Post Office Schemes : முதலீடு என்பது அனைவரது வாழ்விலும் ஒரு மிக முக்கியமான அம்சமாகும். இதில் ஆண்கள் பெண்கள் என்ற வித்தியாசம் இல்லை. அனைவருக்கும் பணத்தை சேமிப்பது போல, பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்து அதை பெருக்குவதும் மிக அவசியம். குறிப்பாக பணத்தை பாதுகாப்பாக வைத்து சிறந்த வருமானத்தை அளிக்கும் முதலீட்டு திட்டங்களையே தேர்ந்தெடுக்க நாம் அனைவரும் விரும்புகிறோம். இப்படிப்பட்ட பல திட்டங்கள் தபால் நிலையத்தில் உள்ளன.
பல வகையான சேமிப்புத் திட்டங்கள் இந்திய அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படுகின்றன. இந்த அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்து கோடிக்கணக்கான மக்கள் நல்ல வருமானம் பெறுகின்றனர். அஞ்சல் அலுவலகத்தில் பாதுகாப்பான வழியில் சிறந்த வருமானத்தை அளிக்கும் பல திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் அனைத்து வகுப்பினருக்குமானது. குழந்தைகள், பெண்கள், ஊழியர்கள், வணிகர்கள் மற்றும் முதியோர்கள் என அனைவருக்கும் பிரத்யேகமான திட்டங்கள் உள்ளன. அரசின் இந்த திட்டங்கள் சாமானிய மக்கள் எதிர்காலத்திற்காக பெரிய தொகையை சேமிக்க உதவுகின்றன.
இந்நிலையில் நல்ல வருமானத்தை அள்ளித்தரும் தபால் நிலைய சேமிப்பு திட்டம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..
மேலும் படிக்க | மார்ச் 14! ஆதார் கார்டு அப்டேட் செய்யாவிட்டால் அபராதம் அலர்டா இருங்க மக்களே!
தேசிய சேமிப்பு தொடர் வைப்புக் கணக்கு (National Savings Recurring Deposit Account) திட்டம் நமது முதலீடுக்கு ஆண்டுக்கு 6.7 சதவிகிதம் வட்டி தருகிறது. கூட்டு வட்டி முறை கணக்கிடப்படுவதால் இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தை தரக்கூடியது. இந்த திட்டம் தபால் நிலையத்தால் நடப்படும் தேசிய சேமிப்பு தொடர் வைப்புக் கணக்கு திட்டமாகும் (NSRDAS) இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் அதிக லாபத்தை பெறலாம். இந்த திட்டம் பல ஆண்டுகளாக அமலில் இருந்து வரும் ஒரு சேமிப்பு திட்டமாகும். மேலும் தேசிய சேமிப்பு தொடர் வைப்புக் கணக்கு (National Savings Recurring Deposit Account) திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு 6.7 சதவிகிதம் வட்டி தரப்படும்.
இதில் முதலீடு செய்ய நீங்கள் அதிக தொகை இன்வெஸ்ட் செய்ய தேவையில்ளை. உங்களிடம் 100 ரூபாய் இருந்தால், இந்த திட்டத்தை நீங்கள் எளிதாக தொடங்கலாம். அதேபோல் அதிக தொகை இன்வெஸ்ட் செய்ய விரும்புவோருக்கு அதிகபட்சமான தொகை என்ற ஒரு வரையறை கிடையாது. அதேபோல் இந்த தேசிய சேமிப்பு தொடர் வைப்புக் கணக்கு (National Savings Recurring Deposit Account) திட்டத்தில் முதலீடு செய்ய தனிநபராகவோ அல்லது மூன்று பேர் கொண்ட குழுவாகவோ தபால் நிலையத்திற்கு சென்று சேமிக்க தொடங்கலாம்.
லாக் இன் காலம் பற்றி வேசுகையில், இந்த சேமிப்பு திட்டத்தின் லாக் இன் காலம் மொத்தம் 60 மாதங்கள் அல்லது ஐந்து ஆண்டுகள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தை அனைவரும் தொடங்கலாம், ஆனால் சிறார்களின் பெயரில் அவரின் பாதுகாவலர் கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதில் நீங்கள் அட்வான்ஸ் டெபாசிட் என்ற விருப்பமும் பெறுவீர்கள். அதாவது ஐந்து ஆண்டு நிறைவடைய காத்திருக்க வேண்டியதில்லை, ஒரே முறையில் அட்வான்ஸ் தொகை செலுத்தி டெபாசிட் செய்யலாம்.
அதேபோல் இந்த திட்டத்தின் மூலம் லோன் பெற விரும்பினால், அதற்கு முதலீட்டை தொடங்கி 12 தவணைகளை செலுத்திய பிறகு லோன் பெற்றுக் கொள்ளலாம்.
எடுத்துக்காட்டக, உங்களிடம் 25,000 ரூபாய் இருந்து அதில், இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், 5 ஆண்டுக்கு பிறகு 17,84,146 ரூபாய் பெறுவீர்கள். அதாவது 2.84 லட்சம் லாபமாக கிடைக்கும்.
முதலீட்டு தொகை = 25,000
12 தவணை = 3,00,000
5 ஆண்டுக்கு = 15,00,000 கிடைக்கும்
வட்டி = 2,84,146
5 ஆண்டுகளில் மொத்த தொகை = 17,84,146.
மேலும் படிக்க | மருத்துவச் செலவுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு திட்டம் - பெறுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ