8.10% வரை FD வட்டி விகிதம்... அதிக வருவாயை தரும் இந்த 2 வங்கிகள் - நெருங்கும் கடைசி தேதி!

Special FD Schemes: அதிக வட்டி வருமானத்தை தரும் சிறப்பு FD திட்டத்தில் முதலீடு செய்ய வரும் டிச. 31ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகளின் திட்டங்கள் குறித்து விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 19, 2024, 08:17 AM IST
  • 80 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 8.10% வட்டி விகிதம்
  • மூத்த குடிமக்களுக்கு 0.50% வட்டி விகிதம் கூடுதலாக வழங்கப்படுகிறது
  • இவை சிறப்பு FD திட்டமாகும்.
8.10% வரை FD வட்டி விகிதம்... அதிக வருவாயை தரும் இந்த 2 வங்கிகள் - நெருங்கும் கடைசி தேதி! title=

High Interest Rate Special FD Schemes: குறுகிய கால சேமிப்பில் நல்ல வருமானம் தரக்கூடிய திட்டம் என்றால் அது நிலையான வைப்புத்தொகை திட்டம் எனலாம். அதாவது ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் வரை டெபாசிட் செய்து வைப்பதன் மூலம் நீங்கள் பிற திட்டங்களில் இருந்து பெறும் வட்டி வருவாயை விட அதிக வருமானத்தை இந்த நிலையான டெபாசிட் திட்டத்தில் பெறுவீர்கள். அப்படியிருக்க, சில வங்கிகள் மற்ற வங்கிகளையும், நிதி நிறுவனங்களையும் ஒப்பிடும்போது சற்றே அதிகமான வட்டி விகிதத்தை வழங்குகிறார்கள். அந்த வங்கிகளில் நீங்கள் டெபாசிட் செய்யும்பட்சத்தில், உங்கள் பணத்திற்கான வருவாய் மேலும் அதிகரிக்கும் எனலாம்.

அந்த வகையில், IDBI வங்கி (IDBI Bank), பஞ்சாப் சிந்த் வங்கி ஆகியவை சிறப்பு நிலையான டெபாசிட் திட்டத்திற்கு நல்ல வட்டி வருவாயை வழங்குகின்றன. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல பலனை தரும். இருப்பினும் இந்த வங்ககளின் சிறப்பு நிலையான டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி நாளும் நெருங்கி வருகிறது.

எனவே, முதலீட்டாளர்கள் இந்த வங்கிகளின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நிதி சார்ந்த ஆலோசகரிடம் உடனடியாக ஆலோசனை மேற்கொண்டு கடைசி நாளுக்குள் இந்த டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அந்த வங்கிகள் வழங்கும் சிறப்பு நிலையான டெபாசிட் திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்: EPF Claim விதிகளில் மாற்றம், இனி பிஎஃப் தொகையுடன் அதிக வட்டி கிடைக்கும்

பஞ்சாப் & சிந்த் வங்கி

பஞ்சாப் & சிந்த் வங்கியில் (Punjab & Sindh Bank) பல்வேறு சிறப்பு நிலையான வைப்புத்தொகை திட்டங்கள் இருக்கின்றன. அதாவது, FD திட்டங்களின் கால அளவும், வட்டி விகிதமும் மாறுபடும் எனலாம். அந்த வகையில், இந்த திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்ய வரும் டிச.31ஆம் தேதி கடைசி நாள் என அந்த வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பொது குடிமக்களுக்கான வட்டி விகிதம்

இந்த வங்கியில் 222 நாள்களுக்கான சிறப்பு FD திட்டம் உள்ளது. இதில் 6.30% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 333 நாள்களுக்கான சிறப்பு FD திட்டத்திற்கு 7.20% வட்டி விகிதமாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் 444 நாள்களுக்கான திட்டத்தில் 7.30%, 555 நாள்களுக்கான திட்டத்திற்கு 7.45% வழங்கப்படுகிறது. 777 நாள்களுக்கான திட்டத்தில் 7.25% மற்றும் 999 நாள்களுக்கான FD திட்டத்திற்கு 6.65% வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் பொது குடிமக்களுக்கானது. 

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்

அதேபோல், இந்த அனைத்து சிறப்பு FD திட்டங்களிலும் 60 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள் ரூ.3 கோடிக்கும் குறைவாக டெபாசிட் செய்கிறார்கள் எனில் அவர்களுக்கு பொது குடிமக்களுக்கு வழங்கப்படுவதை விட 0.50% கூடுதலாக விகிதம் வழங்கப்படும். மேலும், 80 வயதுக்கும் மேற்பட்ட குடிமக்களுக்கு மேலும் 0.10% அதிகமாக வட்டி விகிதம் வழங்கப்படும். அதிகபட்சமாக 555 நாள்களுக்கான சிறப்பு FD திட்டத்தில் இவர்களுக்கு 8.10% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

IDBI வங்கி

இந்த வங்கியில் 300 நாள்கள், 375 நாள்கள், 444 நாள்கள், 700 நாள்களுக்கு உத்வச் FD என்ற பெயரில் சிறப்பு FD திட்டத்தில் முதலீடு செய்ய வரும் டிச.31ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த குடிமக்களுக்கு 7.9% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

பொதுகுடிமக்களுக்கு 300 நாள்களுக்கான திட்டத்திற்கு 7.05%, 375 நாள்களுக்கான 7.25%, 444 திட்டத்திற்கு 7.35%, 700 நாள்களுக்கான திட்டத்திற்கு 7.20% என வட்டி விகிதம் வழங்கப்டுகிறது. மூத்த குடிமக்களுக்கு மேற்குறிப்பிட்ட திட்டங்களில் பொது குடிமக்களை காட்டிலும் 0.50% வட்டி விகிதம் கூடுதலாக வழங்கப்படும்.

மேலும் படிக்க | குறைந்த சம்பளம் வாங்கினாலும் இந்த வங்கிகள் உங்களுக்கு லோன் தருகின்றன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News