Anil Ambani Mistakes: அனில் அம்பானி ஒரு காலத்தில் உலகின் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார். ரிலையன்ஸ் ஏடிஏஜியின் தலைவரான பிறகு ஒரு காலத்தில் உலகின் 6ஆவது பணக்காரராக இருந்தார். ஆனால் இப்போது அவர் பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெகு தொலைவில் உள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அனில் அம்பானி நிச்சயமாக பல கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.
அனில் அம்பானியின் நிறுவனங்களில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் நேவல் போன்றவை அடங்கும். திருபாய் அம்பானியால் கட்டப்பட்டு வளர்க்கப்பட்ட நிறுவனம் பிறகு, முகேஷ், அனில் ஆகிய அம்பானி சகோதரர்கள் தான் மேம்படுத்தப்பட்டது. இந்தியாவின் பணக்கார தொழிலதிபராக முகேஷ் அம்பானி வளர்ந்த வேளையில், அனில் அம்பானியின் நிறுவனங்கள் நஷ்டம் அடைந்து திவாலாகின.
ரிலையன்ஸ் குழுமம்
உண்மையில் 1958இல் திருபாய் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தைத் தொடங்கினார். திருபாய் அம்பானி 2002இல் இறந்தார். பின்னர் மகன்கள் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இடையே வணிகம் பிரிக்கப்பட்டது. பிரிந்த பிறகு, முகேஷ் அம்பானி பெட்ரோ கெமிக்கல், டெக்ஸ்டைல் மற்றும் சுத்திகரிப்பு தொழில்களை வாங்கினார். மறுபுறம் அனில் அம்பானி தொலைத்தொடர்பு, நிதி மற்றும் எரிசக்தி வணிகத்தைப் பெற்றார்.
மேலும் படிக்க | வங்கிகள் வேண்டாம்! தபால் அலுவலகங்களை தேர்ந்தெடுங்க! ஏன் தெரியுமா?
திவாலான நிறுவனங்கள்!
அந்த நேரத்தில் அனில் அம்பானி புதிய முயற்சிகளை மேற்கொண்டார். அதில் அவர் வெற்றி பெறுவார் என்று பலரும் நம்பினர். ஆனால் அனில் அம்பானியால் வெற்றிபெற முடியவில்லை. இன்று அவருடைய பல நிறுவனங்கள் திவாலாகிவிட்டன. பல தவறுகளின் விளைவாக அனில் அம்பானி தோல்வியை சந்திக்க நேரிட்டது.
அனில் அம்பானியின் தவறுகள்!
- துல்லியமான திட்டம் இல்லாமல் வியாபாரத்தில் காட்டிய அவசரம். எந்தத் தயாரிப்பும் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக புதிய திட்டங்களில் முதலீடு செய்தார்.
- அதிக செலவு காரணமாக அவர் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டது. பின்னர் அதிக கடன் வாங்கி கடனில் சிக்கினார்.
- அவர் ஒரு தொழிலில் கவனம் செலுத்தவில்லை. பல்வேறு திட்டங்களைத் தொடங்கி அதில் ஈடுபட்டார்.
- லட்சியத்தால் எடுக்கப்படும் பெரும்பாலான முடிவுகள் தலைகீழாக மாற்றப்படுகின்றன. இது அதிகரித்த கடன் மற்றும் 2008 பொருளாதார மந்தநிலையில் அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனலாம்.
மேலும் படிக்க | பங்குச் சந்தையில் ஆயிரத்தை கோடிகளாக்க ‘சில’ டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ