மத்திய அரசு ஊழியர்களின் சேவைக்கான சேமிப்பு நிதி தான் பொது வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் நன்மைகள் வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் பங்களிப்பது போன்றே பொது வருங்கால வைப்பு நிதியிலும் தங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பங்களிக்கின்றனர். பொது வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு மத்திய அரசு நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது, இதன் வட்டி விகிதத்தை மத்திய அரசு 7.1 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
மேலும் படிக்க | நவம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை?
பொது வருங்கால வைப்பு நிதியின் வைப்பு விதியில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறை சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி பொது வருங்கால வைப்பு நிதி விதிகள் 1960-ன் படி பொது வருங்கால வைப்பு நிதியில் 6% குறைவாக சந்தா இருக்கக்கூடாது மற்றும் ஊழியரின் மொத்த சம்பளத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஆண்டு வரம்பு அதிகபட்ச தொகையாக ரூ.5 லட்சத்தை நிர்ணயிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நிதியாண்டில் செலுத்தப்பட்ட சந்தா மற்றும் செபாசிட்டுகள் ரூ.5 லட்சம் என்கிற வரம்பை தாண்டியிருக்கக்கூடாது.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையால் பொது வருங்கால வைப்பு நிதி நிர்வகிக்கப்படுகிறது. இந்த பொது வருங்கால வைப்பு நிதியின் பங்களிப்பதன் மூலம் ஒரு ஊழியர் அவர் பணியிலிருந்து ஓய்வுபெறும் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு முன்பு பங்களிப்பை நிறுத்திக்கொள்ளலாம், பின்னர் அந்த ஊழியர் ஓய்வு பெற்ற நாளில் உடனேயே அவருக்கான தொகை வழங்கப்படும்.
மேலும் படிக்க | அலுவலகத்தில் வேலை பார்க்க பிடிக்கவில்லையா..? ஆய்வாளர்கள் சொல்லும் அதிர்ச்சி தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ