2011-2018 க்கு இடையில் 2.62 கோடி புதிய வேலைகள்: பொருளாதார ஆய்வு

2020 பொருளாதார ஆய்வு அறிக்கையின் படி,  2011 மற்றும் 2018 க்கு இடையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 2.62 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன எனக் கணக்கெடுப்பு செய்யப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 31, 2020, 09:24 PM IST
2011-2018 க்கு இடையில் 2.62 கோடி புதிய வேலைகள்: பொருளாதார ஆய்வு title=

புது டெல்லி: நாட்டில் வேலைவாய்ப்பு பிரச்சினை குறித்து மோடி அரசிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில், 2011-12 முதல் 2017-18 வரையிலான நிதியாண்டுகளில் வழக்கமான ஊதியம் மற்றும் சம்பள வகுப்பில் 2.62 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனாவின் கீழ், 2019 நவம்பர் வரை 69.03 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. 2011-12 உடன் ஒப்பிடும்போது 2017-18 ஆம் ஆண்டில் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் சுமார் 8 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

மேலும் அறிக்கையில், அரசாங்கம் தரமான வேலைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதோடு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டு உள்ளது. இது தவிர, தரமான வேலைகளை உருவாக்குவதில் மத்திய அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

ஆறு ஆண்டுகளில், 2.62 கோடி புதிய வேலைகள்:
கடந்த சில ஆண்டுகளில், வழக்கமான சம்பள வேலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2011-12 உடன் ஒப்பிடும்போது 2017-18 ஆம் ஆண்டில் வழக்கமான சம்பள வேலைகள் 5% அதிகரித்து 23% ஆக உயர்ந்துள்ளன. இந்த ஆறு ஆண்டுகளில், 2.62 கோடி புதிய வேலைகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 1.21 கோடி வேலைகள் கிராமப்புறங்களிலும், 1.39 கோடி நகர்ப்புறங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு சிறப்பு கவனம்:
பொருளாதார ஆய்வு அறிக்கையில் பெண்களை மேம்படுத்துவதற்கான பல திட்டங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கி உள்ளது. பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க சிறப்பு முயற்ச்சி எடுக்கப்பட்டுள்ளது. பெண்களின் உரிமைகள் குறித்துப் பேசும்போது, ஊதியம் பெற்ற மகப்பேறு விடுப்பு 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நன்மைகளைப் பெறும் சிறப்பு திட்டங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News