Gold Price Today, 08 February 2021: தங்கம் விலை குறைவு: இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold Price Today, 08 February 2021: நீங்கள் தங்கத்தை வாங்க திட்டமிட்டால், இந்த நேரத்தில் விலை மிகக் குறைவாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 8, 2021, 12:41 PM IST
Gold Price Today, 08 February 2021: தங்கம் விலை குறைவு: இன்றைய விலை நிலவரம் என்ன? title=

புதுடெல்லி: Gold, Silver Rate Update, 08 February 2021: தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற தாழ்வு காணப்படுகிறது, மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையும், முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இந்நிலையில் தங்கம் மீது தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman), பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் (Union Budget) தாக்கல் செய்தார். அதில்., தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், அது இந்திய சந்தையில் தங்கத்தின் விலையில் எதிரொலித்துள்ளது.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை (Gold Priceகுறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ. 4458 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.88 குறைந்து ரூ.35664-க்கு விற்பனையாகிறது.

ALSO READ | Gold Price Today: தொடர்ந்து எகிறும் தங்கம் விலை.. விலை குறையும் வாய்ப்பு உள்ளதா..!!!

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் (Gold) விலை 8 கிராம் 38736-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 30 பைசா குறைந்து 73.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை நிலவரம்:-

தங்கம் விலை பட்டியல்: 22 கேரட்
1 கிராம் 4,458
8 கிராம் 35,664

தங்கம் விலை பட்டியல்: 24 கேரட் 
1 கிராம் 4,863
8 கிராம் 38,904

வெள்ளி விலை பட்டியல்:
1 கிராம் 73.10
1 கிலோ 73,100

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News