அதிகப்படியான ஏற்ற இறக்கம் ஏற்படும் சூழ்நிலைகளில் தலையிடுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்திய மாதங்களில் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இது இந்தியாவில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் இந்திய ரூபாயின் இருப்பிற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது.
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகளில் சில:
- நவம்பர் 4, 2022 வரை சிஆர்ஆர் மற்றும் எஸ்எல்ஆர் பராமரிப்பில் இருந்து அதிகரிக்கும் வெளிநாட்டு நாணயம் மற்றும் என்ஆர்இ வைப்புகளுக்கு விலக்கு
- புதிய FCNR (B) மற்றும் NRE வைப்புகளுக்கு வட்டி விகிதங்கள் மீதான தற்போதைய விதிமுறைகளில் இருந்து விலக்கு. வெளிநாட்டு நாணய வைப்புகளை ஈர்ப்பதற்காக ஒப்பிடக்கூடிய உள்நாட்டு ரூபாய் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட, அக்டோபர் 31, 2022 வரை வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை வழங்க அனுமதிக்கின்றன.
- மேலும், இந்திய கடன் கருவிகளில் அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பதற்காக கடன் ஓட்டங்களில் FPI தொடர்பான ஒழுங்குமுறையை ஆர்பிஐ திருத்தியது.
- இது டிசம்பர் 31, 2022 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளில் வெளிப்புற வணிகக் கடன் வரம்பை (தானியங்கி வழியின் கீழ்) $1.5 பில்லியனாக உயர்த்தியது.
- மேலும், ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கப்பட்ட டீலர் வகை-I (ஏடி கேட்-I) வங்கிகளுக்கு வெளிநாட்டு நாணயத்தில் கடன் வாங்குவதற்கு வெளிநாட்டு நாணயத்தில் கடன் வழங்குவதைப் பயன்படுத்த அனுமதித்துள்ளது.
ரூபாயின் மதிப்பு சரிவினால் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா என்று கேள்விக்கு, "வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ மூலதனம் வெளியேறுவது இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதற்கு ஒரு முக்கிய காரணம். முன்னேறிய பொருளாதாரங்களில், குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பண நெருக்கடி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து நிதியை திரும்பப் பெறச் செய்கிறது." என்று பதில் அளிக்கப்பட்டது.
இதுவரை, FY23 இல், FPI முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து $14 பில்லியனை எடுத்துள்ளனர்.
ஜூன் 29 மற்றும் ஜூன் 30 ஆகிய தேதிகளில் பூட்டானின் நாணயத்திற்குச் சமமாக ரூபாய் எட்டப்பட்டதா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சகம், "பூட்டானின் நகல்ட்ரம் (BTN) 1974 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்திய ரூபாய்க்கு இணையாக உள்ளது, இந்திய ரூபாய்க்கு இணையாக நகர்கிறது." என்று கூறியது.
திங்களன்று இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 80ஐ தாண்டியது. இன்று மதியம் 12:00 மணி நிலவரப்படி, இந்திய நாணய சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80.01 ஆக உள்ளது.
மேலும் படிக்க | பம்பர் ஆபர்: மூத்த குடிமக்களின் FD கணக்குகளுக்கு அதிக வட்டி தரும் அரசு நிறுவனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ