இலவச விமான டிக்கெட்: டிசம்பர் மாதத்தில் பயணம் செய்யும் திட்டம் உண்டா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அதுவும் கிரெடிட் கார்டு வாங்க நினைப்பவரா நீங்கள்? அப்படி என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுக்கும் செய்தி இது. தற்போது பயணப் பலன்களை வழங்கும் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். சில வெகுமதி கிரெடிட் கார்டுகள் உள்ளன, அதில் நீங்கள் சம்பாதித்த ரிவார்டு புள்ளிகளை ஏர் மைல்களாக மாற்றுவதன் மூலம் அல்லது ஹோட்டல் அல்லது விமான முன்பதிவுகளை செய்து பலன்களைப் பெறலாம். 2022 நவம்பர் 17 முதல் இந்தச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
Yes First Preferred Credit Card உங்களுக்கு மிகப்பெரிய பலன்களை வழங்குகிறது. இதில், 10 ரிவார்டு புள்ளிகளை ஒரு இன்டர் மைல் அல்லது கிளப் விஸ்டாரா புள்ளியாக மாற்றலாம். இந்த கிரெடிட் கார்டின் ஆண்டு கட்டணம் ரூ.999. இதன் கீழ், YesRewardz மூலம் விமானம் அல்லது ஹோட்டல் முன்பதிவுக்கான வெகுமதி புள்ளிகளைப் பெறலாம்.
இது முதன்மை அட்டைதாரருக்கு காம்பிமெண்டரி முன்னுரிமை பாஸ் உறுப்பினர் சலுகையை வழங்குகிறது. இது மூன்று மாதங்களில் 2 உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் பயன்படுத்திக் கொள்ளும் சலுகையையும் வழங்குகிறது.
மேலும் படிக்க: காங்கிரஸின் 100 தலை ராவணன் கமெண்டுக்கு பதிலடி கொடுக்கும் பிரதமர் மோடி
HDFC Diners Club Privilege கிரெடிட் கார்டு, 1 ரிவார்டு பாயிண்ட்டை 0.50 ஏர் மைல்களாக மாற்றுகிறது. இந்த கிரெடிட் கார்டின் ஆண்டு கட்டணம் ரூ.2500. SmartBuy மூலம் விமானம் அல்லது ஹோட்டல் முன்பதிவுக்கான வெகுமதி புள்ளிகளைப் பெறலாம். இதில், உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 12 விமான நிலைய லவுஞ்ச் பயன்படுத்தும் வசதிகளைப் பெறுவீர்கள்.
இந்தத் திட்டத்தின் கீழ், சில்லறை விற்பனையில் செலவழிக்கும் ஒவ்வொரு ரூ.150க்கும் 4 ரிவார்டு புள்ளிகளையும் SmartBuy மூலம் செலவழித்தால் 10X ரிவார்டு புள்ளிகளையும் பெறலாம்.
சிட்டி பிரீமியர் மைல்ஸ் கிரெடிட் கார்டு, இது உங்களுக்கு பெரும் வசதியை அளிக்கிறது. இதைப் பயன்படுத்தி விமானப் பரிவர்த்தனைகளுக்குச் செலவழிக்கும் 100 ரூபாய்க்கு 10 ஏர் மைல்களையப் பெறலாம். அதேபோல வேறு செலவுகள் செய்யும்போது, 100 ரூபாய் செலவுக்கு 4 ஏர் மைல்களையும் பெறலாம். இந்த கிரெடிட் கார்டின் ஆண்டு கட்டணம் ரூ.3000.
இந்தத் திட்டத்தின் கீழ், உங்கள் கார்டு வழங்கப்பட்ட 60 நாட்களுக்குள் ரூ.1,000 செலவழித்தால் வெல்கம் பெனிபிட் என்ற பெயரில் 10,000 ஏர் மைல்களைப் பெறுவீர்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த கிரெடிட் கார்டை புதுப்பிக்கும்போது 3,000 ஏர் மைல்களை சம்பாதிக்கலாம்.
மேலும் படிக்க | e₹-R: இந்தியாவின் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சி டிஜிட்டல் ரூபாய் புழக்கத்தில்
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மெம்பர்ஷிப் ரிவார்ட்ஸ் கிரெடிட் கார்டு: இந்த கிரெடிட் கார்ட், ரிவார்டு பாயிண்ட்களை ஏர் மைல்கள் அல்லது லாயல்டி பாயிண்ட்களுக்கு மாற்றும் அற்புதமான வசதியை வழங்குகிறது. இதில், தாஜ் ஹோட்டல்கள், மைந்த்ரா, பிக் பாஸ்கெட் மற்றும் பிற சிறந்த பிராண்டுகளின் வவுச்சர்களுக்கு எதிராக, புள்ளிகளைப் பெற முடியும்.
அதன் திட்டத்தின் கீழ், ஒரு வருடத்திற்கான வருடாந்திர உறுப்பினர் தொகையை செலுத்துவதன் மூலம் 5,000 உறுப்பினர் வெகுமதி புள்ளிகளைப் பெறலாம். இந்த சிறப்பு அட்டையில், ஒரு வருடத்தில் ரூ.1.50 லட்சம் அல்லது அதற்கு மேல் செலவழித்தால், வருடாந்திர கட்டணத் தள்ளுபடியின் பலனைப் பெறலாம்.
ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கிரெடிட் கார்ட்: ஏர் இந்தியா போர்ட்டல்கள் மற்றும் ஆப் மூலம் முன்பதிவு செய்யும் ஏர் இந்தியா டிக்கெட்டுகளுக்காக செலவழிக்கும் ஒவ்வொரு ரூ.100க்கும் 30 வெகுமதி புள்ளிகள் கிடைக்கும். இது தவிர, கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஏர் இந்தியா ’ப்ரீக்வெண்ட் ஃப்ளையர்’ திட்டத்தின் சலுகையும் வழங்கப்படுகிறது.
இதில், 600 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் ஓய்வு அறை அணுகல் வசதி மற்றும் காம்பிமெண்ட்ரி முன்னுரிமை பாஸ் உறுப்பினர் சேர்க்கையும் கிடைக்குக்ம். இந்த கிரெடிட் கார்டின் ஆண்டுக் கட்டணம் ரூ. 4999 ஆகும், இது உங்கள் வெகுமதி புள்ளிகளை ஏர் இந்தியா மைல்களாக மாற்றலாம். இது குறித்த மேலதிக தகவலுக்கு, நீங்கள் வலைத்தளத்தைப் பார்த்து பயன் பெறுங்கள்.
மேலும் படிக்க | ஒருத்தனுக்கு ஒருத்தி மட்டுமே! பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய பிரதேசம் முடிவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ