வெளியானது அல்லு அர்ஜுனின் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ டிரெய்லர்!

அல்லு அர்ஜுனின் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ தமிழ் வெர்ஷனின் டிரெய்லர் வெளியானது..! 

Last Updated : May 4, 2018, 02:56 PM IST
வெளியானது அல்லு அர்ஜுனின் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ டிரெய்லர்!  title=

அல்லு அர்ஜுனின் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ தமிழ் வெர்ஷனின் டிரெய்லர் வெளியானது..! 

டோலிவுட்டில் ஹரிஷ் ஷங்கரின் ‘துவ்வாடா ஜெகந்நாதம்’ (DJ) படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அல்லு அர்ஜுன் கைவசம் வக்கந்தம் வம்சியின் ‘நாபேரு சூர்யா நா இல்லு இந்தியா’ மற்றும் இயக்குநர் லிங்குசாமியின் புதிய படம் உள்ளது. இதில் ‘நாபேரு சூர்யா நாஇல்லு இந்தியா’ படத்தில் ஸ்டைலிஷ் ஸ்டாருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் டூயட் பாடி ஆடியுள்ளார்.

மேலும், முக்கிய வேடங்களில் ‘சூப்பர் ஹீரோ’ சரத்குமார், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், தாகூர் அனுப் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். விஷால் – ஷேகர் இணைந்து இசையமைத்து வரும் இதற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ராமலக்ஷ்மி சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் 2 டீசர்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தமிழில் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் டப் செய்துள்ளனர். தற்போது, தமிழ் வெர்ஷனின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை வருகிற மே 4-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

 

 

Trending News