7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்புகள்: அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்திகாக காத்திருக்கும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிப்பு இன்னும் சில நாட்களில், பெரும்பாலும் அக்டோபர் மாதத்திலேயே அறிவிக்கப்படக்கூடும். இந்த ஆண்டின் முதல் பாதிக்கான அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. மார்ச் 24, 2023 அன்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அகவிலைப்படியில் 4% அதிகரிப்பை அறிவித்தார். அதன் பிறகு அகவிலைப்படி 42% ஆக அதிகரித்தது.
டிஏ உயர்வு: அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும்?
தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) 42 சதவீத அகவிலைப்படி (டிஏ) / அகவிலை நிவாரணம் (டிஆர்) வழங்கப்படுகிறது. நவராத்திரி நிறைவடையும் விஜய தசமி அன்றோ அல்லது தீபாவளி சமயத்திலோ மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஜூலை 2023 முதல் நிலுவைத் தொகையும் அக்டோபர் மாத சம்பளத்துடன் (விஜய தசமி அன்று அறிவிக்கப்பட்டால்) அல்லது நவம்பர் மாத சம்பளத்துடன் (தீபாவளியின் போது அறிவிக்கப்பட்டால்) வழங்கப்படும். அரியர் தொகையானது (DA Arrears) அறிவிக்கப்பட்ட சதவீத உயர்வின் அடிப்படையில் செய்யப்படும். உதாரணமாக, 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், 4 சதவிகித நிலுவைத் தொகை வழங்கப்படும்.
அக்டோபரில் அகவிலைப்படி உயர்வு: டிஏ உயர்வை எது பாதிக்கிறது?
அகவிலைப்படி (Dearness Allowance) கணக்கீடு தொடர்புடைய மாதங்களின் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்கள் (CPI-IW இன்டெக்ஸ்) அடிப்படையில் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாகக் குறியீட்டு எண் உயர்ந்திருப்பதால், தற்போது 4 சதவிகித டிஏ உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிஏ உயர்வு: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
7வது ஊதியக் குழுவின் கணக்கீடுகளின் அடிப்படையில், ஜூலை 1, 2023 முதல் பொருந்தும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கலாம். வரவிருக்கும் மதிப்பாய்வுகளில் CPI-IW குறியீட்டு எண்கள் மாறாவிட்டாலும், பணவீக்க புள்ளிவிவரங்கள் 6 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதால், அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
DA Hike: AICPI-IW குறியீட்டு கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது?
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் பணியகம், முந்தைய மாதத்திற்கான தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்களை அடுத்த மாதத்தின் கடைசி வேலை நாளில் அறிவிக்கிறது. தொழிலாளர் பணியகம் இந்தியாவில் உள்ள 88 தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் இருந்து 317 சந்தைகளில் இருந்து சில்லறை விலைத் தரவைச் சேகரித்த பிறகு குறியீட்டு எண்ணைக் கணக்கிடுகிறது.
டிஏ உயர்வு: அகவிலைப்படி ஃபார்முலா
மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை கணக்கிடப் பயன்படுத்தப்படும் சூத்திரம்:
அகவிலைப்படி ஃபார்முலா - [(அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு AICPI) கடந்த 12 மாதங்களுக்கான சராசரி - 115.76)/115.76]×100.
PSU பணியாளர்களுக்கு, டிஏ உயர்வு கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூத்திரத்தால் கணக்கிடப்படுகிறது:
[கடந்த 3 மாதங்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100)-126.33)] x100
டிஏ உயர்வு: அகவிலைப்படி என்றால் என்ன?
விலைவாசி உயர்வை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்கப்படுகிறது. காலப்போக்கில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவின் அளவு CPI-IW மூலம் பிரதிபலிக்கிறது. இதை மனதில் கொண்டு, அகவிலைப்படி அல்லது அகவிலை நிவாரணம் ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது.
மேலும் படிக்க | மாதம் ₹210 போதும்... ஆயுள் முழுவதும் பென்ஷன் தரும் அடல் பென்ஷன் திட்டம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ