2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக மாற இந்தியா என்ன செய்ய வேண்டும்?

Think Change Forum Recommendations : நாட்டை 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக மாற, வரிவிதிப்பு அணுகுமுறையை மத்திய அரசு மாற்ற வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரை!!!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 14, 2024, 05:46 PM IST
  • 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக மாறுமா?
  • வரிவிதிப்பு கொள்கைகள்
  • பொருளாதார வல்லுநர்களின் பரிந்துரை
2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக மாற இந்தியா என்ன செய்ய வேண்டும்? title=

நாட்டின் பொருளாதரம் துரிதமாக வளர்ச்சியடைய, வரி விகிதங்களைக் குறைத்து அடிப்படை கட்டமைப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த பொருளாதாரமாக மாற்ற, வரி மதிப்பீடு தொடர்பான அணுகுமுறையை மாற்றி, வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என பொருளாதார் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக மாற, இந்தியா தனது வரிவிதிப்பு அணுகுமுறையை மாற்றி, வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்றும், அடிப்படை கட்டமைப்பையை விரிவுபடுத்துவதன் மூலம் வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற பரிந்துரை, தற்போது இந்தியாவில் புதிய அரசு பதவியேற்று, பட்ஜெட்டை சமர்ப்பிக்க உள்ள நிலையில் மீண்டும் முன்வைக்கப்படுகிறது.

வரி விகிதங்களைக் குறைத்தல், வரி செலுத்தும் தளத்தை விரிவுபடுத்துதல் மற்றும் இந்தியாவின் முதலீடு மற்றும் வளர்ச்சித் தேவைகளுக்கு நிதியளிப்பதற்கான வழியை உருவாக்குதல் ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

உயர் வரி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு வரி வருவாயைக் கொடுக்கவில்லை என்று சிந்தனை நடுவர் ஆராய்ச்சி (Think Change Forum) நிறுவனத்தின் கருத்தரங்கு ஒன்றில் பேசிய பொருளாதார வல்லுநர்களில் பலர் தெரிவித்தனர். எளிமையான ஜிஎஸ்டி முறையால், முறையான பொருளாதாரத்தில் இணைந்து, 'உள்ளீட்டு வரிக் கடன்' பெற்று, போட்டித்தன்மையுடன் செயல்படலாம் என்ற கருத்தும் இந்த கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டன. 

மேலும் படிக்க | இதுவும் கடன் தான்! ஆனா டக்குன்னு கிடைக்கும்... திருப்பி செலுத்துவதும் ரொம்ப சுலபம்!

கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்துகளில் சில, இந்தியா இன்னும் வளரும் பொருளாதாரங்களின் குழுவில் உள்ளது என்றும், தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதால், வருமான வரி செலுத்துவோர் குறைவாக உள்ளனர். வரி விகிதங்களை மிக அதிகமாக வைத்திருப்பதும் தவறான யோசனையாகும், ஏனெனில் இது வரி ஏய்ப்பை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்தது.

சிந்தனை மாற்ற மன்றத்தின் பொதுச் செயலாளர் ரங்கநாத் தனீர், வரி விதிப்பில் சீர்திருத்தம் என்பது காலத்தின் தேவை என்று தெரிவித்தார். வரி விகிதங்களை விரைவில் குறைத்து, வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வரி விதிப்பு

வரி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது வருமான வரி, ஜிஎஸ்டி தான். அரசாங்கத்திற்கு மக்கள் செலுத்தும் வரிகள், வருமான வரி மற்றும் ஜிஎன்ஸ்டியை விட வேறு பல உள்ளன. மாநில வரிகள், மத்திய அரசின் வரிகள், நேரடி வரிகள், மறைமுக வரிகள் என பல வடிவங்களில் வரிகளை மக்கள் செலுத்துகின்றனர்.

மேலும் படிக்க | 2 லட்சம் வேலைவாய்ப்புகள்! 4 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு! மாஸ் காட்டும் PLI scheme!

வரி வசூலிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரிகள் முதல், அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் வரி செலுத்துகின்ரனர். பொதுவாக வரிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நேரடி வரிகள் மற்றும் மறைமுக வரிகள் என்ற இரண்டுமே, அரசாங்கத்திற்கு எவ்வாறு வரி செலுத்தப்படுகிறது என்பதன் அடிப்படையில் வித்தியாசப்படுகின்றன. 
 
வரி என்றால் என்ன?
நிர்வாகச் செலவுகளுக்காக வரி என்பது ஒரு நாட்டின் அரசு, மக்களிடம் இருந்து வசூலிப்பதாகும். அரசுக்குக் கிடைக்கும் வரி வருமானமானது அதன் அனைத்து செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வருமான வரியைத் தவிர, வர்த்தகம் செய்யும் நிறுவனம் பல்வேறு வடிவங்களில் வரி செலுத்த வேண்டும்.

வருமான வரி மற்றும் செல்வ வரி ஆகியவை நேரடி வரிகள் என்றால், மறைமுக வரிகள் என்பது நுகர்வு அடிப்படையிலான வரிகளாகும், அவை பொருட்கள் அல்லது சேவைகளை வாங்கும்போதும் விற்கும்போதும் செலுத்தும் வரியாகும். பொருள்/சேவையை விற்பவரிடமிருந்து அரசாங்கம் மறைமுக வரியை வசூலிக்கிறது. அதாவது மக்கள் நேரடியாக அரசுக்கு வரி செலுத்தாமல், தாங்கள் உபயோகப்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக செய்யப்படும் செலவுகள் மூலம் செலுத்தும் வரி மறைமுக வரியாகும். விற்பனை வரி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்) போன்றவை மறைமுக வரிகளுக்கு சிறந்த உதாரணம் ஆகும். 

மேலும் படிக்க | வருங்கால வைப்பு நிதியில் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? கணக்கிடுவது சுலபம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News