EPFO New Rule: ஏப்ரல் 1, அதாவது நேற்று முதல் இந்தியாவில் புதிய நிதியாண்டு தொடங்கிவிட்டது. புதிய நிதியாண்டில் நிதி, சேமிப்பு என பல திட்டங்களில் பல மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 1 முதல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO முக்கியமான மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய விதியின்படி, ஒரு நபர் தனது வேலையை மாற்றும்போது, அவரது பழைய வருங்கால வைப்பு நிதி (EPF Balance) இருப்பு தானாகவே புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும். இதன் மூலம் இபிஎஃப் கணக்கு (EPF Account) வைத்திருப்பவர்கள் ஒரு புதிய நிறுவனத்தில் சேரும்போது கைமுறையாக பிஎஃப் பரிமாற்றங்களைக் கோருவதற்கான தேவை இருக்காது. இது சம்பள வர்க்கத்திற்கு ஒரு பெரிய நிவாரணமாக வந்துள்ளது.
முன்னதாக, யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் (UAN) இருந்தாலும், தனிநபர்கள் பிஎஃப் மாற்றங்களைக் (PF Transfer) கோருவதில் சிரமப்பட வேண்டியிருந்தது. இனி அந்த சிரமங்கள் இருக்காது. கடந்த காலத்தில் கணக்கை அடுத்த நிறுவனத்திற்கு மாற்றுவது ஒரு சிக்கலான செயல்முறையாக இருந்தது என்றும், தற்போது அந்த சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
இனி இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) பிஎஃப் கணக்கை நிர்வகிப்பதற்கான பயம் இல்லாமல் புதிய தொழில்முறை வாய்ப்புகளை ஆராயலாம். பணியாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியைக் கண்காணிப்பது பற்றி இனி கவலைப்பட வேண்டியதில்லை.
EPFO இன் இந்த சீர்திருத்தத்தின் மூலம், பணியாளர்கள் தாங்கள் சேமித்த நிதியை எளிதாக அணுகும் வாய்ப்பை பெறுகிறார்கள். மேலும், ஓய்வூதியப் பயணத்தை இது பாதுகாப்பானதாகவும் நிம்மதியானதாகவும் மாற்றுகின்றது.
மேலும் படிக்க | இப்போ இதுதான் ட்ரெண்ட்! ‘இந்த’ தொழில் செய்தால் கூடிய விரைவில் லட்சாதிபதி ஆகலாம்..
யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் என்றால் என்ன? (What is Universal Account Number)
யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் (Universal Account Number) ஒரு பணியாளருக்கு, வெவ்வேறு நிறுவனங்களால் வழங்கப்படும் பல உறுப்பினர் ஐடிகளுக்கான மையப்படுத்தப்பட்ட தளமாக செயல்படுகிறது. ஒரு உறுப்பினரிடம் உள்ள பல EPF கணக்குகளை (உறுப்பினர் ஐடிகள்) இணைக்க இது உதவுகிறது. UAN பல வசதிகளை அளிக்கின்றது.
- புதுப்பிக்கப்பட்ட UAN கார்டு
- அனைத்து பரிமாற்ற விவரங்களுடன் புதுப்பிக்கப்பட்ட PF பாஸ்புக்
- உறுப்பினர்களின் தற்போதைய PF ஐடியுடன் முந்தைய PF ஐடிகளை இணைக்கும் திறன்
- பங்களிப்புகளின் வரவு குறித்த மாதாந்திர SMS அறிவிப்புகள்
உள்ளிட்ட பல்வேறு சேவைகள் UAN மூலம் வழங்கப்படுகின்றன.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
அலுவலக பணிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை பணியாளர் வைப்பு நிதியில் பங்களிக்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பணியாளர்களின் கணக்கில் மாதா மாதம் டெபாசிட செய்கின்றது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஊழியர்களின் இபிஎஃப் கணக்குகளை நிர்வகிக்கின்றது. பணியாளர்கள் பங்களிக்கும் தொகை முழுவதும் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் அதே வேளையில், நிறுவனத்தின் பங்களிப்பில் ஒரு பகுதி இபிஎஃப் கணக்கிலும் (EPF Account), மற்றொரு பகுதி ஊழியர் வருங்கால வைப்பு அமைப்பிலும் (EPS) செல்கிறது.
மேலும் படிக்க | New Rules April 2024: இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்! முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ