EPFO: உங்கள் பிஎஃப் எண்ணில் மறைந்துள்ள விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி? விவரம் இதோ

EPFO: பிஎஃப் கணக்கு எண்ணில் இலக்கங்களுடன் சில எழுத்துக்களும் உள்ளன. பிஎஃப் கணக்கு எண் மற்றும் அதன் குறியீட்டு விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 21, 2022, 06:25 PM IST
  • இபிஎஃப்ஓ ​​சந்தாதாரர்களுக்கு மிகவும் பயனுள்ள செய்தி உள்ளது.
  • பிஎஃப் கணக்கு எண் என்றால் என்ன?
  • ஒவ்வொரு பணியாளருக்கும் UAN இருக்குமா?
EPFO: உங்கள் பிஎஃப் எண்ணில் மறைந்துள்ள விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி? விவரம் இதோ title=

இபிஎஃப்ஓ சமீபத்திய செய்தி: இபிஎஃப்ஓ ​​சந்தாதாரர்களுக்கு மிகவும் பயனுள்ள செய்தி உள்ளது. பல்வேறு பணிகளில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் தனித்தனி பிஎஃப் எண் (PF Number) உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு பிஎஃப் உறுப்பினரும் தனது பிஎஃப் கணக்கில் பங்களிப்பைச் சரிபார்க்கலாம். நீங்கள் பெறும் பிஎஃப் எண்ணில் பல தகவல்கள் மறைந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? பிஎஃப் கணக்கு எண்ணில் இலக்கங்களுடன் சில எழுத்துக்களும் உள்ளன. பிஎஃப் கணக்கு எண் மற்றும் அதன் குறியீட்டு விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

பிஎஃப் கணக்கு எண் என்றால் என்ன?

பிஎஃப் கணக்கு எண் எண்ணெழுத்து எண் (ஆல்ஃபாநியூமெரிக் நம்பர்) என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கில எழுத்துக்கள் மற்றும் இலக்கங்கள் இரண்டிலும் சில சிறப்புத் தகவல்களைக் கொண்டுள்ளது. இந்த எண்ணில் மாநிலம், பிராந்திய அலுவலகம், நிறுவனம் மற்றும் பிஎஃப் உறுப்பினர் குறியீடு ஆகிய விவரங்கள் உள்ளன.

ஆல்ஃபாநியூமெரிக் நம்பர் என்றால் என்ன?

ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்: 

XX - மாநிலத்திற்கான குறியீடு
XXX - பிராந்தியத்திற்கான குறியீடு
1234567 – ஸ்தாபனக் குறியீடு
XX1 - நீட்டிப்பு (ஏதேனும் இருந்தால்)
7654321 – கணக்கு எண்

மேலும் படிக்க | EPFO கணக்கில் KYC அப்டேட் செய்வது எப்படி? செய்யாவிட்டால் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்

ஒவ்வொரு பணியாளருக்கும் UAN இருக்குமா? 

இபிஎஃப்ஓ இன் ஒவ்வொரு உறுப்பினருக்கும் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) உள்ளது. ஒவ்வொரு பணியாளருக்கும் இது வேறுபட்டிருக்கும். ஊழியர் நிறுவனத்தை மாற்றும்போது வெவ்வேறு பிஎஃப் கணக்குகள் உருவாக்கப்படும். ஆனால், UAN கணக்கு ஒன்று மட்டுமே இருக்கும். ஒரு UAN இல், உங்களின் வெவ்வேறு பிஎஃப் விவரங்களைக் காண முடியும். 

எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம்

- இபிஎஃப்ஓ சந்தாதாரர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் மற்றும் மிஸ்டு கால் மூலம் தங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்கலாம். 

- இதற்கு, செய்தி பெட்டியில் EPFOHO UAN என டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். 

- உங்கள் இபிஎஃப் இருப்பு உங்கள் மொபைலில் தெரியும். 

- இது தவிர, பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு காலும் கொடுக்கலாம்.

மேலும் படிக்க | EPFO சூப்பர் செய்தி: சுகாதாரம், மகப்பேறு ஆகிய துறைகளில் விரைவில் விரிவாக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News