இந்திய குடிமகன்களாகிய ஒவ்வொருவரும் கட்டாயம் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும், அரசு வழங்கும் சலுகைகள் தொடங்கி வங்கி தொடர்பான வேலைகள், கல்வி தொடர்பான வேலைகள் என அனைத்து வகையான அதிகாரபூர்வ செயல்களுக்கும் ஆதார் அட்டை தான் முதன்மையான சான்றாக விளங்குகிறது. முக்கியமான ஆவணமாக திகழும் இந்த ஆதார் அட்டையில் தனிநபரது கருவிழி ரேகை, கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்களும், இன்னும் பிற முக்கியமான தகவல்களும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பத்து வருடங்களுக்கு ஒருமுறை தங்களது ஆதார் அட்டையை அப்டேட் செய்துகொள்வது நல்லது என்று யூஐடிஏஐ அறிவுறுத்தியுள்ளது, மக்கள் ஆதார் அட்டையில் தங்களது பெயர், முகவரி, மொபைல் எண், புகைப்படம் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற எந்தவித தகவல்களையும் அப்டேட் செய்ய விரும்பினால் யூஐடிஏஐ அறிமுகப்படுத்தியுள்ள போர்ட்டலுக்கு சென்று உங்களது தனிப்பட்ட தகவல்களை அப்டேட் செய்துகொள்ளலாம். பலரது ஆதார் அட்டையிலும் உள்ள புகைப்படம் பார்ப்பதற்கே பயங்கரமாக உள்ளது, ஆதார் அட்டையிலுள்ள புகைப்படம் பலருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை அந்த புகைப்படத்தை மாற்ற விரும்புபவர்கள் கீழ்கண்ட படிநிலைகளை பின்பற்றி மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | மாதந்தோறும் வருமானத்தை அள்ளித்தரும் அஞ்சல் அலுவலகத்தின் அசத்தலான திட்டம்!
ஆதார் அட்டையில் புகைப்படத்தை அப்டேட் செய்தல்:
1) யூஐடிஏஐ-ன் அதிகாரபூர்வ இணையதள பக்கமான uidai.gov.in-க்கு செல்லவேண்டும்.
2) ஆதார் பதிவு படிவத்தைப் டவுன்லோடு செய்யவேண்டும்.
3) தேவையான அனைத்து விவரங்களையும் படிவத்தில் நிரப்பி பூர்த்தி செய்யவேண்டும்.
4) பூர்த்தி செய்த படிவத்தை ஆதார் பதிவு மையத்திற்கு சென்று சமர்ப்பிக்கவும்.
5) இங்கு உங்கள் புதிய படத்தை எடுத்துக்கொள்ளலாம்.
6) இதற்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.
7) பிறகு உங்களுக்கு அக்னாலேட்ஜமென்ட் சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண் (யூஆர்என்) கிடைக்கும்.
8) இந்த யூஆர்என் மூலம் உங்கள் ஆதார் அட்டையின் புதுப்பிப்பை நீங்கள் கண்காணிக்கலாம்.
ஆதார் அட்டையில் முகவரியை அப்டேட் செய்தல்:
1) யூஐடிஏஐ-ன் அதிகாரபூர்வ இணையதள பக்கமான https://www.uidai.gov.in/ க்கு செல்லவும்.
2) அதன் பிறகு 'மை ஆதார்' எனும் மெனுவைக் தேர்வு செய்யவும்.
3) மெனுவிலிருந்து "உங்கள் ஆதாரைப் புதுப்பிக்கவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4) பிறகு, "அப்டேட் டெமோகிராபிக்ஸ் டேட்டா ஆன்லைன்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5) இப்போது உங்கள் திரையில் ஆதார் அட்டை சுய சேவை போர்ட்டலுக்கான மறுவடிவமைப்பு தோன்றும்.
6) இப்போது "ப்ரொசீட் டூ அப்டேட் ஆதார்" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
7) தேவைப்பட்டால் ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சா சரிபார்ப்பை முடிக்கவும்.
8) அதன் பிறகு "சென்ட் ஓடிபி" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
9) இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.
10) ஓடிபி சரிபார்ப்புக்குப் பிறகு, 'புஅப்டேட் டெமோகிராபிக்ஸ் டேட்டா' ஆப்ஷனிற்கு செல்லவும்.
11) இதில் மாற்றங்களைச் செய்ய, "முகவரி" விருப்பத்தைப் பயன்படுத்தவும்.
12) உங்கள் புதிய முகவரிக்கான தகவலை உள்ளிடவும்.
13) இப்போது ஆதார் ஸ்கேன் செய்யப்பட்ட நகலாக பதிவேற்றப்பட வேண்டும்.
14) பின்னர் "தொடரவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
15) தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
16) இந்த சேவைக்கு தேவையான கட்டணத்தை பேமெண்ட் பக்கத்தில் செலுத்தவும்.
17) சேவையை சரிபார்க்க ஓ டிபி-ஐப் பயன்படுத்தவும்.
18) வேலையைச் சேமித்து, ப்ரோக்ராமை டவுன்லோடு செய்யவேண்டும்
19) இப்போது யூஆர்என்-ஐ பயன்படுத்தி முகவரி புதுப்பிப்புகளின் நிலையைக் கண்காணிக்கவும்.
இந்த அப்டேட் செயல்முறைக்கு கிட்டத்தட்ட 90 நாட்கள் வரை ஆகலாம், செயல்முறையை முடித்த உடனேயே அப்டேட் செய்யப்பட்ட ஆதார் அட்டையை பெறமுடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டதா? சரிபார்க்க வழிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ