Google Pay பயனர்களுக்கு சூப்பர் செய்தி... புதிய அம்சங்கள் அறிமுகம்

Google Pay: பிரபலமான கட்டண செயலியான கூகுள் பே பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஏனெனில் இதில் பயனர்கள் 3 புதிய அம்சங்களைப் பெறப் போகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 24, 2024, 05:48 PM IST
  • யுபிஐ மூலம் பண பரிவர்த்தனைகள் செய்யும் நபர்களில் பெரும்பாலானோர் கூகுள் பே செயலியை பயன்படுத்துகிறார்கள்.
  • கூகுள் பே மக்களிடையே மிக பிரபலமாக உள்ளது.
  • இந்த கட்டண செயலிகள் மூலம் பண பரிமாற்றம் மிக எளிதாகியுள்ளது.
Google Pay பயனர்களுக்கு சூப்பர் செய்தி... புதிய அம்சங்கள் அறிமுகம்  title=

Google Pay: யுபிஐ மூலம் பண பரிவர்த்தனைகள் செய்யும் நபர்களில் பெரும்பாலானோர் கூகுள் பே செயலியை பயன்படுத்துகிறார்கள். மொபைல் போன் மூலம் கட்டணம் செலுத்த பல செயலிகள் இருந்தாலும் கூகுள் பே மக்களிடையே மிக பிரபலமாக உள்ளது. இந்த கட்டண செயலிகள் மூலம் பண பரிமாற்றம் மிக எளிதாகியுள்ளது. 

பிரபலமான கட்டண செயலியான கூகுள் பே பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஏனெனில் இதில் பயனர்கள் 3 புதிய அம்சங்களைப் பெறப் போகிறார்கள். புதிய அம்சங்களில் மிக அற்புதமான அம்சமாக கருதப்படுவது  ‘Buy Now Pay Later’ அம்சமாகும். இதன் மூலம் பயனர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைக் கழிக்காமல் பணம் செலுத்துவதற்கான விருப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அற்புதமான அம்சமாக கருதப்படுகின்றது. 

இந்த அம்சத்தின் மூலம் பயனர்களின் வசதி இன்னும் அதிகரிக்கும் என Google Pay நிறுவனம் கூறுகின்றது. அதாவது பயனர்கள் பணம் செலுத்தும் போது, அதற்கான தொகையை உடனடியாக பணம் செலுத்த வேண்டியதில்லை. இதற்கு நீங்கள் தவணை வசதியைப் பயன்படுத்தலாம். அதாவது, இதன் மூலம் நாம் படிப்படியாக பணம் செலுத்த முடியும். அதாவது, ஒரு வகையில், இந்த அம்சம் உங்களுக்காக கிரெடிட் அளிக்கும். இந்த அம்சம் பலருக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

மேலும் படிக்க | ITR Filing: ஆன்லைனில் சுலபமாக ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? முழு வழிமுறை இதோ

இந்த அம்சத்தை நீங்கள் க்ரோமிலும் பயன்படுத்தலாம்

இந்த அம்சத்தைத் தவிர, இன்னும் பிற அம்சங்களும் Google Pay மூலம் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், குரோம் மற்றும் ஆண்ட்ராய்டில் ஆட்டோஃபில் இயக்கப்பட்டுள்ளது. அதாவது கைரேகை, முகம் ஸ்கேன் அல்லது பின்னைப் பயன்படுத்தி விவரங்களைத் தானாக நிரப்ப முடியும். இதற்குப் பிறகு நீங்கள் பணம் செலுத்துவது மிகவும் எளிதாகிவிடும். இந்த அம்சத்தை இயக்கியதும், அதாவது ஆக்டிவேட் செய்ததும் பாதுகாப்புக் கேள்விகள் (Security Questions) எதுவும் உங்களிடம் கேட்கப்படாது.

கூகுள் வாலட் (Google Wallet)

Wallet செயலி சில காலத்திற்கு முன்பு Google ஆல் தொடங்கப்பட்டது. இது ஒரு டிஜிட்டல் வாலட் ஆகும். இது பல பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதில் அனைத்து கார்ட் விவரங்களையும் அதாவது அட்டை விவரங்களையும் சேர்க்கலாம். பயனர்கள் இதைச் செய்தவுடன், சிரமம் இல்லாமல் மற்ற வேலைகள் நடந்துவிடும். நீங்கள் அதை கட்டண பயன்பாட்டிலும் இணைக்கலாம். இதை செய்த பிறகு பயனர்கள் பணம் செலுத்துவது மிகவும் எளிதாகிவிடும். பணம் செலுத்தும் செயலிகளில் அதிக கவனம் செலுத்துபவர்களுக்கு இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

கூடுதல் தகவல்

உலகம் முழுவதும் உள்ள பலர் பயன்படுத்தும் ஆன்லைன் கட்டண செயலியாக Google Pay உள்ளது. ஜூன் 4 முதல், உலகின் சில நாடுகளில் கூகுள் பே சேவையை கூகுள் நிறுவனம் நிறுத்தப் போவதாக செய்திகள் வந்துள்ளன. இந்த தேதிக்கு பிறகு குறிப்பிட்ட நாட்டில் உள்ள மக்கள் இந்த செயலி மூலம் பணம் செலுத்த முடியாது. எனினும் கூகுள் பே செயலியின் பயன்பாட்டை சில நாடுகளில் மூடுவதற்கான கூகுள் நிறுவனத்தின் இந்த முடிவால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் ஜூன் 4, 2024 முதல் அமெரிக்காவில் மட்டும்தான் Google Pay நிறுத்தப்படவுள்ளது. அதாவது, Google Pay இந்தியாவில் தடை செய்யப்படவில்லை. 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்: 8வது ஊதியக்குழுவில் பம்பர் ஊதிய உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News