ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு அதானி போர்ட்ஸ், தனது அனைத்து நஷ்டங்களையும் மீட்டெடுக்கிறது; அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை இன்று 19 சதவீதம் உயர்ந்துள்ளது. இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் அதானி குழுமத்தின் பங்குகளின் விலைகள் உயர்ந்தன, அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 7.7% வரை உயர்ந்தது என்றால், அதானி எண்டர்பிரைசஸ் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 19% உயர்ந்தது.
அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலைகள் செவ்வாய்க்கிழமை உயர்ந்தன.
அதானி குழுமத்தின் போர்ட் யூனிட், அதன் 10 நிறுவனங்களில் முதன்மையானது. அது மட்டுமல்ல, இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் ஏற்றத்தைக் கண்டன.
அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் பங்குகள் (Adani Ports and Special Economic Zone Ltd) 7.7% வரை உயர்ந்தன. ஃபிளாக்ஷிப் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் திங்களன்று இதேபோன்ற முன்னேற்றத்தை பதிவு செய்த நிலையில், இன்று கிட்டத்தட்ட 19% உயர்வைக் கண்டது.
ஹிண்டன்பர்க் அறிக்கையில் குற்றம் சாட்டியபடி இல்லாமல், பங்கு விலைக் கையாளுதலுக்கான உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என்று கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடபப்ட்ட உச்சநீதிமன்றக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அதானி குழுமத்தின் பங்குகளின் விலை உயர்ந்து வருகின்றன. ஹிண்டர்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயம் தொடர்பான விசாரணை இன்னும் தொடர்வதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை
கடந்த வியாழன் (2023, மே 18) அன்று முடிந்த பங்குச்சந்தைக்கும், தற்போதைய பங்குச்சந்தை மதிப்பிற்கும் இடையில் மிகப் பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. அதானியின் பத்து நிறுவனங்களின் பங்குகளின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு சுமார் $22 பில்லியன் உயர்ந்துள்ளது.
அதானி போர்ட்ஸின் வணிகத்தின் அடிப்படைகள் உறுதியாக உள்ளன. மும்பையில். பொதுவாக அதிக பணம் சம்பாதிக்கும் நிறுவனங்களை விரும்பும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு இந்த பங்கு விருப்பமான தெரிவாக உள்ளது.
2027 ஆம் ஆண்டில் முதிர்ச்சியடையும் அதானி போர்ட்ஸின் இரண்டு அமெரிக்க நாணயப் பத்திரங்கள் செவ்வாயன்று டாலருக்கு எதிராக சுமார் 0.2 சென்ட்கள் அதிகரித்தன. அவர்கள் இன்னும் ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முந்தைய மட்டத்தை விட 6% கீழே வர்த்தகம் செய்கிறார்கள்.
மேலும் படிக்க | EPFO மிகப்பெரிய அப்டேட்: அதிகரிக்கிறது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்!!
கடந்த வாரம் வெளியிடப்பட்ட 173 பக்க அறிக்கையில், சந்தைக் கட்டுப்பாட்டாளரான செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா அல்லது செபியின் தரவுகளின் அடிப்படையில், பங்கு விலை செங்குத்தாக உயர்ந்த நிலையில், "எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை" என்று நீதிமன்றக் குழு கூறியது.
ஜனவரியில் எழுந்த பிரச்சனைகளுக்குப் பிறகு, அதானி குழுமத்தின் முதலீட்டாளர் GQG பார்ட்னர்கள் மீண்டும் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ய முடிவெடுத்து, கடந்த மார்ச் மாதத்தில், அதானி எண்டர்பிரைசஸ் (AEL), அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகியவற்றில் ரூ.15,446 கோடி முதலீடு செய்துள்ளனர்.
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அதானி குழுமத்தை அம்பலப்படுத்திய நேரத்தில் இந்த முதலீடு செய்யப்பட்டது. இப்போது மீண்டும் குறிப்பிட்ட தொகையை அதானிக்கு முதலீடு செய்ய அந்தக் குழு முடிவெடுத்திருக்கிறது.
அதானி குழுமத்தின் கடனானது, 31 மார்ச் 2023-ல் ரூ. 2.27 டிரில்லியன் ஆக இருந்தது. இதில் 39% பத்திரங்களில் உள்ளது. மேலும், 29% சர்வதேச வங்கிகள் மற்றும் 32% இந்திய வங்கிகள் மற்றும் NBFC-களில் இருக்கிறது.
மேலும் படிக்க | அப்போதே நோ சொன்ன மோடி... ரூ. 2000 வாபஸ் பெறுவதற்கு இதுதான் காரணமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ