புதுடெல்லி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் 85 மில்லியன் இணைய வங்கி வாடிக்கையாளர்களுக்கும் ஒரு முக்கியமான செய்தி. 19 மில்லியன் மொபைல் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும்…
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) தனது டிஜிட்டல் வங்கி சேவைகள் குறித்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
We request our esteemed customers to bear with us as we strive to provide a better Banking experience.#InternetBanking #YONOSBI #YONO #ImportantNotice pic.twitter.com/u2GbaVQGLI
— State Bank of India (@TheOfficialSBI) July 16, 2021
எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்கள், ஜூலை 16 மற்றும் ஜூலை 17 ஆகிய தேதிகளில் டிஜிட்டல் வங்கி சேவைகள் செய்வதில் சிரமங்களை எதிர்கொள்ளலாம். தினமும் சுமார் 150 நிமிடங்கள் டிஜிட்டல் சேவை நிறுத்தப்படுகிறது. எனவே அதற்கு ஏற்றாற்போல உங்கள் பரிவர்த்தனையை திட்டமிடுங்கள்.
ஜூலை 16 மற்றும் 17 இரவு இரவு 10.45 மணி முதல் அதிகாலை 1.15 மணி வரை தொழில்நுட்ப ரீதியிலான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்போவதாக எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் இணைய வங்கி / யோனோ / யோனோ லைட் / யுபிஐ சேவைகள் (Internet Banking / YONO / YONO Lite / UPI services) கிடைக்காது. "நாங்கள் உங்களுக்கு, மேலும் மேம்பட்ட மற்றும் சிறந்த வங்கி அனுபவத்தை வழங்கும் பணியை மேற்கொள்ளவிருக்கிறோம். இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்" என்று எஸ்.பி.ஐயின் ட்வீட் செய்தி கூறுகிறது.
Also Read | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம், இதுதான் காரணம்
எஸ்பிஐ தனது இணைய வங்கி சேவைகளை முடக்குவது இது முதல் முறை அல்ல. கடந்த சில மாதங்களாக, பராமரிப்புக்காக எஸ்பிஐ அவ்வப்போது தனது சேவைகளை இடைநிறுத்துகிறது.
ஜூலை 10 மற்றும் ஜூலை 11 ஆகிய தேதிகளில் பராமரிப்புக்காகவும், ஜூலை 3 மற்றும் ஜூலை 4 ஆம் தேதிகளில் அதிகாலை 3.25 மணி முதல் 5.50 மணி வரையிலும் சேவைகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் இருபத்தி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட எஸ்.பி.ஐ வங்கிக் கிளைகள் உள்ளன. 31 டிசம்பர் 2020 இன் தரவுகளின்படி, இணைய வங்கி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 85 மில்லியனாகவும், மொபைல் வங்கி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 19 மில்லியனாகவும் உள்ளது.
யுபிஐ சந்தாதாரர்களின் (UPI subscribers) எண்ணிக்கை 135 மில்லியனுக்கும் அதிகமாகும். எனவே வங்கி அவ்வப்போது இப்படி சேவைகளை இடைநிறுத்துவது பல வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
Also Read | Ration Card தொலைந்து விட்டதா; வீட்டில் இருந்தே பதிவிறக்கம் செய்யலாம்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR