NPS New Guidelines: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) பங்களிப்பு தொடர்பான சில புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை, இந்த மாற்றம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு 7 அக்டோபர் 2024 அன்று வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதிய வழிமுறைகளில் என்ன கூறப்பட்டுள்ளது?
- மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி, முன்பு இருந்தது போலவே, ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 10% தொகையை தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை.
- இந்த தொகை எப்பொழுதும் அருகிலுள்ள முழு ரூபாய்க்கு ரவுண்ட் ஆஃப் செய்யப்படும்.
- எடுத்துக்காட்டாக, உங்கள் பங்களிப்பு ரூ. 1453.53 எனில், உங்களிடமிருந்து ரூ.1454 எடுத்துக்கொள்ளப்படும்.
- ஒரு ஊழியர் வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டால், அவர் தனது பங்களிப்பைத் தொடரும் வாய்ப்பை இழக்க நேரிடலாம் என கூறப்பட்டுள்ளது.
- அவர் தவறுதலாக இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று பின்னர் தெரிய வந்தால், அவரது புதிய சம்பளத்தின்படி பங்களிப்பு தொகை மீண்டும் நிர்ணயம் செய்யப்படும்.
புரோபேஷனில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவையான பங்களிப்பு
- பங்களிப்பு தொகையில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், அது வட்டியுடன் ஓய்வூதியக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
- என்பிஎஸ் உறுப்பினர்கள் (NPS Members) விடுப்பில் இருந்தாலோ, அல்லது சம்பளம் இல்லாத விடுப்பில் இருந்தாலோ, அந்த காலத்திற்கு அவர்கள் என்பிஎஸ் கணக்கில் (NPS Account) பங்களிக்க வேண்டியதில்லை.
- பணியாளர் வேறொரு துறை அல்லது நிறுவனத்திற்கு மாற்றப்பட்டால், அவர் NPS இல் தொடர்ந்து பங்களிக்க வேண்டும்.
- புரோபேஷனில் பணிபுரியும் ஊழியர்களும் என்பிஎஸ் கணக்கில் பங்களிக்க வேண்டும்.
- பங்களிப்பில் தாமதம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அவர்களின் பங்களிப்புடன் வட்டியும் கிடைக்கும்.
NPS என்றால் என்ன?
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ், பணியாளரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 10% ஓய்வூதிய நிதிக்காகப் பிடித்தம் செய்யப்படுகிறது. இது தவிர அரசு சார்பில் அடிப்படை சம்பளத்தில் 14 சதவீதம், என்பிஎஸ் சதாதாரர்களின் (NPS Subscribers) கணக்கில் பங்களிக்கப்படுகின்றது. பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) போலல்லாமல் தேசிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு அரசாங்க ஊழியரின் ஓய்வூதியம் நேரடியாக சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து உள்ளது.
ஓய்வு பெறும்போது ஓய்வூதியம் (Pension) பெற, NPS-ல் 40% தொகை வருடாந்திரத்தில் (Annuity) முதலீடு செய்யப்பட வேண்டும். என்.பி.எஸ் -இல் ஓய்வு பெற்ற பிறகு உறுதியான ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. இதற்கு அரசு ஊழியர்களிடம் நீண்ட நாட்களாக எதிர்ப்பு இருந்து வருகிறது.
Unified Pension Scheme: யுபிஎஸ் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, என்பிஎஸ் -இல் உள்ள குறைபாடுகளை சரி செய்து, சமீபத்தில், அரசாங்கம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அறிமுகப்படுத்தியது. இது ஏப்ரல் 1, 2025 முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், ஓய்வூதியத்திற்கான நிதிக்கு பணியாளர் பொறுப்பாக மாட்டார். இதில், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 18.5 சதவீதத்தை அரசே ஏற்கும். இது உத்தரவாத ஓய்வூதியத் திட்டமாக இருப்பதால், இதில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெற தகுதியுடையவர்கள். பணிக்கொடையைத் (Gratuity) தவிர, யுபிஎஸ் -இன் கீழ் ஓய்வுபெறும் போது மொத்தத் தொகையும் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் ஊழியர்கள் கடைசியாக பணிபுரிந்த 12 மாதங்களின் சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50% தொகையை ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ