EPF Interest: கணக்கில் வட்டி வந்துவிட்டதா? ஆன்லைன், ஆஃப்லைன் முறையில் எப்படி செக் செய்வது?

EPF Interest: பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF), சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான கட்டாய சேமிப்பு மற்றும் ஓய்வு திட்டமாகும். EPF விதிகளின்படி, ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 12 சதவீதத்தை ஒவ்வொரு மாதமும் இந்த நிதிக்கு வழங்க வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 27, 2024, 09:14 AM IST
  • ஊழியர்களின் கணக்கில் வட்டி எப்போது போடப்படும்?
  • ஆஃப்லைன் முறையில் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?
  • ஆன்லைன் முறையில் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?
EPF Interest: கணக்கில் வட்டி வந்துவிட்டதா? ஆன்லைன், ஆஃப்லைன் முறையில் எப்படி செக் செய்வது? title=

EPF Interest: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. பெரும்பாலும் சம்பள வர்க்கத்தினர் அனைவரும் இபிஎஃப் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பிஎஃப் தொகையானது ஊழியர்களின் பணி ஓய்வுக்கு  பிறகான காலத்தின் முக்கிய சேமிப்பாக பார்க்கப்படுகின்றது. இந்த கணக்கில் ஊழியர்களும் நிறுவனங்களும் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள். 

சம்பளம் பெறும் ஊழியர்கள் 2023-24 நிதியாண்டிற்கான (FY24) தங்கள் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிப்ரவரியில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தியது. பிஎஃப் தொகைக்கான வட்டி மாதந்தோறும் கணக்கிடப்பட்டு, நிதியாண்டின் இறுதியில் பங்களிப்பு இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. 2023 நிதியாண்டுக்கான வட்டி மார்ச் 2024க்குள் 281.7 மில்லியன் EPFO ​​உறுப்பினர்களின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF), சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான கட்டாய சேமிப்பு மற்றும் ஓய்வு திட்டமாகும். EPF விதிகளின்படி, ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 12 சதவீதத்தை ஒவ்வொரு மாதமும் இந்த நிதிக்கு வழங்க வேண்டும். பணியாளர்களின் PF கணக்குகளில் நிறுவனங்களின் பங்களிப்பும் செல்கிறது. EPF வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் EPFO ​​இன் மத்திய அறங்காவலர் வாரியத்தால் ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.

ஊழியர்களின் கணக்கில் வட்டி எப்போது போடப்படும்?

வாடிக்கையாளர்களின் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படுவது குறித்து பல கேள்விகள் பிஎஃப் உறுப்பினர்களின் மனதில் உள்ளது. வட்டி எப்போது வரவு வைக்கப்படும்? இது குறித்து இபிஎஃப்ஓ சமீபத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளது. இதற்கான செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது என்றும் விரைவில் ஊழியர்களின் இபிஎஃப் வட்டித்தொகை (EPF Interest) விரைவில் அவர்களின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர்கள் தங்கள் கணக்கில் பிஎஃப் வட்டித் தொகை டெபாசிட் செய்யப்படு விட்டதா என்பதை வீட்டில் இருந்தபடியே எளிதாக அறிந்துகொள்ளலாம். இதை ஆன்லைன் முறையிலும் ஆஃப்லைன் முறையிலும் தெரிந்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | வெயில் சீசனுக்கு ‘இந்த’ தொழில் செய்தால் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! எது தெரியுமா?

ஆஃப்லைன் முறையில் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?

பணியாளர்கள் தங்கள் UAN உடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் (Missed Call) கொடுத்து தங்கள் பிஎஃப் இருப்பை தெரிந்துகொள்ளலாம். இதன் பிறகு EPF இருப்பு விவரங்களைக் காட்டும் SMS அனுப்பப்படும். இதன் மூலம் இஎஃப் இருப்பை தெரிந்துகொள்ளலாம். அல்லது EPFOHO UAN ENG என்ற வடிவத்தில் 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

ஆன்லைன் முறையில் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?

பிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) EPFO ​​உறுப்பினர் பாஸ்புக் போர்ட்டலுக்கு (EPFO Portal) சென்று பிஎஃப் இருப்பை தெரிந்துகோள்ளலாம். இதற்கு UAN கொண்டு லாக் இன் செய்து கடவுச்சொல்லை உள்ளிட்டு, PF கணக்கைத் தேர்ந்தெடுத்து, பணியாளர்கள் தங்கள் தற்போதைய இருப்பு மற்றும் பரிவர்த்தனை வரலாற்றைக் காண 'PF Passbook View'  என்பதைத் தேர்ந்தெடுத்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இது தவிர, உமங் செயலி (UMANG App) மூலமாகவும் இதை அறியலாம். இருப்பை சரிபார்க்க முதலில் உமங் செயலியில் லாக் இன் செய்ய வேண்டும். அடுத்து View Passbook என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு UAN எண்ணை உள்ளிடவும். உங்கள் மொபைலில் OTP வரும், அதை உள்ளிடவும். அதன் பிறகு, இ-பாஸ்புக்கைக் காண உறுப்பினர் ஐடியைக் கிளிக் செய்ய வேண்டும். 

மேலும் படிக்க | மொபைலில் E-Pancard ஈஸியா எப்படி டவுன்லோடு செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News