VRS திட்டத்தை எதிர்த்து BSNL ஊழியர்கள் உண்ணாவிரதம்...

பொது துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) ஊழியர்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளனர். 

Written by - Mukesh M | Last Updated : Nov 26, 2019, 10:26 AM IST
  • (VRS) எடுக்க நிர்பந்திக்கப்படுவதாக குற்றம் சாட்டி, BSNL ஊழியர்கள் நாடு முழுவதிலுமிருந்து வேலைநிறுத்தம் செய்யுமாறு ஊழியர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • BSNL ஊழியர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் உண்ணாவிரத அழைப்பை ஏற்று உண்ணாவிரதத்தில் கலந்துக்கொண்டதாக தெரிகிறது.
  • சமீபத்தில் MTNL உடன் இணைவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப் பிறகு தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை BSNL அறிவித்தது.
VRS திட்டத்தை எதிர்த்து BSNL ஊழியர்கள் உண்ணாவிரதம்... title=

பொது துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) ஊழியர்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளனர். 

ஊழியர்களை மிரட்டி தன்னார்வ ஓய்வூதியம் (VRS) எடுக்க நிர்பந்திக்கப்படுவதாக குற்றம் சாட்டி, நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து BSNL ஊழியர்கள் நாடு முழுவதிலுமிருந்து வேலைநிறுத்தம் செய்யுமாறு ஊழியர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

BSNL ஊழியர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் உண்ணாவிரத அழைப்பை ஏற்று உண்ணாவிரதத்தில் கலந்துக்கொண்டதாக தெரிகிறது. ஓய்வூதிய வயதை 58 ஆண்டுகளாக குறைக்க நிறுவன நிர்வாகம் ஊழியர்களை அச்சுறுத்துவதாகவும், பல ஊழியர்கள் VRS எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு. 

பாரத் சஞ்சர் நிகம் லிமிடெட்-ன் அகில இந்திய தொழிற்சங்கங்கள் (AUAB) கன்வீனர் பி அபிமன்யு ஊடகங்களுக்கு இதுகுறித்து தெரிவிக்கையில்.,  VRS எடுக்காத ஊழியர்கள் வெகு தொலைவில் மாற்றப்படுகிறார்கள். 'நாங்கள் VRS-ஐ எதிர்க்கவில்லை. இதை விரும்புவோர், அது தங்களுக்கு நன்மை பயக்கும் என்று நினைப்பவர்கள் அதைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் கீழ் மட்ட ஊழியர்களுக்கு இது பயனளிக்காது, அதே நேரத்தில் அவர்கள் VRS எடுக்கவோ அல்லது 58 வயது ஓய்வூதிய வயதை ஏற்கவோ கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது வலுக்கட்டாயமாக சேவை செய்யும் திட்டம்." என தெரிவித்தார்.

சமீபத்தில் MTNL உடன் இணைவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப் பிறகு தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை BSNL அறிவித்தது. இந்த VRS சலுகை அறிவிப்பு வரும் டிசம்பர் 3 வரை செல்லுபடியாகும் எனவும், இதன் மூலம் சுமார் ரூ .7,000 கோடியை ஊதிய மசோதாவில் சேமிக்க இயலும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

VRS தேர்வுசெய்யும் ஊழியர்களுக்கு, நிறைவு செய்யப்பட்ட ஒவ்வொரு வருடத்திற்கும் 35 நாட்கள் சம்பளமும், ஒவ்வொரு ஆண்டும் சேவைக்கு 25 நாட்கள் சம்பளமும் அளிக்கப்படும் என BSNL தெரிவித்திருந்தது. ஆரம்பத்தில் BSNL-ன் இந்த VRS திட்டத்தினை 70,000-80,000 ஊழியர்கள் தேர்வு செய்வார்கள் என்று பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) எதிர்பார்த்தது. ஆனால் நிறுவனத்தின் முடிவுக்கு மாறாக இத்திட்டதினை 50 %-க்கும் மேற்பட்டோர் எதிர்த்து வருகின்றனர். 

நோய்வாய்ப்பட்ட இரண்டு அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக BSNL நிறுவனத்தை மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் (MTNL) உடன் இணைக்க அக்டோபர் 23 அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ், BSNL மற்றும் MTNL புதுப்பிக்க ரூ.29,937 கோடியை ஒதுக்கவும், அத்துடன் இருநிறுவன சொத்துக்கள் ரூ.38,000 கோடி பணமாக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதனுடன், VRS சலுகைக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது, அதற்கான செலவை பட்ஜெட் ஆதரவு மூலம் மத்திய அரசு ஏற்கும் எனவும் அறிவித்துள்ளது. 20,140 கோடி ரூபாய் மூலதன உட்செலுத்துதலால் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனத்திற்கு 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்க அரசு சமீபத்ததில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஸ்பெக்ட்ரத்திற்கான GST-யை ரூ.3,674 கோடி, இந்திய பட்ஜெட் வளங்கள் மூலம் இந்திய அரசு ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளளது. கூடுதலாக, அவர்களின் மறுமலர்ச்சிக்காக ரூ.15,000 கோடி இறையாண்மை பத்திரத்தை திரட்டவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News