Budget 2024: 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2024 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இது இடைக்கால பட்ஜெட்டாக உள்ளதால் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் எதிர்பார்ப்புகள் (Budget Expectations)
எந்த முதலீடும் செய்யாமலேயே பணத்தைச் சேமிக்க உதவும் வழிகளில் நிலையான விலக்கு அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் மிக முக்கியமான, அதிகம் பயன்படுத்தப்படும் வழியாகும். நிலையான விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என சம்பளம் பெறும் வகுப்பினர் (salaried Class) நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு புதிய வரி முறையுடன் (New Tax Regime) நிலையான விலக்குகளை அரசாங்கம் சேர்த்தபோது இந்த தேவை இன்னும் அதிகரித்துள்ளது.
நிலையான விலக்கு (Standard Deduction)
நிலையான விலக்கு திருத்தப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. கடைசியாக 2019ஆம் ஆண்டில் நிலையான விலக்கு மாற்றப்பட்டது. 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாகவே இருக்கும் என்றாலும், நடுத்தர வர்க்க சம்பள வகுப்பினர் அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். சில வரிகளில் (Taxes) சில தளர்வுகளை (Tax Exemption) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 பட்ஜெட்டில் நிலையான விலக்கு ரூ.50,000 அதிகரிக்கப்பட வேண்டும் என சாமானிய சம்பள வர்க்க மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.
மேலும் படிக்க | Budget 2024: ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுக்கு அட்டகாசமான செய்தி.. அதிகரிக்கிறதா கவரேஜ்?
நிலையான விலக்கு என்றால் என்ன? (What is standard deduction?)
நிலையான விலக்கு என்பது சம்பளம் பெறும் வகுப்பினர் எந்த செலவையும், சேமிப்பையும் கணக்கு காட்டாமல் வரிக்கு உட்பட்ட சம்பளத்தில் பெறக்கூடிய ஒரு பிளாட் வரி விலக்கு ஆகும். சம்பளம் மற்றும் வணிகத்தின் மூலம் வருமானம் பெறும் வரி செலுத்துவோர் (Taxpayers) இடையே சமநிலையை அடைவதே இதன் நோக்கம். தற்போது, பழைய வரி முறை (Old Tax Regime) மற்றும் புதிய வரி முறை ஆகிய இரண்டிலும் நிலையான விலக்கு கிடைக்கிறது.
1974 ஆம் ஆண்டு முதல் முறையாக நிலையான விலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது
ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் முதன்முதலில் இந்தியாவில் 1974 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்டாண்டர்ட் டிடக்ஷனின் வரலாற்றின்படி, சம்பளம் பெறும் தனிநபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு (Pensioners) அவர்களின் சில செலவுகளை ஈடுகட்ட இந்த விலக்கு கிடைத்தது. வரிவிதிப்பை எளிமையாக்க 2004-2005ல் இது நீக்கப்பட்டது. இது 2018 ஆம் ஆண்டு யூனியன் பட்ஜெட்டில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் சம்பள வகுப்பு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.40,000 என நிர்ணயிக்கப்பட்டது.
பிப்ரவரி 1, 2019 அன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நிலையான விலக்கு வரம்பு ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும், இது பழைய வரி முறைக்கு மட்டுப்படுத்தப்பட்டது. பட்ஜெட் 2023 இல், இது புதிய வரி முறையுடன் இணைக்கப்பட்டது. புதிய வரி முறையில் ரூ.50,000 நிலையான விலக்கு அனுமதிக்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ