சிறு சேமிப்புத் திட்டம்: அஞ்சல் அலுவலகத் திட்டங்களில் மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஏனெனில் அவற்றில் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். இந்த தபால் அலுவலக திட்டங்கள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. கிசான் விகாஸ் பத்ரா (KVP), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), என்எஸ்சி (NSC) போன்ற சிறு சேமிப்பு திட்டங்கள் அரசின் வெற்றிகரமான திட்டங்களில் சிலவாகும். நீங்களும் இந்த திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த மாத இறுதியில் அதாவது அடுத்த மாதம் முதல் அரசு இவற்றில் பெரிய மாற்றத்தை செய்யவுள்ளது. இந்த மாற்றத்திற்கு பிறகு முதலீட்டாளர்களுக்கு நன்மையும் ஏற்படலாம், நஷ்டமும் ஏற்படலாம். இந்த மாற்றத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
என்ன மாற்றம் ஏற்படும்?
அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தையும் அரசு மாற்றப் போகிறது. கிசான் விகாஸ் பத்ரா, பொது வருங்கால வைப்பு நிதி, என்எஸ்சி போன்ற திட்டங்களும் இதில் அடங்கும். திட்டங்களின் புதிய வட்டி விகிதம் செப்டம்பர் 2023 இறுதியில் அதாவது செப்டம்பர் 29 அல்லது 30 ஆம் தேதியில் அறிவிக்கப்படும். சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் வட்டி விகிதங்கள் கடந்த ஜூன் 30 ஆம் தேதி மாற்றப்பட்டன. அப்போது செய்யப்பட்ட மாற்றத்தில் பல சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டன. முன்னதாக, ஏப்ரல்-ஜூன் 2023 -க்கான வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்பட்டன.
இப்போது வட்டி விகிதம் என்ன?
தற்போது, கிசான் விகாஸ் பத்ராவில் முதலீடு செய்பவர்கள் ஆண்டுதோறும் 7.5 சதவீத வட்டியைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச முதலீடு 1000 ரூபாய் மற்றும் அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை.
ஜூன் 30 அன்று செய்யப்பட்ட கடைசி மாற்றத்தில், அரசாங்கம் 1 ஆண்டு மற்றும் 2 ஆண்டு கால அஞ்சலக திட்ட நேர வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை முறையே 6.9 சதவீதம் மற்றும் 7.0 சதவீதமாகவும், 5 ஆண்டு தொடர் வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களையும் 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. 30 அடிப்படை புள்ளிகளால் வட்டி விகிதம் 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மீதமுள்ள திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.
சிறு சேமிப்புத் திட்டங்கள் குடிமக்களிடையே வழக்கமான சேமிப்பை ஊக்குவிக்க அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பல்வேறு சேமிப்புக் கருவிகளை உள்ளடக்கியது. சிறு சேமிப்பு திட்டங்களில் சேமிப்பு வைப்பு, சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாத வருமானத் திட்டங்கள் என மூன்று பிரிவுகள் உள்ளன.
- சேமிப்பு வைப்புத்தொகை (1-3 ஆண்டு கால வைப்பு மற்றும் 5 ஆண்டு தொடர் வைப்புத்தொகை உட்பட),
- சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் (பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி கணக்கு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்றவை)
- மற்றும் மாதாந்திர வருமானத் திட்டங்கள் (மாதாந்திர வருமானக் கணக்குகள் போன்றவை).
கூடுதல் தகவல்
பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் (SSY), தபால் நிலைய வைப்புத்தொகை மற்றும் பிற சிறு சேமிப்புத் திட்டங்களில் மிதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை தபால் அலுவலகம் அல்லது வங்கிக் கிளையில் இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த முக்கியமான காலக்கெடுவை தவறவிட்டால் அவர்களின் சிறு சேமிப்பு முதலீடுகள் முடக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ