ரேஷன் பெறுபவர்களுக்கு டபுள் ஜாக்பாட்: அரசு தந்த மாஸ் அப்டேட், உடனே தெரிஞ்சிக்கோங்க

Siddaramaiah Govt: மாநிலத்தில் அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 1.28 கோடி ரேஷன் கார்டு பயனாளிகள் உள்ளனர். இவற்றில் 99 சதவீதம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர, சுமார் 1.06 கோடி (82 சதவீதம்) பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 12, 2023, 03:21 PM IST
  • 22 லட்சம் குடும்பங்களுக்கு பலன் கிடைக்காது.
  • அந்த்யோதயா அன்ன திட்டத்தின் கீழ் 1.28 கோடி பயனாளிகள்.
  • கூடுதலாக 5 கிலோ அரிசியும் வழங்கப்படும்.
ரேஷன் பெறுபவர்களுக்கு டபுள் ஜாக்பாட்: அரசு தந்த மாஸ் அப்டேட், உடனே தெரிஞ்சிக்கோங்க title=

அன்ன பாக்யா திட்டம்: அரசின் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் நீங்களும் ரேஷன் பெற்றுக்கொண்டு இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆம், கர்நாடகாவின் சித்தராமையா அரசு ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. அந்தவகையில் தற்போது அரசாங்கம் அன்ன பாக்யா யோஜனாவின் கீழ் 170 ரூபாயை கணக்கிற்கு மாற்றும் என்று தெரிவித்துள்ளது. இந்தப் பணம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத்திற்கு (பிபிஎல்) வழங்கப்படும், மேலும் இதனுடன் கூடுதலாக 5 கிலோ அரிசியும் வழங்கப்படும். மேலும் இந்தப் பணம் குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும்.

அந்த்யோதயா அன்ன திட்டத்தின் (ஏழைகளுக்கான உணவுத் திட்டம்) கீழ் 1.28 கோடி பயனாளிகள்
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மொத்தம் 1.28 கோடி ரேஷன் கார்டு பயனாளிகள் உள்ளனர். இவற்றில் 99 சதவீதம் பேர் தங்களின் ரேஷன் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர். இது தவிர, சுமார் 1.06 கோடி (82 சதவீதம்) பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பயனாளிகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.34 வீதம் கூடுதலாக 5 கிலோ அரிசிக்கு டிபிடி மூலம் பணம் வழங்கப்படும். இந்தப் பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும்.

மேலும் படிக்க | இனி ரூ. 5 லட்சம் இல்லை... ரூ. 10 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும்!

22 லட்சம் குடும்பங்களுக்கு பலன் கிடைக்காது
இருப்பினும், 22 லட்சம் BPL குடும்பங்கள் இன்னும் 'அன்ன பாக்யா யோஜனா' திட்டத்தின் கீழ் பலனைப் பெறவில்லை. உண்மையில், இதற்கு முக்கிய காரணம் இன்னும் இவர்களின் வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் இருப்பது தான். 'அன்ன பாக்யா யோஜனா' திட்டத்தில், பிபிஎல் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பயனாளிக்கும் 5 கிலோ அரிசி வழங்கப்படும். உண்மையில், இந்த வாக்குறுதியை காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் கர்நாடகா அரசு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்ன பாக்யா யோஜனா என்றால் என்ன?
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, அன்ன பாக்யா திட்டத்தை கடந்த 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மேலும் இந்த அன்ன பாக்யா யோஜனா என்பது கர்நாடக அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டமாகும். இதன் கீழ், பிபிஎல் பிரிவினரின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 10 கிலோவில் 5 கிலோ அரிசியை மத்திய அரசு சாரப்பில் வழங்கப்படும். இது நீண்ட நாட்களாக பயனாளிகளிடம் இருந்து வருகிறது. மேலும் கூடுதலாக 5 கிலோ அரிசி மாநில அரசு சாப்பில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக இதற்கு பதிலாக, பயனாளிகளின் வங்கிக் கணக்கில், மாதம்தோறும் 170 ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்திய உணவு கழகத்திடம் (FCI) இருந்து அரசால் அரிசி வாங்க முடியாததால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

அன்ன பாக்யா திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
குடியிருப்பு சான்று
வசிப்பிட சான்றிதழ்
கைபேசி எண்
ஆதார் அட்டை
பிபிஎல் அட்டை/ அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டை

 மேலும் படிக்க | தீபாவளிக்கு ஊருக்கு போக ரயில் டிக்கெட் போட்டாச்சா... அனல் பறக்கும் முன்பதிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News