Indian Railways: டிக்கெட் புக்கிங் விதிகளில் மாற்றம்.. பயணிகள் ஹேப்பி

Indian Railways: சமீபத்தில், இந்திய ரயில்வே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளில் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 15, 2023, 01:43 PM IST
  • ரயில் டிக்கெட் முன்பதிவு.
  • ரயில்வே விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
  • குடும்ப உறுப்பினர்கள் எனில் யாருக்கெல்லாம் டிக்கெட்டை மாற்ற முடியும்?
Indian Railways: டிக்கெட் புக்கிங் விதிகளில் மாற்றம்.. பயணிகள் ஹேப்பி title=

இந்தியன் ரயில்வே: இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.  

ரயில் டிக்கெட் முன்பதிவு

ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயில் பயணம் செய்கிறார்கள். இந்த பயணங்களின் போது இவற்றின் மூலம் பயணிகள் பயனடைகின்றனர். நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணிக்கும் நபராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு உதவியாக இருக்கும். 

ரயில்வே விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது

சமீபத்தில், இந்திய ரயில்வே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளில் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. அதைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த புதிய விதிகளின் பலனை ரயில்வே பயணிகள் பெறுவார்கள்.

உங்கள் நன்மைக்காக, உங்கள் ரயில் டிக்கெட்டை வேறொருவருக்கு மாற்றக்கூடிய ஒரு விதியைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

குடும்ப உறுப்பினர்கள் எனில் யாருக்கெல்லாம் டிக்கெட்டை மாற்ற முடியும்? 

இந்தக் கேள்விக்கு பதிலளித்த இந்தியன் ரயில்வே, இங்கு குடும்பம் என்பது நண்பர் அல்லது உறவினரைக் குறிக்காது என்று தெரிவித்துள்ளது. ரயில்வே துறை 'குடும்பம்' என்ற வார்த்தையில் அப்பா, அம்மா, சகோதரி, சகோதரர், மகள், மகன், கணவன் அல்லது மனைவியை மட்டுமே சேர்த்துள்ளது. அதாவது உங்கள் ரயில் டிக்கெட்டை  இவர்களில் ஒருவருக்கு மட்டுமே மாற்ற முடியும்.

டிக்கெட்டை மற்றவர் பெயரில் மாற்றுவது எப்படி? 

சில நேரங்களில் சில அவசிய பணிகள் காரணமாக நம்மால் திட்டமிட்டபடி பயணங்களை மேற்கொள்ள முடியாமல் போகலாம். அப்படிப்பட்ட நேரங்களில் நமது டிக்கெட்டை வேறு ஒருவரது பெயரில் மாற்ற முடியும். இதற்கு முதலில் நீங்கள் ஆன்லைனில் புக் செய்த டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். அதன் பிறகு இந்த டிக்கெட்டுடன் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். 

மேலும் படிக்க | Indian Railways: ரயில் டிக்கெட்டில் புதிய விதி... கோடிக்கணக்கான பயணிகளுக்கு பயனளிக்கும்!

இது தவிர, ரயில் டிக்கெட்டை யாருடைய பெயரில் மாற்ற விரும்புகிறீர்களோ, அந்த நபரின் ஐடி அல்லது ஆதார் அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். டிக்கெட் பரிமாற்ற விண்ணப்பப் படிவத்துடன் இந்த ஐடியை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

டிக்கெட் பரிமாற்றக் கோரிக்கையை வைப்பதற்கான கால வரம்பு என்ன?

இந்திய ரயில்வேயின் வழிகாட்டுதல்களின்படி வெவ்வேறு வகைப் பயணிகளுக்கு வெவ்வேறு நேர வரம்புகள் உள்ளன. அரசு ஊழியர்களுக்கு, ரயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே கோரிக்கை விடுக்க வேண்டும்.

அதேசமயம் பண்டிகை சமயங்களில், திருமண விழாக்களில் அல்லது தனிப்பட்ட விஷயங்களில், ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக தனிநபர்கள் டிக்கெட் பரிமாற்றக் கோரிக்கையை வைக்க வேண்டும். இது தவிர, என்சிசி விண்ணப்பதாரர்கள் டிக்கெட் பரிமாற்ற சேவையையும் அதனுடன் தொடர்புடைய பலன்களையும் பெறலாம்.

ஒரே ஒரு வாய்ப்புதான் கிடைக்கும்

ஆனால் இந்த ரயில்வே விதியை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது ஒரு முறை மட்டுமே ரயில் டிக்கெட்டை வேறு பெயருக்கு மாற்ற முடியும். உங்கள் டிக்கெட்டை மற்றொருவர் பெயரில் மீண்டும் மீண்டும் மாற்ற முடியாது.

மேலும் படிக்க | சென்னை - நெல்லை வந்தே பாரத்... நீங்கள் நினைப்பதை விட மிக மிக விரைவில்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News