Microsoft: பத்தே மாதத்தில் லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு @வேலைவாய்ப்பு

அடுத்த 10 மாதங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்புக்கான பயிற்சியை வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்தூள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 2, 2020, 02:23 AM IST
Microsoft: பத்தே மாதத்தில் லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு @வேலைவாய்ப்பு title=

புதுடெல்லி: அடுத்த 10 மாதங்களில் இந்தியாவில் 1 லட்சத்துக்கும் அதிகமான பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு பயிற்சி அளிக்க, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகமும், மைக்ரோசாப்ட் நிறுவனமும்  இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம், டிஜிட்டல் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு மேம்படுத்தப்படும். பயிற்சியின் பகுதியாக, டிஜிட்டல் கல்வியறிவு, வேலைவாய்ப்பு இணைந்த பயிற்சி, சிறு தொழில்முனைவோர் திறன் தகவல் தொடர்பு திறன் போன்ற பல விஷயங்கள் தொடர்பான 70 மணி நேர பாடநெறி உள்ளடக்கங்கள் இலவசமாக வழங்கப்படும்  .
வேலை வாய்ப்பைத் தேடும்  இளம் பெண்கள், குறிப்பாக கொரோனா பெருந்தொற்றால் வேலை வாய்ப்பை இழந்த பெண்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதற்கு இந்தப் பயிற்சி உறுதுணையாக இருக்கும். 
இந்த பயிற்சி அகுப்புகள் ஆன்லைனில் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இ-ஸ்கில் இந்தியா ஆன்லைன் டிஜிட்டல்  தளத்தின் மூலம் பயற்சி அளிக்கும்  திட்டத்தை மேம்படுத்தும்.
பயிற்சி வகுப்பை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அதுமட்டுமல்ல, பெண் பணியாளர்களின் பங்களிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் சுமார் 20,000 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முறையான பயிற்சிக்குப் பின் ஐ.டி / ஐ.டி-தொடர்புடைய நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News