HDFC Bank MCLR Rate Hiked News in Tamil: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன் வாங்கியோருக்கு EMI உயரும். எச்டிஎஃப்சி வங்கி, நிதிகளுக்கான மார்ஜினல் காஸ்ட் லெண்டிங் விகிதம் எனப்படும் (எம்சிஎல்ஆர்) 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. புதிய கட்டணங்கள் ஜனவரி 8, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. இது போன்ற சூழ்நிலையில், எச்டிஎஃப்சி வங்கியில் கடன் வாங்கியவர்களை இது பாதிக்கலாம். MCLR வட்டி என்பது கடன்களுக்கு விதிக்கப்படும் அடிப்படையான வட்டி விகிதம் ஆகும். எனவே, MCLR வட்டி உயர்த்தப்படும்போது வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கு EMI தொகை உயரும்.
HDFC வங்கியின் MCLR விகிதம்
HDFC வங்கியின் MCLR 8.80 சதவீதம் முதல் 9.30 சதவீதம் என்ற அளவில் உள்ளது. ஒரே இரவில் எம்சிஎல்ஆர் 8.80 சதவீதத்தில் இருந்து 8.70 சதவீதமாக 10 பிபிஎஸ் உயர்த்தப்பட்டுள்ளது. HDFC வங்கியின் (HDFC Bank) ஒரு மாத MCLR 8.75 சதவீதத்தில் இருந்து 8.80 சதவீதமாக 5 bps அதிகரித்துள்ளது. மூன்று மாத எம்சிஎல்ஆர் 8.95 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆறு மாத எம்சிஎல்ஆர் 9.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு எம்சிஎல்ஆர் 9.20 சதவீதத்தில் இருந்து 9.25 சதவீதமாக 5 பிபிஎஸ் உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கடன்கள் ஒரு வருட MCLR உடன் இணைக்கப்பட்டுள்ளன. 3 ஆண்டுக்கான எம்சிஎல்ஆர் 9.30 சதவீதமாக மாறாமல் உள்ளது.
கடன் விகிதத்தை அதிகரித்த பிற வங்கிகள்
எச்டிஎஃப்சி வங்கியைத் தவிர, வேறு பல வங்கிகளும் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. எஸ்பிஐ சமீபத்தில் அதிக கடன் மதிப்பெண்கள் உள்ளவர்களுக்கு வட்டி விகிதத்தை 8.85 சதவீதமாக உயர்த்தியுள்ளது. பாங்க் ஆப் பரோடா வாகன கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 8.8 சதவீதமாக உயர்த்தியுள்ளது. யூனியன் வங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட தனி நபர் கடன்கள் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் தனிநபர் கடனுக்கான ஆரம்ப வட்டி 10.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 8.35 சதவீதமாகக் குறைத்துள்ளது.
கூடுதல் தகவல்: HDFC வங்கி கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்பான புதிய விதிகள்
HDFC வங்கி, Regalia மற்றும் Millennia கடன் அட்டைகளின் விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. HDFC வங்கி ரீகாலியா கிரெடிட் கார்டில் குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் செலவழித்த பின்னரே இப்போது ஏர்போர்ட் லவுஞ்ச் அக்ஸஸ் சலுகை கிடைக்கும். ஒரு காலாண்டில் நீங்கள் 2 லவுஞ்ச் அக்ஸஸ் சலுகையை பெறுவீர்கள். அதே நேரத்தில், ஹெச்டிஎஃப்சி வங்கி மில்லினியா கிரெடிட் கார்டு மூலம் காலாண்டுக்கு ரூ. 1 லட்சம் செலவழித்த பின்னரே கிரெடிட் கார்டு வசதியின் பலன் கிடைக்கும். இந்த அட்டை மூலம், நீங்கள் ஒரு காலாண்டில் ஒரு முறை மட்டுமே ஏர்போர்ட் லவுஞ்ச் அக்ஸஸ் சலுகையை பெற முடியும்.
மேலும் படிக்க | கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்... நோட் பண்ணிக்கோங்க மக்களே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ