EPFO Rule Change: பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். பிஎஃப் உறுப்பினர்களுக்கு பயன்படும் சில முக்கிய விவரங்களை இங்கே காணலாம். இபிஎஃப்ஓ உறுப்பினர்களின் நன்மைக்காகவும், வசதிகளை அதிகரிக்கவும், அவ்வப்போது புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது, பழைய விதிகளில் மாற்றங்களை செய்கிறது. இவற்றை பற்றிய புரிதல் ஊழியர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
EPF Withdrawal
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) எதிர்காலத்திற்கான ஒரு ஒரு பெரிய நிதியை உருவாக்குவதற்கான சிறந்த வழியாக காணப்படுகின்றது. EPFO திட்டத்தில் சேர்க்கப்படும் தொகை பணி ஓய்வுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது. ஆனால், பணி ஓய்வுக்கு பிறகுதான் இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுக்க முடியும் என்பதல்ல. சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் நாம் பணி ஓய்வுக்கு முன்னரும் பகுதியளவு தொகையை எடுக்கலாம்.
EPFO Claim Process
EPFO சமீபத்தில் இபிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்வதற்கான செயல்முறையின் விதிகளை மாற்றியுள்ளது. இப்போது பிஎஃப் க்ளெய்ம் செய்யும் செயல்முறை எளிதாகிவிட்டது. ஆம், இப்போது க்ளைம் செய்ய ஆதார் தேவையில்லை. இருப்பினும், இந்த விதிகள் சில குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. விதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் எந்த உறுப்பினர்களுக்கு பொருந்தும் என்பதை இங்கே காணலாம்.
EPFO Rule Change: எந்த ஊழியர்கள் பயனடைவார்கள்?
- EPFO இன் புதிய விதிகளின்படி, ஆதார் அட்டை இல்லாத ஊழியர்களுக்கு அதன் பலன் கிடைக்கும்.
- சில குறிப்பிட்ட வகை ஊழியர்களுக்கு யூனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) ஆதாருடன் இணைக்கும் தேவையை தளர்த்துவதற்கான முக்கியமான முடிவை EPFO எடுத்துள்ளது.
- EPFO பதிவு செய்யப்பட்ட சர்வதேச ஊழியர்களுக்கு விலக்கு அளித்துள்ளது.
- இவர்கள் இந்தியாவில் சில காலம் பணியாற்றி, பின்னர் தங்கள் நாட்டுக்கு சென்ற ஊழியர்கள்.
- இவர்கள் இந்திய குடிமக்களாக இருக்க மாட்டார்கள், ஆகையால் இவர்களிடம் ஆதார் அட்டை இருக்காது.
- ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் புதிய விதியின்படி, நேபாளம் மற்றும் பூடான் குடிமக்கள் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்ற முன்னாள் இந்திய குடிமக்களும் இந்த விதியின் கீழ் பலன்களைப் பெறுவார்கள்.
இந்த ஆவணங்களை பயன்படுத்தலாம்
இப்படிப்பட்ட இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Subscribers) ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிற ஆவணங்கள் மூலம் பிஎஃப் க்ளெய்ம்களை செட்டில் செய்ய அனுமதி அளித்துள்ளது. இபிஎஃப்ஓ -வில் பதிவு செய்யப்பட்ட சர்வதேச ஊழியர்கள் பல ஆவணங்கள் மூலம் பி.எஃப் தொகையை கோரலாம். அவை,
- பாஸ்போர்ட் (Passport),
- குடிமகன் சான்றிதழ் (Cetizen Certificate) அல்லது
- ஏதேனும் அதிகாரப்பூர்வ அடையாளச் சான்று (Official ID Proof).
இது தவிர, பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு அறிக்கை மூலமாகவும் சரிபார்ப்பு செய்யப்படும். 5 லட்சத்துக்கும் அதிகமான க்ளைம்களுக்கு, இபிஎஃப் உறுப்பினர் (EPF Members) வேலை வழங்குநரிடமிருந்து வெரிஃபிகேஷனைப் பெற வேண்டும்.
EPFO Claim: இதற்கான விதிகள் என்ன?
EPFO இன் கிளைம் விதிகளின்படி, அனைத்து கோரிக்கைகளும் முதலில் அதிகாரியால் கவனமாக ஆராயப்படும். ஒவ்வொரு வழக்கின் விசாரணைக்கும், இ-அலுவலக கோப்பு ஒப்புதல், அதற்கான பொறுப்பு அதிகாரி, அதாவது ஆஃபிசர்-இன்-சார்ஜ் (OIC) மூலம் அங்கீகரிக்கப்படும். இந்த ஒப்புதலுக்குப் பிறகுதான் க்ளெய்ம் செயல்முறை முன்னோக்கி கொண்டு செல்லப்படும். EPFO ஊழியர்களுக்கு எப்போதும் ஒரே UAN எண்ணை வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது. இது கடந்த கால சேவைப் பதிவுகளைக் கண்காணிப்பதையும் க்ளெய்ம்களைப் பெறுவதையும் எளிதாக்குகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ