பாரத் பந்த்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; 10 பேர் உயிரிழப்பு!

வடமாநிலங்களில் தீவிரமடைந்த 'பாரத் பந்த்'. இதுவரையில் 10 பேர் உயிரிழப்பு!

Last Updated : Apr 3, 2018, 07:11 AM IST
பாரத் பந்த்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; 10 பேர் உயிரிழப்பு!  title=

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றத்தை எதிர்த்து இன்று நாடு முழுவதும் பல இடங்களில் தலித் அமைப்புகள் 'பாரத் பந்த்' நடத்தின. இதில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறத.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடை சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்டோரை, உடனடியாக கைது செய்யும் விதிமுறையை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் ரத்து செய்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

இவ்விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து உள்ளதாக தெரிவித்துள்ளது.இருப்பினும் பல அமைப்புக்கள் பாரத் பந்த்-க்கு அழைப்பு விடுத்தன. முக்கியமாக, பஞ்சாப், ஒடிசா மாநிலங்களில் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. 

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பந்த் காரணமாக இன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பஞ்சாப், ஒடிஷா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளது. ஒடிஷாவிலும் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய பிரதேசத்தில் மொரெனாவில் நடந்த வன்முறை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் குவாலியரில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். பிந்த் மாவட்டத்திலும் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மேலும் கலவரத்தில் ஈடுப்பட்ட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

அதில் 2 பேர் மோசமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா, பஞ்சாப், உத்தரபிரதேசம் என வடமாநிலங்களியில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ள நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர், மொரெனா மற்றும் பிந்த் மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டு உள்ளது. பேருந்து எரிப்பு வன்முறை தீவிரமடைந்ததையடுத்து சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்ரகாண்ட் டேராடூன் மற்றும்  ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியின் பல இடங்களில் கார், பேருந்து தீ வைத்து எறிக்கப்பட்டுள்ளது. இதனால் வடமாநிலங்களின் பல இடங்களில் பதற்றம் நிலவுகிறது. 

Trending News