Income Tax Notice: இந்திய வருமான வரி சட்டங்களின் கீழ், உங்கள் வருமானம் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் இருந்து, நீங்கள் வரி வரம்பிற்குள் வந்தால், வருமான வரிக் கணக்கைத் (Income Tax Return) தாக்கல் செய்வது அவசியமாகிறது. ஐடிஆர் தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் எதேனும் தவறை இழைத்தால், வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கான முழு உரிமையும் உள்ளது. இதுமட்டுமின்றி, பழைய ஐடிஆர் -ஐ மறுமதிப்பீடு செய்யும் உரிமையும் வருமான வரித்துறைக்கு (Income Tax Department) உள்ளது.
வருமான வரி செலுத்துவோர் (Taxpayers) 2018-19 மதிப்பீட்டு ஆண்டு முதல் அறிவிக்கப்படாத வருமானத்தை அறிவிப்பதற்கான காலக்கெடு 31 ஆகஸ்ட் 2024 ஆகும். மதிப்பீட்டு ஆண்டு 2018-19 அல்லது அதற்கு அடுத்த ஆண்டுகளில், உங்கள் அறிவிக்கப்படாத வருமானம் ரூ. 50 லட்சத்திற்கு மேல் இருந்தால், பிரிவு 148 இன் கீழ், 31 ஆகஸ்ட் 2024க்குள் வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் பெற வாய்ப்புள்ளது.
விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
- முன்னதாக இப்படிப்பட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு மதிப்பீட்டு ஆண்டின் முடிவில் இருந்து 10 வருடங்கள் துறைக்கு வழங்கப்பட்டது.
- அதன்படி, 2018-19 மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரித்துறைக்கு மார்ச் 31, 2029 வரை கால அவகாசம் இருந்திருக்கும்.
- ஆனால் 2024 பட்ஜெட் பழைய வழக்குகளை மீண்டும் தொடங்குவதற்கான காலக்கெடுவைக் குறைத்துள்ளது.
- அத்தகைய சூழ்நிலையில், 2018-19 மதிப்பீட்டு ஆண்டு அல்லது அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் அறிவிக்கப்படாத வருமானம் 50 லட்சத்திற்கு மேல் இருந்தால், வரி செலுத்துவோர் 148A மற்றும் 148 பிரிவுகளின் கீழ் வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் பெறக்கூடும்.
மேலும் படிக்க | EPS 95 குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் ஏற்றம்? உச்சநீதிமன்றத்துக்கு சென்ற விவகாரம்
உங்களுக்கு வருமான வரித்துறையின் நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
நோட்டீசை சரிபார்க்கவும்
பிரிவு 148A இன் கீழ் உங்களுக்கு நோட்டீஸ் வந்தால், அது கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வழங்கப்பட்டதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். உள்ளூர் மதிப்பீட்டு அதிகாரி அல்லது NFAC மூலம் இது அனுப்பப்பட்டுள்ளதா என்பதையும் வெரிஃபை செய்துகொள்ள வேண்டும்.
நோட்டீசுக்கு பதிலளிக்கவும்
148A பிரிவின் கீழ் நோட்டீசுக்கு பதிலளிக்க வரி செலுத்துபவர்களுக்கு 7 முதல் 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகின்றது. இந்த காலக்கெடுவை மனதில் வைத்து, சரியான நேரத்தில் உங்கள் நோட்டீசுக்கான பதிலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
நோட்டீஸ் தவறாக இருந்தால் என்ன செய்வது?
தேவை இல்லாமல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நீங்கள் கருதினால், நோட்டீசுக்கு பதிலளிக்கும் போது, தேவையான ஆவணங்களை இணைத்து, உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி சப்மிட் செய்யவும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், மீண்டும் ஒரு முறை உங்கள் வழக்கை ஆய்வு செய்யுமாறு நீங்கள் வருமான வரித்துறையை கேட்டுக்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ