8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக 8வது ஊதியக்குழு பற்றிய அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலேயே இது குறித்து அறிவிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஊழியர்களுக்கு அப்போது ஏமாற்றமே மிஞ்சியது. அதன் பிறகு 8வது ஊதியக்குழு குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
8வது ஊதியக்குழு எப்போது வரும்? இதற்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்? இதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உயரும்? இவற்றை பற்றி இங்கே காணலாம்.
8வது ஊதியக் குழு (8th Pay Commission)
மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் 8வது மத்திய ஊதியக் குழுவின் பரிசு கிடைக்கப் போவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவை அமைக்கிறது. 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு 8வது ஊதியக்குழு அமலுக்கு வர வேண்டும்.
பொதுவாக ஊதியக்குழுக்களின் பரிந்துரைகளை அமல்படுத்த 1 1/2 முதல் 2 ஆண்டுகள் ஆகும். 2026 ஆம் ஆண்டு 8வது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டுமானால், இப்போது அதற்கான அறிவிப்பு வர வேண்டும். இதன் காரணமாகத்தான் ஊழியர் சங்கங்கள் நீண்ட நாட்களாக இதற்கான கோரிக்கையை வைத்து வருகின்றன. எனினும், அரசு தரப்பிலிருந்து இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
ஊதிய உயர்வு (Salary Hike)
ஜனவரி 1, 2026க்குள் 8வது ஊதியக் குழு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த முறை வழக்கமான முறைகள் மாற்றப்படலாம் என்றும், அவற்றுக்கான ஏற்பாடுகளை செய்யவே இந்த கால தாமதம் ஏற்படுவதாகவும் ஒரு சாரார் கூறி வருகின்றனர். 8வது ஊதியக்குழுவில் ஊழியர்களுக்கு மிகப்பெரிய சம்பள உயர்வு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
7th Pay Commission: 7வது ஊதியக்குழு எப்போது அமல்படுத்தப்பட்டது?
- 28 பிப்ரவரி 2014 அன்று, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 7வது ஊதியக் குழுவை அமைத்தார்.
- இந்த ஆணையம் தனது அறிக்கையை 19 நவம்பர் 2015 அன்று அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது.
- அதன் பரிந்துரைகள் 2016 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டன.
- இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் சுமார் 23 சதவீதம் உயர்த்தப்பட்டது.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor)
7வது ஊதியக்குழு அமைக்கப்படும்போதே ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் இருந்தன. ஆனால், அப்போது அது 2.57 மடங்காகவே நிர்ணயிக்கப்பட்டது. ஆகையால் 8வது ஊதியக்குழுவில் கண்டிப்பாக இது 3.68 மடங்காக உயரும் என நம்பப்படுகின்றது. 8வது ஊதியக் குழு அமலுக்கு வந்து, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரித்தால், அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயிலிருந்து ரூ. 26,000 ஆக அதிகரிக்கும். அதாவது அடிப்படை சம்பளத்தில் (Basic Salary) சுமார் 44 சதவிகித ஊதிய உயர்வு (44 Percent Salary Hike) இருக்கும்
Monthly Salary, Pension
8வது ஊதியக்குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.34,560 ஆக உயர்த்த வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.17,280 ஆக்க வேண்டும் என்றும் ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், இது குறித்து மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. அரசின் இந்த முடிவால் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் மாற்றம் வரலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ