Income Tax Return: படிவம்-16 இல்லாவிட்டாலும் ITR தாக்கல் செய்யலாம்!

Income Tax Return: அபராதமின்றி வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம், வருகிற 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 20, 2022, 03:34 PM IST
  • வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், ஏப்ரலில் தொடங்கியது.
  • வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம், வருகிற 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.
  • 80சியின் கீழ் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வரி விலக்கு கோரலாம்.
Income Tax Return: படிவம்-16 இல்லாவிட்டாலும் ITR தாக்கல் செய்யலாம்! title=

வருமான வரி தாக்கல்:  தற்போது 2021-22 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலம். ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். 2021-2022-ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், ஏப்ரலில் தொடங்கியது.   அபராதமின்றி வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம், வருகிற 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் வருகிற டிசம்பர் வரை ரூ.5 ஆயிரம், ஜனவரி, முதல் மார்ச் வரை, ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும்.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு ஒரு படிவம் மிகவும் முக்கியமானது மற்றும் அது படிவம்-16 ஆகும். சம்பளம் அடிப்படை விலக்கான ரூ.2.5 லட்சத்தை தாண்டவில்லை என்றால், அந்த ஊழியர்களுக்கு படிவம்-16 வழங்கப்படுவதில்லை, ஆனால் அந்த ஊழியர்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்யலாம்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது படிவம்-16 மிக முக்கியமான ஆவணமாகும். உங்கள் நிறுவனத்தின் சார்பாக படிவம்-16 வழங்கப்படுகிறது. இந்த படிவம்-16ல், உங்கள் சம்பளம், பிடித்தம், வரி பிடித்தம், அலவன்ஸ் தவிர, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது தேவையான ​​பல தகவல்கள் உள்ளன.

மேலும் படிக்க | ITR: வருமான வரி தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களின் முழு விபரம் இதோ

படிவம்-16 இல்லாமல் ஐடிஆர் நிரப்புவது எப்படி?

நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யும் முதல் நிதியாண்டின் TDS கணக்கைக் கண்டறியவும். இங்கே நீங்கள் படிவம் 26AS-ன் உதவியைப் பெறலாம்.

உங்கள் மொத்த சம்பளத்தைக் கண்டறியவும். இதற்கு, சம்பள சீட்டை சேகரிக்கவும். PFக்கு நீங்கள் செய்யும் பங்களிப்பு மட்டுமே நிகர வரிக்குட்பட்ட வருமானத்தின் ஒரு பகுதியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வீட்டு வாடகை கொடுப்பனவில் TDS கழிக்கப்பட்டால், HRA-ல் வரி விலக்கு பெறுவதற்கு வாடகை ரசீதை நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். இந்த ரசீது முன்னதாகவே கொடுக்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படாவிட்டால், ஐடிஆர் நேரத்தில் அதைக் கோரலாம்.

போக்குவரத்து கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு, மருத்துவ கொடுப்பனவை சம்பளத்தில் இருந்து கழிக்கவும். 80சியின் கீழ் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வரி விலக்கு கோரலாம்.

இந்த அனைத்து செயல்முறைகளையும் செய்த பிறகு, உங்கள் வரிவிதிப்பு வருமானத்தை அறிந்து கொள்ளலாம்.  இதற்கு வரியைக் கணக்கிடலாம், நீங்கள்  அதிக வரி செலுத்தியிருந்தால், ஐடிஆர் நிரப்பிய பிறகு, அந்த பணம் திரும்ப கிடைக்கும்.

மேலும் படிக்க |  TDS New Rule: ஜூலை 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வரும், முழு விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News