புதுடெல்லி: புதிய ஆண்டில் மலிவான வீடு வாங்க நீங்கள் திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி 2021 ஜனவரி 8 அன்று மலிவான குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களை ஏலம் விட உள்ளது. இது குறித்த தகவல்களை IBAPI (Indian Banks Auctions Mortgaged Properties Information) வழங்கியுள்ளது. இது மொத்தம் 3080 குடியிருப்பு சொத்துக்களைக் கொண்டுள்ளது. அவை டீஃபால்ட் பட்டியலில் வந்த சொத்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.
PNB இது குறித்து ட்வீட் செய்துள்ளது
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது வாடிக்கையாளர்களுக்கு ட்வீட் மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. ‘சொத்து வாங்குவதில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா? அப்படி இருந்தால் நீங்கள் 8 ஜனவரி 2021 அன்று PNB-யின் மின் ஏலத்தில் பங்கேற்கலாம். இந்த ஏலத்தில் குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களை மலிவாக வாங்கலாம்.’ என்று வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி அவ்வப்போது ஏலங்களை நடத்துகிறது
சொத்து உரிமையாளர்கள் தங்கள் கடனை செலுத்தவில்லை என்றாலோ, அதை திருப்பி செலுத்துவதற்கான எந்த உறுதியையும் அவர்களால் அளிக்கமுடியவில்லை என்றாலோ, அந்த சொத்துகள் (Property) வங்கிகளால் கையகப்படுத்தப் படுகின்றன. இத்தகைய சொத்துக்கள் அவ்வப்போது வங்கிகளால் ஏலம் (Auction) விடப்படுகின்றன. இந்த ஏலத்தில், வங்கி சொத்துக்களை விற்று அதன் நிலுவைத் தொகையை வசூலிக்கிறது.
ALSO READ: LPG Cylinder டெலிவரியின் போது உங்களிடம் extra charge கேட்கப்பட்டால் இதை செய்யுங்கள்: HPCL
எத்தனை சொத்துகள் உள்ளன
தற்போது 3080 குடியிருப்பு சொத்துக்கள் உள்ளன என்று வங்கி தெரிவித்துள்ளது. இது தவிர, 873 வணிக சொத்துக்கள், 465 தொழில்துறை சொத்துக்கள், 11 விவசாய சொத்துக்களும் உள்ளன. இந்த சொத்துக்கள் அனைத்தும் வங்கியால் ஏலம் விடப்படும்.
இந்த இணைப்பிலிருந்து கூடுதல் விவரங்களைப் பெறலாம்
சொத்து ஏலம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, இந்த இணைப்பை https://ibapi.in/ ஐப் பார்வையிடலாம். வங்கியின் கூற்றுப்படி, ஏலத்திற்கு வழங்கப்பட்ட பொது அறிவிப்பில் சொத்து, இருப்பிடம், அளவீடு ஃப்ரீஹோல்டா அல்லது குத்தகையா போன்ற பிற தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இ-ஏலம் (E-Auction) மூலம் நீங்கள் சொத்து வாங்க விரும்பினால், நீங்கள் வங்கிக்குச் சென்று இதன் செயல்முறை மற்றும் தொடர்புடைய சொத்து பற்றிய எந்த தகவல்களையும் பெற முடியும். ஏல செயல்முறை டிசம்பர் 29 ஆம் தேதி நடைபெறும்.
ALSO READ: Corona நோயாளிகள் காப்பீட்டிற்கு இனிமேல் கூடுதல் premium செலுத்த வேண்டுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR