Caution: தங்கத்தை ஆன்லைனில் வாங்கினால் இந்த விஷயங்களை கவனத்தில் வைக்கவும்

ஆன்லைனில் பொருட்களை வாங்குபவரா நீங்கள்? ஆன்லைனில் வாங்கிய நகையை திருப்பிக் கொடுப்பது மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை கொள்கை வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 28, 2021, 06:52 PM IST
  • தங்கத்தை ஆன்லைனில் வாங்கினால் கவனமாக இருக்கவும்
  • நகையை திருப்பி கொடுப்பது தொடர்பான கொள்கையை தெரிந்துக் கொள்ளவும்
  • விலை நிர்ணயத்தை உறுதிபடுத்தவும்
Caution: தங்கத்தை ஆன்லைனில் வாங்கினால் இந்த விஷயங்களை கவனத்தில் வைக்கவும் title=

புதுடெல்லி: தங்க நகைகளை ஆன்லைனில் வாங்குகிறீர்களா? அதற்கு முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள். ஆன்லைன் வர்த்தகம் வந்த பிறகு உலகெங்கிலும் உள்ள ஷாப்பிங் நடத்தை மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம், ஷாப்பிங் மற்றும் வணிகச் செயல்பாடுகளின் புதிய மையமாக டிஜிட்டல் உருவெடுத்துள்ளது, அதில் மக்களின் அன்றாட வாழ்க்கையை துரிதமாக மாற்றவும், பாதிக்கவும் செய்கிறது ஆன்லைன் ஷாப்பிங்.

ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது நுகர்வோர் நேரடியாக பார்க்காமல், ஆன்லைனில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தே வாங்குகின்றனர். தற்போது ஆன்லைனில் தங்க நகைகளை வாங்கும் பழக்கமும் அதிகரித்துவிட்டது. நீங்களும் ஆன்லைனில் தங்கம் வாங்கினால் இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்கு நிச்சயமாக பயன்படும்.

Read Also | பொன்னகைகளின் பொன்னான புகைப்படத் தொகுப்பு

சான்றளிக்கப்பட்ட அல்லது ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே வாங்கவும். ஆன்லைனில் தங்கத்தை வாங்கும் போது ஹால்மார்க் சான்றிதழுடன் வாங்க வேண்டும். பிஐஎஸ் (Bureau of Indian Standards) ஹால்மார்க் தரச் சான்றிதழ் பெற்ற நகைக்கடைக்காரரிடமிருந்து வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் ஆபரணம் / நாணயம் / பார்களில் BIS குறியீடு இருக்கும். BIS இணையதளத்தில் BIS சான்றளிக்கப்பட்ட நகைகளை விற்கும் நகைக்கடை விற்பனையாளர்களின் பட்டியல் இருக்கு. அதை பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

ஆன்லைனில் நீங்கள் வாங்கிய நகையை திருப்பிக் கொடுப்பது மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை கொள்கை வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். COVID-19 நெருக்கடியால் நுகர்வோர் நடத்தையில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது சில்லறை விற்பனையாளர்களுக்கு கூடுதல் பொறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது,

Also Read | Pimples Reasons: முகப்பரு வர இதெல்லாம் கூட காரணமாகுமா?

ஏனெனில் அவர்கள் எப்போதும் வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடினமாக உழைக்க வேண்டும். இந்த மாறிவரும் சூழலில் ஆன்லைனில் நீங்கள் வாங்கிய நகையை திருப்பிக் கொடுப்பது மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை கொள்கை வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை ஆன்லைனில் போடுவதற்குக் முன்பு ஷாப்பிங் மேடையில் பொருட்களை மாற்றிக்க்கொள்ளும்  கொள்கைகளையும் சரிபார்க்க வேண்டும். 

நகைகளை வாங்கும்போது, எடை மற்றும் நிறம், தங்க விலை நிர்ணயம், காரட் விகிதம் மற்றும் தங்க எடையை அடிப்படையாகக் கொண்டது. ஆன்லைனில் தங்க நகையை வாங்குவதற்கு முன்ந்தாக நகைகளின் நிறம், டிசைன் மற்றும் எடையை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.

நகை விலை நிர்ணயம், பொதுவாக எடை, வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறன் உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. நகைகளை தயாரிக்கும் நுட்பங்கள் அதன் ஆயுள் மற்றும் கூடுதல் ஆறுதலுக்கான நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்வதற்கான முக்கிய காரணியாகும், அதுதான் தங்க நகையின் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுக்கு காரணம்.

Also Read | IVF கருவுறுதல் சிகிச்சை பெறுவதற்கு பெண்ணின் உடல் எடை தடையா?

இயந்திரத்தால் தயாரிக்கப்படும் நகைகளைவிட, கையால் உருவாக்கப்படும் ஆபரணங்களின் விலை அதிகமாக இருக்கும். ஆன்லைனில் நகைகளை வாங்குவதற்கு முன், காரட் விகிதம், கிராம் எடை, வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறன் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் விலை எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் தயாரிப்புகளின் தரம் ஆகியவற்றில் வடிவமைப்பு மற்றும் அதன் விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பெரும்பாலும், புகைப்படங்களின் அடிப்படையில் மட்டுமே தயாரிப்புகளின் தரத்தை தீர்மானிக்கிறோம். ஆனால் அதுதான் நாம் ஏமாற்றப்பட காரணமாக இருக்கலாம்.

நகைகளில் பயன்படுத்தப்படும் பூச்சு, டிசைன் ஆகியவை ஷாப்பிங் இணையதளத்தில் வெளியிடப்பட்ட படங்களுடன் பொருந்தவில்லை என்பதுதான் ஆன்லைனில் வாடிக்கையாளர்களின் புகாராக இருக்கிறது.

நகைகளை வாங்குவதற்கு முன்னதாக ஒரு பிராண்டின் அங்கீகாரத்தை அறிய தொடர்பு விவரங்கள் மற்றும் எஸ்எஸ்எல் சான்றிதழ்களைச் சரிபார்க்கவும். ஆன்லைன் ஸ்டோரின் நம்பகத்தன்மையை ஒரு நுகர்வோர் எவ்வாறு தீர்மானிப்பார் என்பதில் எஸ்எஸ்எல் சான்றிதழ் பங்கு வகிக்கிறது.

Also Read | தந்தை - மகன் இருவரும் மாநில முதலமைச்சர்களாக இருந்த பட்டியல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News