Budget 2024: பட்ஜெட்டில் சாமானியர்கள் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள்... செவி சாய்ப்பாரா நிதி அமைச்சர்?

Budget 2024: சமீப காலங்களில் வருமான வரி விலக்கு தொடர்பாக அரசிடம் இருந்து நிவாரணம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 28, 2024, 07:18 PM IST
  • வருமான வரி விலக்கு.
  • வரி அடுக்கில் மாற்றம்.
  • பெண்களுக்கான கூடுதல் மருத்துவ வசதிகள்.
Budget 2024: பட்ஜெட்டில் சாமானியர்கள் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள்... செவி சாய்ப்பாரா நிதி அமைச்சர்? title=

Budget 2024: இந்த முறை பொது பட்ஜெட் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட் குறித்து சாமானியர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதேநேரம், இம்முறை பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். இதில் வருமான வரி விலக்கு முதல் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது வரை பல வித நன்மைகள் இருக்கும் என கூறப்படுகின்றது. சமீப காலங்களில் வருமான வரி விலக்கு தொடர்பாக அரசிடம் இருந்து நிவாரணம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை. இந்த முறை பட்ஜெட்டில் சாமானியர்களுக்கு பல நல்ல செய்திகளை அரசு அளிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த முறை பட்ஜெட்டில் சாமானியர்களுக்கு கிடைக்கக்கூடிய 5 நிவாரணங்கள்:

1. வருமான வரி விலக்கு

பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு அரசு பெரிய நிவாரணம் அளிக்கும் என நம்பப்படுகிறது. புதிய வரி முறையின்படி வரி விலக்கு (Income Tax Exemption) வரம்பை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அரசு உயர்த்தக்கூடும். இது மட்டுமின்றி, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை உள்ளவர்கள் தற்போது 5 முதல் 20 சதவீதம் வரி வகைக்குள் வருகிறார்கள். வருவாய் அடிப்படையில் இந்த விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. அரசாங்கம் வரி விகிதத்தை மாற்றலாம் என கூறப்படுகின்றது.

2. வரி அடுக்கில் மாற்றம்

பட்ஜெட்டில் வருமான வரி அடுக்கிலும் (Income Tax Slab) மாற்றங்கள் செய்யப்படலாம். இருப்பினும், புதிய வரி முறையின் கீழ் மட்டுமே ஸ்லாப்பில் மாற்றங்கள் நடக்கும் என்று நம்பப்படுகிறது. தற்போது புதிய முறையில் மொத்தம் 6 அடுக்குகள் உள்ளன. இவற்றை 5 ஆக அரசு குறைக்கலாம். இரண்டாவது ஸ்லாப்பில் மாற்றம் இல்லை என்றால், ஆண்டு வருமானம் ரூ.5 முதல் 9 லட்சம் வரை உள்ளவர்களுக்கு பிரிவு 87ஏ-ன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படலாம்.

3. விவசாயிகளின் வருமானம் கூடும்

பட்ஜெட்டில் சிறு விவசாயிகளுக்கும் அரசு நிவாரணம் வழங்கலாம். குறைந்தபட்ச வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்த நிவாரணம் வழங்கப்படலாம். இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தற்போது 6,000 ரூபாய்க்கான வேலை உத்தரவாதம் வழங்கப்படுகிறது. அரசு பட்ஜெட்டில் இதை ரூ.8 ஆயிரமாக உயர்த்தலாம். அதே சமயம் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியையும் அதிகரிக்கப்படலாம்.

மேலும் படிக்க | ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்

4. மானியமும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு

அரசு வழங்கும் மானியத்தை அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட்டில், சமையல் எரிவாயுக்காக வழங்கப்படும் நேரடி பயன் பரிமாற்றம் (டிபிடி) போன்ற திட்டங்களில் மானியத்தை (Subsidy) அரசு அதிகரிக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இது தவிர, சாமானியர்கள் நேரடியாகப் பயன்பெறும் இன்னும் சில திட்டங்களை அரசு தொடங்கக்கூடும்.

5. பெண்களுக்கான கூடுதல் மருத்துவ வசதிகள்

பெண்களின் ஆரோக்கியத்திலும் அரசின் கவனம் இருக்கும். அரசு மருத்துவமனைகளுக்கான நிதியை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வசதிகளை அரசு அதிகரிக்கலாம். பட்ஜெட்டில் (Budget) பெண்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை வசதி அல்லது மானியம் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. 

மேலும் படிக்க | சாலையில் நின்றாலே அடுத்த ஊருக்கு போகலாம்! தானியங்கி சாலைகள்! ஒரே கல்லில் 3 மாங்காய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News