அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி! பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்

Old Pension Schemes: கர்நாடகாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், அந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 26, 2024, 09:30 AM IST
  • 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 13 ஆயிரம் பேர் அரசு பணியில் சேர்ந்துள்ளனர்.
  • தேசிய ஓய்வூதிய அமைப்பு என்றால் என்ன?
  • பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) 1952 இல் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி! பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் title=

பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி. நீங்கள் கர்நாடக மாநில அரசு ஊழியராக இருந்தால், உங்களுக்கு பம்பர் ஜாக்பாட் தான். உண்மையில், கர்நாடகாவில் உள்ள அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக சித்தராமையா அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது, இதன் மூலம் 13 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும்.

அந்த வகையில் கர்நாடக அரசு (Karnataka Goernment) தனது 13,000 ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டுவர புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும் இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது, “கர்நாடகாவில் கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 13 ஆயிரம் பேர் அரசு பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று நாங்கள் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்படி அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme - OPS) அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததை கவனித்தேன். அவர்களின் கோரிக்கைகள் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்தேன். இந்த திட்டம் 13 ஆயிரம் ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது என்று நம்புகிறேன். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | SCSS vs Bank FDs: மூத்த குடிமக்களுக்கு அசத்தல் வட்டி, பம்பர் லாபம் அளிக்கும் திட்டம் எது

பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன (What is Old Pension Scheme):
பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) 1952 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் பாதிக்கு இணையான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அரசாங்கத்தால் உயர்த்தப்படும் அகவிலை நிவாரண உதவித்தொகை ஓய்வூதியத் தொகைக்கும் பொருந்தும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் பெற வழிவகை உள்ளது. ஓபிஎஸ் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

தேசிய ஓய்வூதிய அமைப்பு என்றால் என்ன? (What is National Pension System):
தேசிய ஓய்வூதிய முறை (National Pension Scheme) ஜனவரி 1, 2004 முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக அமல்படுத்தப்பட்டது. NPS என்பது வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இதன் பொருள் ஊழியர்கள் தங்கள் சேவையின் போது ஒரு நிலையான தொகையை வழங்குகிறார்கள். ஓய்வுக்குப் பிறகு, அவர்கள் செய்த முதலீட்டின் அடிப்படையில் ஊழியர்கள் ஓய்வூதியத்தைப் (Pension) பெறுகிறார்கள். இருப்பினும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட இது குறைவான பலனைத் தருவதாகக் கருதப்படுகிறது. இது ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு வழக்கமான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது. கடந்த சில நாட்களாகவே, பல மாநிலங்களில் உள்ள ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கர்நாடகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் அவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஓய்வூதியம் கிடைக்காத என்று அவர்கள் அஞ்சினர். இதையடுத்து 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள், தங்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று உறுதியளித்தது. இந்த நிலையில் கர்நாடக அரசு தற்போது 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | RBI New Rules: வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை: ரிசர்வ் வங்கியின் புதிய விதி இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News