ITR தாக்கல் செய்யலையா? கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆயாச்சு! இந்த விஷயங்களை மறந்திடாதீங்க!

Important Things For Income tax return : வரிகளைத் தாக்கல் செய்யும்போது ஏற்படும் ஒரு தவறு கூட, வருமான வரிக் கணக்கு நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும், இந்த எளிய சரிபார்ப்புப் பட்டியலை பயன்படுத்தி சுலபமாக ஐடிஆர் தாக்கல் செய்யலாம்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 2, 2024, 08:50 AM IST
  • ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்குகிறது
  • வருமான வரித் தாக்கலில் முக்கியமான 10 விஷயங்கள்
  • ஜூலை 31 காலக்கெடு கவுண்டவுன் தொடங்கியாச்சு!
ITR தாக்கல் செய்யலையா? கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆயாச்சு! இந்த விஷயங்களை மறந்திடாதீங்க! title=

நியூடெல்லி: கடந்த நிதியாண்டான FY 2023-24 (AY 2024-25) உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 ஆகும். வரிகளைத் தாக்கல் செய்யும்போது ஏற்படும் ஒரு தவறு கூட, வருமான வரிக் கணக்கு நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்பதால் அதிக கவனம் தேவை. இந்த எளிய சரிபார்ப்புப் பட்டியலை பயன்படுத்தி சுலபமாக ஐடிஆர் தாக்கல் செய்யலாம்.

ஐடிஆர் தாக்கலுக்கான காலக்கெடு 
ஜூலை 31 அன்று நிலுவைத் தேதிக்கு முன்னதாக உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்வதை உறுதிசெய்யவும். காலக்கெடுவைத் தவறவிட்டால் அபராதம் மற்றும் அதற்கான வட்டியும் செலுத்த வேண்டும்.

சரியான ITR படிவத்தைத் தேர்வு செய்வது
வெவ்வேறு ITR படிவங்கள் இருக்கின்றன, வகைக்குக் ஏற்றவாறு படிவங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வரி செலுத்துவோர் ITR 1 முதல் ITR 7 வரையிலான படிவங்களில் தங்களுக்கு உரியதை சரியாக தேர்ந்தெடுத்து அதன்படி தாக்கல் செய்ய வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்
படிவம் 16, ஆதாரத்தில் வரிக் கழிக்கப்பட்ட (டிடிஎஸ்) சான்றிதழ்கள், வட்டிச் சான்றிதழ்கள், முதலீட்டுச் சான்றுகள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக் கொண்டு அதன்பின், வரித்தாக்கல் செய்யவும்

படிவம் 26AS 
அனைத்து TDS மற்றும் வரி செலுத்துதல்கள் துல்லியமாக பிரதிபலிக்கப்படுவதை உறுதிசெய்ய, உங்கள் வரிக் கடன் அறிக்கையை (படிவம் 26AS) சரிபார்க்கவும். 

மேலும் படிக்க | ITR தாக்கல் செய்ய போறீங்களா... இந்த ஆவணங்களை ரெடியா வச்சுகோங்க..!!

வருமானங்களை முறையாக அறிவிக்கவும்
சம்பளம், வட்டி, வாடகை வருமானம், மூலதன ஆதாயங்கள் மற்றும் பிற வருவாய்கள் உட்பட அனைத்து வருமான ஆதாரங்களையும் வருமான வரிக்கணக்கில் தெரிவித்திருக்க வேண்டும். ஏதேனும் விட்டுப்போய்விட்டால் அபராதம் விதிக்கப்படும்.  

உரிமைகோரல்கள் / விலக்குகள்
80C, 80D, 80G மற்றும் பிற பிரிவுகளின் கீழ் அனைத்து தகுதியான விலக்குகள் மற்றும் தள்ளுபடிகளை பயன்படுத்தவும். ஆனால், நீங்கள் விலக்கு கோரும் அல்லது உரிமை கோரும் எந்தவொரு விஷயத்திற்குக்ம் தேவையான உரிய ஆவணங்கள் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்யவும்.

முன் நிரப்பப்பட்ட தரவு மதிப்பாய்வு
முன்பே நிரப்பப்பட்ட ITR படிவத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், முன் நிரப்பப்பட்ட தரவின் துல்லியத்தைச் சரிபார்க்கவும். சமர்ப்பிப்பதற்கு முன் ஏதேனும் பிழைகள் அல்லது குறைபாடுகள் இருந்தால், அவற்றை சரி செய்வும்.

வெளிநாட்டு சொத்துக்கள்
வெளிநாட்டில் ஏதேனும் சொத்துக்களை நீங்கள் வைத்திருந்தால் அல்லது வெளிநாட்டில் இருந்து வருமானம் வந்தால், அவை உங்கள் வருமான வரிக்கணக்கில் அவசியம் காட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால், அது கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுக்கும்.

உங்கள் வருமானத்தை சரிபார்த்தல்
உங்கள் ஐடிஆரைத் தாக்கல் செய்த பிறகு, அதை ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ள மறக்காதீர்கள். ஆதார் OTP, நெட் பேங்கிங் அல்லது CPCக்கு கையொப்பமிடப்பட்ட நகலை அனுப்புதல் போன்ற பல்வேறு முறைகள் மூலம் ஆன்லைனில் வருமானத்தை சரிபார்க்கலாம்.

ஒப்புகைச்சீட்டு
ITR தாக்கல் செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டதும், அதற்கான ஒப்புகை ரசீதை (ITR-V) பாதுகாப்பாக வைத்திருங்கள். இது வருமானவரி தாக்கல் செய்ததற்கான ஆதாரம் ஆகும். இந்த ஒப்புகைச்சீட்டு எதிர்கால குறிப்புக்காக தேவைப்படும்.

மேலும் படிக்க | 15 நாட்களில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமா? 2 வாரத்தில் நல்ல லாபம் தரும் பங்குகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News