நரேந்திர மோடி அரசு பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி (சிபிஎஃப்) பயனாளிகளுக்கான அகவிலை நிவாரண தொகையை 13 சதவீதம் உயர்த்துவதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கடந்த மே-11, 2022 அன்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 5வது சிபிசி சீரிஸில் அடிப்படையான கருணைத் தொகையைப் பெறும் சிபிஎஃப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் அகவிலை நிவாரண தொகையானது உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க | 20 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பான், ஆதார் அவசியம்: CBDT
மேலும் இந்த அறிவிப்புப்படி, 18/11/1960 மற்றும் 31/12/1985 க்கு இடையில் சேவையில் இருந்து ஓய்வு பெற்று தற்போது உயிருடன் இருக்கும் சிபிஎஃப் பயனாளிகள் A, B, C மற்றும் D குழுவிற்கு ரூ.3,000, ரூ.1,000, ரூ.750 மற்றும் ரூ.650 போன்ற கருணைத் தொகையைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஜனவரி 1 முதல் அடிப்படைக் கருணைத் தொகையில் 368 சதவீதத்திலிருந்து 381 சதவீதமாக அகவிலை நிவாரண தொகை உயர்த்தப்பட்டு இருக்கிறது. பின்வரும் சிபிஎஃப் பயனாளிகளுக்கு, ஜனவரி 1, 2022 முதல், அடிப்படை தொகையில் 360 சதவீதத்திலிருந்து 373 சதவீத கருணைத் தொகை வரை அகவிலை நிவாரணம் கிடைக்கும்.
1) இறந்த சிபிஎஃப் பயனாளியின் மனைவி/கணவன் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் ஜனவரி 1, 1986 க்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் அல்லது ஜனவரி 1, 1986 க்கு முன்பு பணியில் இருக்கும்போது இறந்தவர்கள் ஜூன் 4, 2013 முதல் ஜூன் 27,2013 வரை மாதத்திற்கு ரூ 645 மதிப்பிலான கருணைத் தொகையை திருத்தியமைத்து கொள்ளலாம்.
2) மத்திய அரசு ஊழியர்கள் 1969 நவம்பர் 18 ஆம் தேதிக்கு முன் சிபிஎஃப் சலுகைகளுடன் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் ரூ.654, ரூ.659, ரூ.703 மற்றும் ரூ.965க்கான கருணைத் தொகையைப் பெறுவார்கள்.
மேலும் படிக்க | 7th Pay Commission: 4% அதிகரிக்கிறதா அகவிலைப்படி, ஊழியர்களுக்கு நல்ல செய்தி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR