Amazon Great Indian Festival: OnePlus 11 போன் ரூ.57000 இல்லை 4,749க்கு வாங்க ரெடியா?

Amazon Festival Sale: ஒன்பிளஸ்11 போனை 5,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம்... எப்படி? தெரிந்துக் கொள்ளுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 8, 2023, 06:34 AM IST
  • ஒன்பிளஸ்11 போன் 5,000 ரூபாயில்
  • அமேசான் கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவெல்
  • 2 நாட்களுக்குள் வாங்கினால் ஜாக்பாட்
Amazon Great Indian Festival: OnePlus 11 போன் ரூ.57000 இல்லை 4,749க்கு வாங்க ரெடியா? title=

Amazon Great Indian Festival: ரூ.57,000 மதிப்புள்ள OnePlus 11ஐ ரூ.4,749க்கு மட்டும் பெறுங்கள்! அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ. 5,000க்கும் குறைவான விலையில் OnePlus 11 5G ஐ வாங்குவது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். பண்டிகை காலத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2023 இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் நம்பமுடியாத சலுகைகளை தொடர்ந்து அள்ளி தெளித்துக் கொண்டிருக்கிறது.

இந்த பண்டிகை கால தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் தனித்துவமான சலுகைகளில் ஒன்று OnePlus 11 5G ஸ்மார்ட்ஃபோனின் (8GB RAM, 128GB சேமிப்பகம்) விலை அசர வைக்கிறது. நம்பவே முடியாது, ஆனால் உண்மை. ஒன்பிளஸ் 11 5ஜி போன் வெறும் 4,749 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த போனின் உண்மையான விலை 56,999 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா? கிரெடிட் கார்டு தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் சலுகைக்குப் பிறகு இந்த மொபைலை 4,749 ரூபாய்க்கு வாங்கலாம்.

தள்ளுபடியில் ஒன்பிளஸ் 11: ICICI கிரெடிட் கார்டு சலுகை
அமேசான் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஃபோனில் ரூ.2,250 தள்ளுபடி கிடைக்கும்.  இதனால் ஒன்பிளஸ் 11 இன் விலை ரூ.54,749 (ரூ. 56,999-ரூ. 2,250 = ரூ. 54,749) குறைக்கிறது.

மேலும் படிக்க | ஜியோ வாடிக்கையாளர்களே..! நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் இலவசம்

ஒன்பிளஸ் 11 தள்ளுபடியில்: எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

பழைய போனை கொடுத்துவிட்டு புதிய போன் வாங்கினால் அமேசான் ரூ. 50,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையை வழங்குகிறது. இந்த சலுகையின் மூலம், ஒன்பிளஸ் 11இன் விலையானது அதிகபட்ச பரிமாற்ற மதிப்பைக் கழித்து (ரூ. 54,749 - ரூ. 50,000 = ரூ. 4,749) ரூ.4,749 ஆகக் குறையும். 

ஒன்பிளஸ் 11 தள்ளுபடியில்: OnePlus 11 5G போன் 4,749க்கு கிடைக்க வேண்டுமானால் எந்த ஃபோனைப் எக்ஸ்சேஞ்ச் செய்ய வேண்டும்? 
உங்களிடம் iPhone 14 Pro Max 1 TB இருந்தால், அதிகபட்சமாக ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பெறலாம்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு தனியார் ரயில் சேவைக்கு அனுமதியா? தமிழ்நாட்டில் முன்பதிவு? உண்மை என்ன?

OnePlus 11 இன் முக்கிய அம்சங்கள்:
கேமரா: Sony IMX890 உடன் 50MP முதன்மை கேமரா (OIS ஆதரவு), 48MP அல்ட்ராவைடு கேமரா சோனி IMX581 (FOV: 115 டிகிரி), மற்றும் சோனி IMX709 (2X ஆப்டிகல் ஜூம்) உடன் 32MP டெலிஃபோட்டோ லென்ஸ்; EIS ஆதரவுடன் 16MP முன் (செல்ஃபி) கேமரா.
கேமரா முறைகள்: புகைப்படம், வீடியோ, இரவு, புரோ, பனோ, போர்ட்ரெய்ட், டைம் லேப்ஸ், SLO-MO, உரை ஸ்கேனர், மூவி, நீண்ட வெளிப்பாடு, இரட்டைக் காட்சி வீடியோ, டில்ட்-ஷிப்ட், எக்ஸ்பான், ஸ்கேன், ஸ்டிக்கர் மற்றும் AI ஐடி புகைப்படம்
காட்சி: 6.7 அங்குலம்; கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸுடன் 120 ஹெர்ட்ஸ் AMOLED QHD டிஸ்ப்ளே; தீர்மானம்: 3216 X 1440 பிக்சல்கள்; HDR 10+, sRGB, 10-பிட் கலர் டெப்த், PWM + DC டிம்மிங்
ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ்
செயலி: ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 மொபைல் இயங்குதளம்
சேமிப்பு: 8ஜிபி LPDDR5X ரேம், 128GB UFS3.1
பேட்டரி & சார்ஜிங்: 100W சூப்பர்வூக் உடன் 5000 mAh
வண்ண விருப்பம்: டைட்டன் பிளாக், எடர்னல் கிரீன், மார்பிள் ஒடிஸி

அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் நவம்பர் 10 வரை உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இந்த மெகா பண்டிகை சேல் இருக்கும் என்பதால் உங்களுக்கு பிடித்தமான பொருட்களை உடனே ஆர்டர் செய்யவும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க | GoPro கேமரா 50% தள்ளுபடி..! யூடியூபர்களுக்கு ஜாக்பாட் - அமேசானில் அதிரடி ஆஃபர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News