GST Registration: புதிய பிஸ்னஸுக்கு GST பதிவு செய்வது எப்படி? செயல்முறை இதோ

GST Registration: ஜிஎஸ்டி பதிவுக்கு என்ன ஆவணங்கள் தேவை? ஜிஎஸ்டி -க்கு பதிவு செய்வது எப்படி?  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 28, 2023, 09:43 PM IST
  • ஜிஎஸ்டி பதிவுக்கு என்ன ஆவணங்கள் தேவை?
  • ஜிஎஸ்டி -க்கு பதிவு செய்வது எப்படி?
  • பகுதி-பி -யை எவ்வாறு நிரப்புவது?
GST Registration: புதிய பிஸ்னஸுக்கு  GST பதிவு செய்வது எப்படி? செயல்முறை இதோ title=

GST Registration: இந்தியாவில், சொந்தமாக தொழில் செய்ய விரும்பும் அல்லது ஸ்டார்ட்அப் தொடங்க விரும்பும் பலர் உள்ளனர். அவர்கள் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதில் முக்கியமான ஒன்று ஜிஎஸ்டி பதிவு. GST பதிவுக்கு GST REG-01 படிவத்தை நிரப்ப வேண்டும். ஆன்லைனிலும் இதை நிரப்பலாம். இதற்கு எந்த வித செலவும் செய்ய வேண்டியதில்லை. இந்த படிவம் பகுதி-A மற்றும் பகுதி-B என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளையும் நிரப்ப வேண்டியது அவசியம், இல்லையெனில் ஜிஎஸ்டி பதிவு முடிக்கப்படாது.

ஜிஎஸ்டி பதிவுக்கு தேவையான ஆவணங்கள் எவை?

- நிறுவனத்தின் CIN No. / இணைப்புச் சான்றிதழ்

- பான் கார்டு

- மெமோரண்டம் அல்லது ஆர்டிகல் ஆஃப் அசோசியேஷன் அல்லது பார்ட்னர்ஷிப் டீல் அல்லது எல்எல்பி டீட்

- உரிமையாளர் ஒப்பந்தம், வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தம் போன்ற முகவரி ஆதாரம்

- நிறுவனத்தின் உரிமையாளரின் (ஆதரைஸ்ட் சிக்னடரி) பெயர், முகவரி ஆதார் மற்றும் பான் கார்ட். 

ஜிஎஸ்டி -க்கு பதிவு செய்வது எப்படி?

ஸ்டெப் 1- முதலில் https://www.gst.gov.in/ என்ற ஜிஎஸ்டி போர்ட்டலுக்குச் சென்று Services டேபின் கீழ் உள்ள Registration என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு New Registration என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 2- இது பகுதி-A ஆகும். இதில் முதலில் நீங்கள் வரி செலுத்துபவரா அல்லது வரி வசூல் செய்பவரா அல்லது வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் அதையும் குறிப்பிட வேண்டும். அதன் பிறகு மாநிலம், வணிகப் பெயர், பான், மின்னஞ்சல், மொபைல் போன்ற சில முக்கியமான தகவல்களை நிரப்ப வேண்டும்.

ஸ்டெப் 3- உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சலை சரிபார்க்க OTP அனுப்பப்படும். OTP ஐ உள்ளிட்ட பிறகு, Proceed என்பதைக் கிளிக் செய்யவும். OTP சரிபார்க்கப்பட்ட பிறகு, Continue என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு ஒரு பக்கம் திறக்கும், அதில் ஒரு தற்காலிக ரெஃபெரன்ஸ் எண் அதாவது 15 இலக்க டிஆர்என் எண் இருக்கும். இந்த எண் விண்ணப்பதாரரின் மொபைல் மற்றும் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்பட்டும். இது 15 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த எண்ணைப் பயன்படுத்தி நீங்கள் பகுதி-B ஐ நிரப்பலாம்.

ஸ்டெப் 4- GST REG-01 படிவத்தின் பகுதி-B இங்கிருந்து தொடங்குகிறது. இதற்குப் பிறகு நீங்கள் மீண்டும் Services டேபின் கீழ் புதிய பதிவுப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் Temporary Reference Number (TRN) கிளிக் செய்து எண்ணைத் தட்டச்சு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, Proceed என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 5- இதற்குப் பிறகு ஒரு புதிய வலைப்பக்கம் திறக்கும். அதில் உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடிக்கு OTP அனுப்பப்படும். OTP -ஐ உள்ளிட்ட பிறகு, Proceed என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 6- அடுத்த பக்கத்தில் GST REG-01 இன் ஸ்டேடஸ் draft போன்று காண்பீர்கள். ஏனென்றால், இது வரை பகுதி-A மட்டுமே நிரப்பப்பட்டு, பகுதி-B மீதமுள்ளது. இங்கே நீங்கள் Action பொத்தானைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்த பிறகு நீங்கள் பகுதி-B ஐ நிரப்பத் தொடங்குவீர்கள்.

மேலும் படிக்க | Investment Tips: பெண்களுக்கான ‘சில’ சிறந்த முதலீட்டு திட்டங்கள்!

பகுதி-பி -ஐ எவ்வாறு நிரப்புவது?

ஜிஎஸ்டி பதிவின் பகுதி-பி -யில் 10 துணைத் தலைப்புகளின் கீழ் சுமார் 27 வெவ்வேறு புள்ளிகள் உள்ளன. அவை நிரப்பப்பட வேண்டும். 26 மற்றும் 27வது புள்ளிகள் ஒப்புதல் மற்றும் சுய சரிபார்ப்புக்கானவை. இது தவிர, மீதமுள்ள 25 புள்ளிகளை நீங்கள் மிகவும் கவனமாக நிரப்ப வேண்டும். சில விஷயங்களை மீண்டும் சரிசெய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தவறு நடந்தால், பதிவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் செய்யப்பட வேண்டும். ஆகையால் படிவத்தை நிரப்பும்போது கவனமாக இருங்கள்.

இந்தத் தகவல்களை 10 துணைத் தலைப்புகளின் கீழ் நிரப்ப வெண்டும்: அவை - business details, promoter/partners, authorised signatory, authorised representative, principal place of business, additional place of business, goods and services, state specific information, Aadhaar authentication மற்றும் verification ஆகும். 25 புள்ளிகளை பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் ஆதார் அங்கீகாரம் மற்றும் ஜிஎஸ்டி படிவ சரிபார்ப்பை மட்டுமே செய்ய வேண்டும்.

ஆதார் அங்கீகாரத்தின் கீழ், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உங்கள் வணிக இருப்பிடத்தின் பிசிக்கல் வெரிஃபிகேஷன் இருக்காது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் பிசிக்கல் வெரிஃபிகேஷன் அவசியம். நீங்கள் ஆதாரை வழங்கவில்லை என்றால், பிசிக்கல் வெரிஃபிகேஷன் விருப்பத்தையும் தேர்வு செய்யலாம். ஆன்லைன் அங்கீகார விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு ஆன்லைன் செயல்முறையை முடிக்கக்கூடிய இணைப்பு உங்களுக்கு அனுப்பப்படும்.

GST REG-01 படிவத்தின் சரிபார்ப்பு

ஆதார் அங்கீகாரத்திற்குப் பிறகு, சரிபார்ப்பின் கடைசி பத்தி (காலம்) வரும். டிஜிட்டல் கையொப்பம் அல்லது இ-ஆதார் சரிபார்ப்பு மூலம் இதைச் செய்யலாம். நிறுவனங்கள், கூட்டாண்மை மற்றும் LLP(கள்) சரிபார்ப்புக்கு டிஜிட்டல் கையொப்பம் அவசியம். GST REG-01 படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, விரைவாக அதை வெரிஃபை செய்ய வேண்டும்.

விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டதும், Submit பொத்தானைக் கிளிக் செய்து அதை ஜிஎஸ்டி போர்ட்டலுக்கு அனுப்ப வேண்டும். இதற்குப் பிறகு, விண்ணப்பம் ஜிஎஸ்டி போர்ட்டலில் சரிபார்க்கப்பட்டு அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்படும். சரிபார்ப்பு வெற்றிகரமாக இருந்தால், ARN எண் ஜெனரேட் செய்யப்படும். அதன் பிறகு ஆதரைஸ்ட் செகரட்ரிக்கு இது பற்றிய விவரம் GST REG 02 படிவத்தின் மூலம் ஒப்புகையை அனுப்பி தகவல் வழங்கப்படும். இதற்குப் பிறகு விண்ணப்பம் ஜிஎஸ்டி அதிகாரிக்கு அனுப்பப்படும். எல்லாம் சரியாக இருந்தால், சுமார் 7 நாட்களுக்குள் ஜிஎஸ்டி பதிவுச் சான்றிதழ் மற்றும் ஜிஎஸ்டிஐஎன் வழங்கப்படும்.

மேலும் படிக்க | செக்கில் கையொப்பமிடும் போது ‘இந்த’ தவறுகளைச் செஞ்சுடாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News