Atal Pension Yojana : மக்களுக்கு சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு அவ்வபோது பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்து அவற்றை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பொதுமக்கள் முதல் மூதத குடிமக்கள் வரை தங்களின் நிதி தேவையை எளிதாக பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். அதுவும் தற்போது தொழிலதிபர்கள் முதல் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வரை, தங்களின் ஓய்வுக்குப் பிறகு எவ்வித கவலையுமின்றி இருக்க சிறு வயதிலேயே பல்வேறு திட்டங்களிலும், வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வயதும், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதும் போன்றவற்றை செய்கிறனர். அப்படி, மாதந்தோறும் ரூ.5000 வரை வருமானம் பெரும்படியாக ஓய்வூதிய திட்டத்தினை மத்திய அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. அது என்ன திட்டம் தெரியுமா?
இந்நிலையில் மக்களின் சேமிப்பை அதிகரிக்க மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்தில், முதலீட்டாளர் முதிர்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவார்கள். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே அமைப்புசாரா துறைகளில் பணிபுரிபவர்களுக்கு முதியோருக்கு பாதுகாப்பான வருமானம் வழங்குவதே ஆகும். எனவே இப்போது அடல் பென்ஷன் திட்டத்தின் பலன்களைப் பெற எப்படி விண்ணப்பிப்பது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
அடல் பென்ஷன் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
* அடல் பென்ஷன் யோஜனா படிவங்களை நீங்கள் ஆன்லைனில் அல்லது அருகில் இஎஊக்கும் வங்கிகளில் பெற்று கொள்ளலாம்.
* இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
* விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் வங்கியில் சமர்ப்பிக்கவும்.
* உங்கள் ஆதார் அட்டையின் புகைப்பட நகலை சமர்ப்பிக்கவும்.
* உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.
அடல் பென்ஷன் திட்டத்தின் நன்மைகள் | Atal Pension Scheme Benefits:
இந்த திட்டத்தில், வயதான காலத்தில் மாதந்தோறும் நல்ல வருமானம் தரக்கூடும். ஓய்வூதியத் தொகையாக மாதந்தோறும் சந்தாதாரருக்கு ரூ. 1,000 முதல் 5,000 வரைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. வருமான வரி செலுத்தாத இந்திய குடிமகன் அனைவருமே இந்த சமூக பாதுகாப்பு நல திட்டத்தில் சேர்ந்து பயன் பெற முடியும். இதை தவிர, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 என்பது போலவும் பென்ஷன் கிடைக்கும் வகையில் திட்டங்களை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். 18 வயதுள்ள ஒருவர் 60 வயதில் ரூ.1,000 பென்ஷன் பெற விரும்பினால், அவர் மாதம் ரூ.42 முதலீடு செய்து வர வேண்டும். அதேசமயம் 40 வயதில் ஒருவர் இந்த திட்டத்தில் இணையக்கூடும் என்றால், அவர் மாதம் ரூ. 291 கட்ட வேண்டும். அதுமட்டுமின்றி சந்தாதாரர் இறந்துவிட்டால், அவரின் வாழ்க்கை துணைக்கு அந்த பென்ஷன் தொகை வழங்கப்படும். ஒருவேளை 2 பேருமே இறந்துவிட்டால், அந்த பென்ஷன் தொகை சந்தாதாரரின் நாமினிக்கு வழங்கப்படும்.
அடல் பென்ஷன் திட்டத்திற்கான தகுதிகள் | Atal Pension Scheme Eligibility:
* சந்தாதாரர் 60 வயது பூர்த்தியடையும்போது மட்டுமே இந்த அடல் ஓய்வூதிய திட்டத்திற்கான 100 சதவீதம் பென்ஷன் தொகையையும் பெற முடியும். 60 வயதிற்கு முன்பாகவே சந்தாதாரரால் இந்த திட்டத்திலிருந்து வெளியேற முடியாது.
* இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
* வயது வரம்பு 18 முதல் 40 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* குறைந்தது 20 ஆண்டுகள் பங்களிக்க வேண்டும்.
* ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு இருக்க வேண்டும்.
* செல்லுபடியாகும் மொபைல் எண்.
மேலும் படிக்க | SBI அம்ரித கலசம் திட்டம்... இன்னும் 13 நாட்களே உள்ளன... மிஸ் பண்ணாதீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ