Festive Offers! நிசான் மற்றும் டாட்சன் கார்களுக்கு ரூ 1 லட்சம் வரை தள்ளுபடி

நிசான் இந்தியா மற்றும் டாட்சன் இந்தியா கேஷ்பேக் தள்ளுபடிகள் மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 10, 2021, 08:59 PM IST
Festive Offers! நிசான் மற்றும் டாட்சன் கார்களுக்கு ரூ 1 லட்சம் வரை தள்ளுபடி  title=

புதுடெல்லி: பண்டிகைக்கால சீசனின் தொடக்கத்தில் இருந்து, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர நல்ல சலுகைகளை வழங்கி வருகின்றன. அதில், நிசான் இந்தியா மற்றும் அதன் பங்குதாரர் நிறுவனமான டாட்சன் இந்தியா தங்கள் கார்கள் விற்பனையில் கேஷ்பேக் தள்ளுபடிகள் மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. 

நிசான் இந்தியா தனது சமீபத்திய கார் நிசான் மேக்னைட் எஸ்யூவியை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நிசான் இந்தியா எந்த காரில் எவ்வளவு தள்ளுபடியை வழங்குகிறது என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நிசான் தனது எஸ்யூவியை 2 எஞ்சின் ஆப்ஷன்களுடன் சந்தையில் விற்பனை செய்கிறது. 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் வேரியண்ட்டை வாங்கும் போது 15,000 ரூபாய் ரொக்க தள்ளுபடி மற்றும் 70,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குகிறது.

இது தவிர, KICKS இன் டர்போ-பெட்ரோல் மாடல்களுக்கு 5,000 ரூபாய் வரை ஆன்லைன் முன்பதிவு தள்ளுபடி கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பெருநிறுவனங்களுக்கு கொடுக்கும் தள்ளுபடியான கார்பரேட் டிஸ்கவுண்ட் 10,000 ரூபாய் கிடைக்கும். அதோடு, Nissan KICKS வாங்குவதற்கு 7.99% என்ற சிறப்பு வட்டி விகிதத்தில் கடனும் கிடைக்கும்.

Also Read | சூரிய ஒளியால் சார்ஜ் ஆகும் மின்சார கார்கள்!!

நிறுவனம் டர்போ-பெட்ரோல் வேரியண்ட்டை 12.10 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்கிறது.

மறுபுறம், இந்த காரின் 1.5 லிட்டர் இயற்கையான ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் வகையில், நிசான் நிறுவனம் 10,000 ரூபாய் ரொக்க தள்ளுபடி மற்றும் 20,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குகிறது. இது தவிர, 5,000 ரூபாய் ஆன்லைன் முன்பதிவு தள்ளுபடியையும் பெறலாம். 

இதனுடன், இந்த வேரியண்ட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் 10,000 கிடைக்கும்.  அதேபோல நிசான் கிக்ஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் வண்டியை வாங்குவதற்கு 7.99% என்ற சிறப்பு வட்டி விகிதத்தில் கடனும் கிடைக்கும் இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இரண்டு மாடல்களில் கிடைக்கிறது, ஆரம்ப விலை ரூ .9.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

Also Read | Ola Electric மின்சார ஸ்கூட்டர்: மீண்டும் தொடங்கும் முன்பதிவு

Datsun Go+ 
நிசானின் துணை நிறுவனமான டாட்சன் இந்தியாவின் 7 இருக்கைகள் கொண்ட எம்பிவி MPV Datsun Go+ காரை 40,000 ரூபாய் தள்ளுபடியில் விற்பனை செய்கிறது. இதில் 20,000 ரூபாய் ரொக்க தள்ளுபடி மற்றும் 20,000 ரூபாய் எக்ஸ்சேஞ் போனஸ் ஆகியவை அடங்கும். டாட்சன் கோ+ வழங்கும் பண்டிகைக்கால சிறப்பு தள்ளுபடி இதுதான். 

Datsun Redi-Go 
டாட்சனின் பிரபலமான கார் Datsun Redi-Go வாங்கும்போது, வாடிக்கையாளர்கள் மொத்தமாக 40,000 ரூபாய் வரை பலன் பெறுகிறார்கள். நிறுவனம் இந்த காருக்கு 20,000 ரூபாய் ரொக்க தள்ளுபடியை வழங்குகிறது. இது தவிர, இந்த காரில் 15,000 பரிவர்த்தனை போனஸ் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ப்பரேட் நன்மை 5,000 ரூபாய் வரை கிடைக்கும்.  

Datsun Go 
Datsun Go வாகனம், 5 இருக்கைகள் கொண்ட ஹேட்ச்பேக் (hatchback) கார். இந்த கார் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ .40,000 வரை பலன் பெறுவார்கள். இதில் ரூ .20,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ .20,000 பரிவர்த்தனை போனஸ் ஆகியவை அடங்கும்.   

Also Read | Mahindra XUV 700 கசிந்த தகவல்கள்: அனைத்து பெட்ரோல், டீசல் வகைகளின் ஒப்பீடு இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News