FB-Jio ஒப்பந்தம்: மீண்டும் ஆசியா கண்டத்தின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார் அம்பானி

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, முகேஷ் அம்பானியின் சொத்து சுமார் 4 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் இப்போது அவரது மொத்த சொத்துக்கள் சுமார் 49 பில்லியன் டாலர்களாக உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 22, 2020, 11:06 PM IST
  • முகேஷ் அம்பானி பேஸ்புக்-ஜியோ ஒப்பந்தத்திற்குப் பிறகு மீண்டும் ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
  • முகேஷ் அம்பானியின் சொத்து 4 பில்லியன் டாலர் அதிகரித்து, மொத்தம் 49 பில்லியன் டாலர் ஆக உள்ளது.
  • அலிபாபாவின் ஜாக் மாவின் சொத்தை விட அம்பானியின் சொத்து 3 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
  • ஜியோவின்10% பங்குகளை பேஸ்புக் 44 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது.
FB-Jio ஒப்பந்தம்: மீண்டும் ஆசியா கண்டத்தின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார் அம்பானி title=

புது தில்லி: பேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ((Facebook-Jio deal)) இடையே சுமார் 44 ஆயிரம் கோடி ஒப்பந்தத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் பங்குகள் இன்று சுமார் 10.30 சதவீதம் உயர்ந்தன. மீண்டும் முகேஷ் அம்பானி ஆசியாவின் பணக்காரர் (Mukesh Ambani became Asia richest person) ஆனார். சமீபத்தில், சீன இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா முதலிடம் பிடித்தார். இந்த ஒப்பந்தம் மூலம் மீண்டும் முகேஷ் அம்பானி, இந்த இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

அம்பானிக்கு 49 பில்லியன் டாலர் சொத்துக்கள் உள்ளன:
இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, முகேஷ் அம்பானியின் சொத்து சுமார் 4 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் இப்போது அவரது மொத்த சொத்துக்கள் சுமார் 49 பில்லியன் டாலர்களாக உள்ளன. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, அம்பானியின் சொத்து ஜாக் மாவை விட சுமார் 3 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

செவ்வாயன்று அம்பானியின் சொத்து 14 பில்லியன் டாலர் குறைந்துள்ளது:
ரிலையன்ஸ் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் கொண்டுள்ளது. கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால், அவர்கள் தொடர்ந்து சொத்து மதிப்பை இழந்து வருகின்றனர். செவ்வாயன்று ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி, அவரது சொத்து சுமார் 14 பில்லியன் டாலர் குறைந்து விட்டது. அதேநேரத்தில் ஜாக் மா கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளார்.

Trending News