இன்றைய உயர் தொழில்நுட்ப யுகத்தில், இன்டர்நெட்டின் பயன்பாடு அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. நாம் வீட்டில் இருந்தபடியே அனைத்து வேலைகளையும் ஆன்லைன் மூலம் செய்து வருகிறோம். அதன்படி மின்சார கட்டணம் நிரப்புவது தொடங்கி வங்கி பரிவர்தனை வரை அனைத்து வேலைகளும் விரல் நுனியில் செய்யப்படுகின்றன. தொழில்நுட்ப உதவியுடன், இந்தியாவில் வங்கி சார்ந்த வேலைகள் முடிப்பது பயனர் நட்புடன் மாறிவிட்டது. நீங்கள் ஒரு புதிய கணக்கைத் தொடங்க வேண்டும், இஎம்ஐ செலுத்த வேண்டும் அல்லது ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை மாற்ற வேண்டும் அல்லது உங்கள் பில்களை செலுத்த வேண்டும் என்றால் இவை அனைத்தும் ஆன்லைன் ட்ரான்ஸ்சாக்சன் மூலம் நொடிகளில் செய்வது சாத்தியமாகும்.
இதற்கிடையில் ஃபிஷிங் தாக்குதல்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மின்னஞ்சல்கள், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் பலவற்றின் மூலம் மக்களை ஏமாற்றுவதற்கு புதிய வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி தற்போது ஐசிஐசிஐ வங்கியின் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள், இது குறித்து வங்கி பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பண மோசடி தொடர்பாக எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க | இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிய அடி, நாளை முதல் புதிய விதி
ஐசிஐசிஐ தங்களின் பயனர்களை எச்சரிக்கிறது
வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன, ஆனால் அதையும் மீறி கடந்த சில ஆண்டுகளாக வங்கி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சாத்தியமான மோசடிகள் குறித்து ஒரு ட்வீட்டில் எச்சரித்துள்ளது அதில், 'உங்கள் யுபிஐ பின்னை தொலைபேசியில் பகிர உங்களை வற்புறுத்த முயற்சிக்கும் மோசடியாளர்களிடம் ஜாக்கிரதை. பாதுகாப்பாக இருங்கள், #SafeBanking பயிற்சி செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளது. தற்போது இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மொபைல் பேங்கிங் மூலம் பாதுகாப்பாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள்
- நீங்கள் ஏதேனும் மோசடி செய்தியைப் பெற்றிருந்தால், அதில் URL இருந்தால், அதைக் கிளிக் செய்ய வேண்டாம்.
- உங்கள் மொபைலை வேறொருவருடன் பகிர வேண்டும் என்றால், உலாவல் வரலாறு, தற்காலிக சேமிப்பு, தற்காலிக கோப்புகளை அழித்து, உங்கள் மொபைல் வங்கி பயன்பாட்டைத் தடுக்கவும்.
- ஆப்பிள் ஆப் ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோர இல் இருந்து மட்டும் பயன்பாடுகளைப் பதிவிறக்கவும்.
- தனிப்பட்ட தகவல் அல்லது ஆன்லைன் வங்கிச் சான்றுகளை மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் ஒருபோதும் வெளிப்படுத்த வேண்டாம், ஏனெனில் இவை அடையாளத் திருட்டுக்குப் பயன்படுத்தப்படலாம்.
- உங்கள் பரிவர்த்தனையை முடித்தவுடன் ஆன்லைன் மொபைல் வங்கி அல்லது பயன்பாட்டிலிருந்து உடனடியாக வெளியேறவும்.
- பாதுகாப்பற்ற, தெரியாத வைபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏதேனும் வங்கி மோசடியை நீங்கள் சந்தித்தால், உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவிக்கவும்.
மேலும் படிக்க | 7th Pay Commission:ஜூலை மாதம் ஊழியர்களுக்கு 3 பம்பர் செய்திகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR