Budget 2024: பெண்கள், ஏழைகள் விவசாயிகளுக்கு நிவாரணம்... காத்திருக்கும் குட் நியூஸ்?

Budget 2024: மக்களிம் வாங்கும் சக்தி அதிகரிப்பதற்கு, அவர்களின் கைகளில் அதிக பண இருப்பை ஏற்படுத்துவது அவசியம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 15, 2024, 10:08 AM IST
  • சமூகத்தின் சில பிரிவினர் அழுத்தத்தில் உள்ளனர்.
  • அவர்களுக்கு நிவாரணம் அளிக்க இன்னும் நான்கைந்து மாதங்கள் காத்திருக்க முடியாது.
  • ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன் அவர்களின் நிலை இன்னும் மோசமாகிவிடும்.
Budget 2024: பெண்கள், ஏழைகள் விவசாயிகளுக்கு நிவாரணம்... காத்திருக்கும் குட் நியூஸ்? title=

Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இது தேர்தல் ஆண்டு என்பதால், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். இந்த பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என நிதி அமைச்சர் ஏற்கனவே கூறியுள்ளார். எனினும், தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை கவரும் வண்ணம் சில அறிவிப்புகளை அரசு வெளியிடலாம் என வட்டாரங்கள் கூறுகின்றன. பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பணவீக்கத்தைக் குறைக்கவும், கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் நுகர்வை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectation)

மக்களிம் வாங்கும் சக்தி அதிகரிப்பதற்கு, அவர்களின் கைகளில் அதிக பண இருப்பை ஏற்படுத்துவது அவசியம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வரி அடுக்குகளில் (Tax Slabs) மாற்றங்கள் அல்லது நிலையான விலக்குகளை (Standard Deduction) அதிகரிப்பதன் மூலம் மக்கள் மீதான வரிச்சுமையை குறைப்பது ஒரு சாத்தியமான தீர்வாக இருக்கலாம். MNREGA இன் கீழ் நிதியை அதிகரிப்பது மற்றும் விவசாயிகளுக்கு அதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கான மற்றொரு திட்டம் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துடன் தொடர்புடையவையாக உள்ளன.

பெண்களுக்கும் பரிசுகள் கிடைக்கும்

நிதி அமைச்சர் (Finance Minister) வெளியிடும் சில அறிவிப்புகள் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாங்கும் திறனை அதொகரிப்பதில் பெண்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு அதிக உத்வேகத்தை அளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தலுக்கு (Lok Sabha Election) முன் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்களில் பெரும்பாலும் புதிய வரி பரிந்துரைகளோ புதிய திட்டங்களோ இருக்காது என்று கூறப்படுகின்றது. எனினும், பெண்களுக்கான (Women) சில சிறப்பு சலுகைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்களுக்கு சில முக்கிய அறிவிப்புகள் வரக்கூடும். 

2024-25 நிதியாண்டின் நான்கு மாதங்களுக்கு அதன் செலவினங்களைச் சந்திக்க இடைக்கால பட்ஜெட்டில் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அனுமதி கோரும். நான்கு மாதங்கள் காத்திருக்க முடியாத மற்றும் உடனடியாகத் தீர்க்கக்கூடிய பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் இதில் அடங்கும். பொருளாதாரத்தில் குறைந்த நுகர்வு தேவை தொடர்பான பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 8 முதல் பத்து மாதங்களில் பெரும்பாலான எஃப்எம்சிஜி மற்றும் தினசரி உபயோகப் பொருட்களின் விலையை நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. உற்பத்திச் செலவு அதிகரிப்பால் நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தது.

மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்கறீங்களா... ‘இந்த’ கட்டணங்கள் குறித்து எச்சரிக்கையா இருங்க!

ஏழைகளுக்கு சிறப்பு நிவாரணம் தேவை

குறைந்த வருமானம் கொண்ட மக்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் விளைவுகள், உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு, பணவீக்கம், அதிக வட்டி விகிதங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இது கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்ப்புற ஏழை மக்களையும் பாதிக்கிறது. கடன் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், விலைவாசி உயர்வு ஏழை சமுதாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. அரசு நினைத்த அளவுக்கு விவசாயத் துறை வளர்ச்சி அடையவில்லை. விவசாய வருவாயை இரட்டிப்பாக்குவது அரசின் இலக்காக இருந்தது, ஆனால் பணவீக்கம் இன்னும் இந்த இலக்கை எட்டவில்லை.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, நடப்பு நிதியாண்டில் விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதம் 1.8 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23ல் இது நான்கு சதவீதமாக இருந்தது. இந்திய மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சியின் தலைமைப் பொருளாதார நிபுணர் தேவேந்திர குமார் பந்த், அடுத்த நிதியாண்டின் நான்கு மாதங்களுக்கு சம்பளம், ஊதியம், வட்டி மற்றும் கடனைச் செலுத்துவதை அரசாங்கத்தை அனுமதிப்பதே வாக்கெடுப்பு கணக்கின் முக்கிய நோக்கமாகும் என்றார்.

இது விரைவில் செய்யப்பட வேண்டும்

சமூகத்தின் சில பிரிவினர் அழுத்தத்தில் உள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் அளிக்க இன்னும் நான்கைந்து மாதங்கள் காத்திருக்க முடியாது என நிபுணர்கள் கருதுகிறார்கள். ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன் அவர்களின் நிலை இன்னும் மோசமாகிவிடும். ஆகையால் இடைக்கால பட்ஜெட்டிலேயே பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளவர்களுக்கு (Economically Backward People) ஓரளவு நிவாரணம் வழங்க அரசு சில திட்டங்களை அறிவிகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் நுகர்வோர் பொருட்கள் துறையின் உற்பத்தி 0.6 சதவீதம் குறைந்துள்ளது. நீடித்து நிலைக்காத பொருட்கள் துறையின் வெளியீடு இந்த எட்டு மாதங்களில் 5.6% அதிகரித்துள்ளது. ஆனால் சாதகமான அடிப்படை விளைவு இதற்கான காரணமாகும். இந்தத் துறையின் உற்பத்தி ஏப்ரல் முதல் நவம்பர் 2022 வரை 2.2% குறைந்துள்ளது.

புதிய வரி விதிப்பில் (New Tax Regime) சில மாற்றங்களைச் செய்வது, அதை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய வழியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு அதிக பணம் கிடைக்கும். பட்ஜெட்டில் வரி விதிப்பில் எப்போதும் மாற்றம் இருக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். புதிய வரி விதிப்பில், வீட்டுக் கடனுக்கான வட்டியை (Home Loan Interest) குறைக்க, அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிகமாக வரி செலுத்துவோர், புதிய வரி முறையை பின்பற்ற வேண்டும் என, மத்திய அரசு (Central Government) விரும்புகிறது. 

மேலும் படிக்க | Budget 2024: பட்ஜெட்டில் வட்டி விகிதங்கள் தொடர்பாக ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்ப்பார்ப்புகள் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News