கடனுக்கு உத்தரவாதம் கொடுக்கத் தயாரா? ‘அய்யோ பாவம்’ என்ற பெயர் வராமல் இருக்க டிப்ஸ்

Alert For Loan Guarantor: கடன் உத்தரவாதம் கொடுப்பவர்கள், உதவி செய்யப் போய், அது நமக்கே வினையாகிவிட்டதே என்று புலம்பாமல் இருக்க இந்த விஷயங்களை உறுதி செய்துக் கொண்டால் உறவு கசந்து போகாது! 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 3, 2023, 09:42 AM IST
  • கடனுக்கு உத்தரவாதமளிப்பவரா?
  • கடனுக்கு ஜாமீன் வழங்கும் ஆவணங்கள்
  • தனிநபர் கடனுக்கு ஜாமீன் கொடுப்பதற்கு விதிகள்
கடனுக்கு உத்தரவாதம் கொடுக்கத் தயாரா? ‘அய்யோ பாவம்’  என்ற பெயர் வராமல் இருக்க டிப்ஸ் title=

புதுடெல்லி: இன்றைய காலகட்டத்தில், நடுத்தர மக்கள் மட்டுமல்ல, மிகப் பெரிய பணக்காரர்கள் கூட கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்த முடிவதில்லை. அதிலும் கல்விக்கடன், வீட்டுக்கடன் என வாழ்க்கையில் ஒரு முறை கடன் வாங்கும் நிலைமை மாறி, வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதற்கான கடன் என கடனின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆனால், சில சமயங்களில் கடன் வாங்கியவரை விட, அவரைத் தெரியும் என்று உத்தரவாதம் கொடுத்தவரின் நிலை தான் ‘அய்யோ பாவம்’ என்று மாறி விடுகிறது.

கடனுக்கு ஜாமீன் போடுபவரின் பங்கு

கடன் உத்தரவாதமளிப்பவராக, ஒருவரின் பங்கு என்ன என்பதைத் தெரிந்துக் கொண்டு ஒருவர் தனது உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ உத்தரவாதம் அளிப்பது நல்லது. ஏனென்றால், கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலையில், நீங்கள் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதை புரிந்து  கொள்ளுங்கள்.

கடனுக்கு உத்திரவாதமளிக்கும் முடிவு

கடனுக்கு உத்திரவாதமளிக்கும் இந்த முடிவை நீங்கள் எடுக்கிறீர்கள் என்றால், காகிதத்தில் கையொப்பமிடுவதற்கு முன் சில விஷயங்களை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

உத்தரவாதம் அளிக்க நிர்பந்தமா?

உங்களின் உறவினர் அல்லது நண்பர் யாரேனும் அவருடைய நிர்ப்பந்தத்தைப் பற்றிச் சொல்லி, அவருடைய கடனுக்கு உத்தரவாதமளிக்கும்படி உங்களிடம் கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? நம்மில் பெரும்பாலோர் இல்லை என்று சொல்ல முடியாமல், விரும்பம் இல்லாவிட்டாலும் உத்தரவாதம் தர ஒப்புக்கொள்கிறோம்.

மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி கொடுக்கவுள்ள குட் நியூஸ்.. கடன் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய பரிசு

உத்தரவாதமளிப்பவராக உங்கள் பங்கு என்ன? 

ஒருவருக்கு ​​கடன் உத்தரவாதமளிப்பவராக உங்கள் பங்கு என்ன? கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், நீங்கள் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும், அத்தகைய சூழ்நிலையில், கடனின் விதிமுறைகள் மற்றும் நிலைமைக்கான முழுப் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது. கடன் வாங்கியவர், முழுமையாக புரிந்து கொள்ளுங்கள்.

கடனுக்கு உத்தரவாதமளிப்பவராக ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு முன்பு நீங்கள் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

loan guarantee

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெளிவாக புரிந்துக் கொள்ளவும்
கடனுக்கான அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் புரிந்து கொள்ளாமல் கடன் ஆவணங்களில் கையெழுத்திடக்கூடாது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படிக்கவும். நிபந்தனைகளில் ஒரு சிறிய சந்தேகம் ஏற்பட்டாலோ, அல்லது அது  சரியில்லை என்று தோன்றினால், அது தொடர்பான விளக்கத்தைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ளவும். உங்களுக்கு திருப்தி இல்லையென்றால் கையெழுத்திட வேண்டாம். அதேபோல, உங்கள் ஆவணங்கள் எதையும் வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கடன் வாங்குபவரின் நோக்கம் என்ன? 
யார் கடன் வாங்குகிறார், எந்த வகையான கடன் வாங்குகிறார், ஏன் வாங்குகிறார், கிரெடிட் ஸ்கோர் எப்படி இருக்கிறது, வருமானம் சீராக இருக்கிறதா, கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியுமா என பல்வேறு விஷயங்களை தெரிந்துக் கொண்டு உத்தரவாதம் கொடுப்பதை பற்றி முடிவெடுக்கவும்.

மேலும் படிக்க | கடன் சுமையை குறைக்க ஒன் டைம் செட்டில்மெண்ட் ஓகே தான்! ஆனா, இந்த விஷயம் தெரியுமா?

கிரெடிட் ஸ்கோர்
ஒருவரின் கடனுக்கு ஜாமீன் கொடுப்பது என்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கலாம், அதாவது கடன் வாங்கியவர் கடனை திருப்பிச் செலுத்த தவறினால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையும். உங்கள் கிரெடிட் ரிப்போர்ட் மோசமாக மாறுவது, உங்கள் அவசரத் தேவைக்கு கடனைப் பெறுவதில் சிரமத்தைக் கொடுக்கும்.

கூடுதல் கடன்
ஒருவரின் கடனுக்கு நீங்கள் உத்தரவாதம் கொடுத்திருக்கும் நிலையில், கடன் வாங்கியவர் கூடுதல் கடனைப் பெற்றால், நீங்கள் வங்கிக்குச் சென்று புதிய கடனில் இருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளலாம், ஆனால் முந்தைய கடன் நிலுவைக்கு உங்கள் ஜாமீன் பொருந்தும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஜாமீனை திரும்பப் பெறுவது
ஒருவரின் கடனுக்கு ஜாமீன் கொடுத்த பிறகு, எதிர்காலத்தில் அந்தக் கடனுக்கு கொடுத்திருக்கும் ஜாமீனை திரும்பப் பெற நினைத்தால்,  அதற்கான சட்டப்பூர்வ வழிகளும் உண்டு. ஏனெனில் வங்கி கடனாளியிடம் இருந்து கடனை மீட்க முடியாவிட்டால், கடனுக்கான பொறுப்பு உங்களுடையதாகிவிடும். உங்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் சட்டப்பூர்வ வழிகளை நாடலாம்.

மேலும் படிக்க | தேர்தல் பத்திரங்களின் விற்பனை தொடங்குகிறது! XXVII கட்டத்தில் முதலீடு செய்யத் தயாரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News