Pensioners Latest News: அரசு பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் பணி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் இருக்கிறார்களா?அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். ஓய்வூதியதாரர்களுக்கான ஒரு முக்கிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. அதை பற்றி இங்கே காணலாம்.
அலுவலக குறிப்பாணை வெளியானது
பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் (PERSMIN) கீழ் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை (DoPPW) சமீபத்தில் ஒரு அலுவலக குறிப்பாணை (OM) வெளியிட்டுள்ளது. இந்த குறிப்பாணையில் பணி ஓய்வுக்கு பிறகு, வாழ்க்கைத் துணையின் பெயர் அல்லது குடும்பப் பெயரை மாற்றுவது தொடர்பான சமீபத்திய வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
அக்டோபர் 24, 2024 அன்று வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பேடு, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நடைமுறைகளை தெளிவுபடுத்துகிறது, “பிபிஓ -வில், ஓய்வு பெற்ற பிறகு அரசு ஊழியர்கள் அல்லது அவர்களது வாழ்க்கைத் துணையின் பெயர்/குடும்பப் பெயரை மாற்றுவதற்கு CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021 அல்லது CCS (ஓய்வூதியம்) விதிகள், 1972 இல் பரிந்துரைக்கப்பட்ட தனி நடைமுறை எதுவும் இல்லை. பணியாளரின் சேவைப் பதிவு / சேவை புத்தகத்தின் அடிப்படையில் PPO வழங்கப்படுகிறது. மேலும் சேவை புத்தகத்தின் பராமரிப்பு DoPT உடன் தொடர்புடையது,” என்று அலுவலக குறிப்பேட்டில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை இயக்குநர் (PW) தலைமையில் நடைபெற்ற மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பில் (CPENGRAMS) நிலுவையில் உள்ள குறைகள் குறித்த சமீபத்திய, அமைச்சகங்களுக்கு இடையிலான ஆய்வுக் கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது என்று DoPPW மேலும் கூறியது.
குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் பெயரை மாற்றவும், மார்ச் 12, 1987 -இன் DoPT இன் முந்தைய குறிப்பாணையைப் பின்பற்றலாம் என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திற்கு (MoSPI) தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | SIP: மாதம் ரூ.3000 முதலீடு போதும்... அதனை ₹ 3 கோடியாக மாற்றும் மேஜிக் பார்முலா
புகார்தாரராக உள்ள குடும்ப ஓய்வூதியதாரர், PPO வில் பெயர் மாற்றம் செய்வதற்காக சமர்ப்பித்த விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கருதினால், அவர்கள் அவருடன் நேரடியாக பேசி, பெயர் மாற்றத்திற்கான கோரிக்கைள், மார்ச் 12, 1987 முதல் DoPT இன் முந்தைய குறிப்பாணையின் நிபந்தனையை பூர்த்தி செய்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
குடும்ப ஓய்வூதியம்
சமீபத்தில், மத்திய அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகளின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை தெளிவுபடுத்தியது. இது பற்றிய விவரத்தை அளிக்க ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை ஒரு அலுவலக குறிப்பாணையை (OM) வெளியிட்டது.
CSS (ஓய்வூதியம்) விதிகள், 2021 இன் விதி 50 (15)ஐ மேற்கோள்காட்டிய அலுவலக குறிப்பாணை, ‘ஒரு அரசு ஊழியர் அரசுப் பணியில் சேர்ந்தவுடன், அவர் குடும்பத்தின் விவரங்களை படிவம் 4 இல் அலுவலகத் தலைவரிடம் கொடுக்க வேண்டும். அதில் வாழ்க்கைத் துணை, குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஊனமுற்ற உடன்பிறப்புகள் (குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவராக இருந்தாலும், இல்லை என்றாலும்) ஆகியோருடன் தொடர்புடைய அனைத்து விவரங்களும் அடங்கும். மேலும், அரசுப் பணியாளர், அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன், ஓய்வூதியத் தாள்களுடன் மீண்டும் படிவம் 4-ல் குடும்பத்தின் புதுப்பித்த விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்த விதி வழங்குகிறது.
அரசு ஊழியரால் பரிந்துரைக்கப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும்போது, அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அவரது மகள் கருதப்படுகிறார். ஆகையால், குடும்ப உறுப்பினர்களின் விவரங்களில் மகளின் பெயர் சேர்க்கப்பட்டுதான் இருக்கும். குடும்ப ஓய்வூதியத்திற்கான தகுதி, ஓய்வூதியம் பெறுபவர் / குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் இறந்த பிறகு தற்போதுள்ள விதிகளின்படி முடிவு செய்யப்படும்' என தெரிவிக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ