8வது ஊதியக்குழுவின் சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தி!! கடந்த சில நாட்களாக அரசுத் துறைகளில் 8வது ஊதியக் குழு குறித்து விவாதம் நடைபெற்று வருவதாகப் பேசப்படுகிறது. எட்டாவது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றத்தை காண முடியும். தற்போது, 7வது ஊதியக்குழுவின் கீழ் உள்ள ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (குறைந்தபட்ச ஊதிய வரம்பு) ரூ.18,000 ஆக உள்ளது.
ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் திருத்தம் செய்ய கோரிக்கை
ஊழியர்களின் ஊதியத்தை தீர்மானிப்பதில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஃபிட்மென்ட் பேக்டரை சீரமைக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில், திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் பழைய அடிப்படை ஊதியத்தில் இருந்து கணக்கிடப்பட்டு புதிய ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்பது ஊதியக் கமிஷன் அறிக்கையில் ஒரு முக்கியமான பரிந்துரையாகும். அதன் அடிப்படையில் சம்பள உயர்வு முடிவு செய்யப்படுகிறது.
குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரத்தில் இருந்து 26,000 ஆக அதிகரிக்கலாம்
7வது ஊதியக் குழுவின் படி, மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 7வது ஊதியக் குழுவில் இதுவரையிலான மிகக்குறைந்த ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. இதில், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3.68 மடங்கு உயர்த்தினால், குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26,000 ஆக உயர்த்தப்படும் என்று அரசுத் துறைகளில் விவாதம் நடந்து வருகிறது.
மேலும் படிக்க | 8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளம் உயரப்போகிறதா?
கமிஷன் மற்றும் ஊதிய உயர்வு
4வது ஊதியக் கமிஷன் ஃபிட்மென்ட் ஃபேக்டர்
- சம்பள உயர்வு: 27.6%
- குறைந்தபட்ச ஊதிய அளவு: ரூ 750
5 ஆவது ஊதியக் கமிஷன் ஃபிட்மென்ட் ஃபேக்டர்
- சம்பள உயர்வு: 31%
- குறைந்தபட்ச ஊதிய அளவு: ரூ 2,550
6 ஆவது ஊதியக் கமிஷன் ஃபிட்மென்ட் ஃபேக்டர்
- காரணி: 1.86 மடங்கு
- சம்பள உயர்வு: 54%
- குறைந்தபட்ச ஊதிய அளவு: ரூ 7,000
7 ஆவது ஊதியக் கமிஷன் ஃபிட்மென்ட் ஃபேக்டர்
- காரணி: 2.57 மடங்கு
- சம்பள உயர்வு: 14.29%
- குறைந்தபட்ச ஊதிய அளவு: ரூ 18,000
8 ஆவது ஊதியக் கமிஷன் ஃபிட்மென்ட் ஃபேக்டர்
- காரணி:?
- சம்பள உயர்வு:?
- குறைந்தபட்ச ஊதிய அளவு: ?
8வது ஊதியக் குழுவில் மாறுபட்ட கருத்து
ஏழாவது ஊதியக் குழுவுக்குப் பிறகு முதல் ஊடக அறிக்கைகளில், எட்டாவது ஊதியக் குழு இருக்காது என்று கூறப்பட்டது. ஆனால் ஜீ பிசினஸின் கூற்றுப்படி, 8வது ஊதியக் குழுவைப் பற்றி வெவ்வேறு பிரிவுகள் இரண்டு வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளன. அடுத்த ஊதியக் குழுவை அரசு பரிசீலிக்காது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், இது சாத்தியமில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதை திடீரென நிறுத்த முடியாத அமைப்பாகும். இரண்டாவது பெரிய காரணம், 8வது சம்பள கமிஷன் வர இன்னும் கால அவகாசம் உள்ளது. மக்களவை தேர்தலும் 2024 ஆம் ஆண்டில் நடக்க உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த அரசியல் கட்சியும் மத்திய ஊழியர்களை கோபப்படுத்தும் அபாயத்தை எடுக்காது. எனவே அடுத்த சம்பள கமிஷன் வரும் என்றும், அது 2026 ஜனவரி 1 முதல் பொருந்தும் என்றும் பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ரூ. 8000 அடிப்படை ஊதிய உயர்வு சாத்தியம்
ஊதிய நிலை மேட்ரிக்ஸ் 1-ன் படி மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000 முதல் தொடங்கக்கூடும். அதன்படி, பே மேட்ரிக்ஸ் லெவல்-18 வரை சம்பளம் அதிகரிக்கும். சம்பள கமிஷனின் கடந்த கால போக்கை பார்த்தால், இது ஒவ்வொரு 8-10 வருடங்களுக்கு ஒரு முறை செயல்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். தற்போது 8-வது ஊதியக்குழு 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 குட் நியூஸ், அதிரடி ஊதிய உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ