₹25,000 போதும்... மாதம் தோறும் லட்சங்களில் வருமானம் தரும் மீன் வளர்ப்பு!

வணிக யோசனை: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் கிடைப்பதால், கிராம மக்கள் மத்தியில் மீன் வளர்ப்பு மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்தத் தொழிலில் ஏராளமான விவசாயிகளின் நாட்டம் அதிகரித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 25, 2023, 01:30 PM IST
  • விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்தில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
  • மீன் வளர்ப்பில் அதிக பணம் சம்பாதிக்கலாம்.
  • கிசான் கிரெடிட் கார்டு (KCC) மூலம் மீன் வளர்ப்பையும் விவசாயத்தில் மத்திய அரசு சேர்த்துள்ளது.
₹25,000 போதும்... மாதம் தோறும் லட்சங்களில் வருமானம் தரும் மீன் வளர்ப்பு! title=

 

வணிக யோசனை: உங்கள் வேலையை விட்டுவிட்டு ஒரு தொழிலைத் தொடங்க விரும்பினால், இன்று உங்களுக்காக ஒரு சிறந்த சிறு வணிக யோசனையை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இந்தத் தொழிலைத் தொடங்க நீங்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஒரு வருடத்தில் வெறும் 25000 ரூபாய் முதலீடு செய்தாலும், மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். இந்த தொழில் மீன் வளர்ப்பு. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்தில் அரசும் இந்த தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதில் அரசின் நிதியுதவியும் வழங்கப்படுகிறது.

மீன் வளர்ப்பில் அதிக பணம் சம்பாதிக்கலாம்

கிசான் கிரெடிட் கார்டு (KCC) மூலம் மீன் வளர்ப்பையும் (Fish Farming) விவசாயத்தில் மத்திய அரசு சேர்த்துள்ளது. விவசாயிகள் விவசாயத்துடன் மீன் வளர்ப்பையும் தொடங்கி வருவாயைப் பெருக்கலாம். மீன் வளர்ப்பு உங்கள் சொந்த குளத்திலோ அல்லது ஒரு குளத்தை வாடகைக்கு எடுத்தோ செய்யலாம். இரண்டு திட்டங்களின் கீழும் விவசாயிகளுக்கு அரசு கடன் வழங்குகிறது. நீங்களும் மீன் வளர்ப்புத் தொழிலைத் தொடங்க  (Business Idea) விரும்பினால், நீங்கள் Biofloc டெக்னிக் (Fish Farming Business by Biofloc Technique) பயன்படுத்தலாம். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மக்கள் மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்து வருகின்றனர்.

மத்திய அரசிடம் இருந்து 75 சதவீதம் கடன் கிடைக்கும்

மீன் வளர்ப்புக்கான மொத்த செலவில் 75 சதவீதம் வரை மத்திய அரசு கடனாக வழங்குகிறது. தேங்கி நிற்கும் நீரிலும், ஓடும் நீரிலும் மீன் வளர்ப்பு செய்யலாம். மலைகளில் உள்ள நீர்வீழ்ச்சியின் கரையில் இந்த வகையான மீன் வளர்ப்பு தொழில் மேற்கொள்ளப்படுகிறது. சமவெளிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மீன் வளர்ப்பு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மீன்வளத் துறை உள்ளது, இது மீன் விவசாயிகளுக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்குகிறது. புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும் மீன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கிருந்து பயிற்சி எடுத்து மீன் வளர்ப்பு தொழிலை தொடங்கலாம்.

மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானத்தை அள்ளித்தரும் சிப்ஸ் பிசினஸ்..!

மாநில அரசுகளின் உதவித் திட்டங்கள்

மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், சில மாநில அரசுகள் உதவித் திட்டங்களை வழங்கி வருகின்றன. சத்தீஸ்கர் அரசு இதற்கு விவசாய அந்தஸ்து வழங்கியுள்ளது. மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் வசதியையும் மாநில அரசு செய்து வருகிறது.

மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News