7th Pay Commission:18 மாத டிஏ நிலுவை தொகை! 3 தவணையில் கொடுக்க திட்டம்?

ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத கால டிஏ நிலுவைத் தொகையை ஊழியர்களுக்கு வழங்குவது தொடர்பான பிரச்சினை இன்றுவரை நிலுவையில் உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 6, 2022, 01:12 PM IST
  • 18 மாத கால டிஏ நிலுவைத் தொகையை ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ளது.
  • அகவிலை நிவாரணம் வழங்க மத்திய அமைச்சரவை 28 செப்டம்பர் 2022 அன்று ஒப்புதல் அளித்தது.
  • ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தின் அதிகரிப்பு ஆண்டுக்கு ரூ.6,261.20 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
7th Pay Commission:18 மாத டிஏ நிலுவை தொகை! 3 தவணையில் கொடுக்க திட்டம்?  title=

சமீபத்தில் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றை உயர்த்திய பிறகு 18 மாத அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பான சிக்கல் மீண்டும் எழுந்துள்ளது.  இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள புதிய அறிக்கையின்படி, மத்திய அரசு ஊழியர்களின் கணக்கில் நிலுவையில் உள்ள தொகை விரைவில் கிடைக்கப்பெறும், ஊழியர்கள் நம்பிக்கை இழக்கவேண்டாம் என்றும் டிஏ நிலுவைத் தொகை மூன்று தவணைகளில் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.  ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத கால டிஏ நிலுவைத் தொகையை ஊழியர்களுக்கு வழங்குவது தொடர்பான பிரச்சினை இன்றுவரை நிலுவையில் உள்ளது.

மேலும் படிக்க | EPFO உறுப்பினர்களுக்கு ஜாக்பார்ட்! முழு PF வட்டி தொகையும் கிடைக்க வாய்ப்பு! 

சில தகவல்களின்படி நிலை-3ல் உள்ள ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரையிலும், நிலை-13 அல்லது நிலை-14க்கு ஊழியர்களின் நிலுவைத் தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரையிலும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.  அதேசமயம் அரசாங்கம் இந்த புள்ளிவிவரங்களை மாற்றுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.  01.07.2022 முதல் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் 12 மாத சராசரி அதிகரிப்பின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் தவணையாக 4 சதவீதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்க மத்திய அமைச்சரவை 28 செப்டம்பர் 2022 அன்று ஒப்புதல் அளித்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அதிகரிப்பின் காரணமாக ஏற்படும் கூடுதல் நிதி தாக்கங்கள் ஆண்டுக்கு ரூ.6,591.36 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் 2022-23 நிதியாண்டில் ரூ.4,394.24 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  மறுபுறம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தின் அதிகரிப்பின் காரணமாக ஏற்படும் கூடுதல் நிதி தாக்கங்கள் ஆண்டுக்கு ரூ.6,261.20 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.  அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் அடிப்படையில் கருவூலத்தில் ஒரு வருடத்திற்கு ரூ.12,852.56 கோடியாக இருக்கும் என்றும், 2022-23 நிதியாண்டில் ரூ.8,568.36 கோடியாக இருக்குமென்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆதார் அட்டையை வைத்து பேங்க் பேலன்சை எவ்வாறு சரிபார்ப்பது? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News