அட்சய திருதியை: அன்னதான பலன் என்ன தெரியுமா?

ஐஸ்வர்யம் தேடிவரும் அட்சய திருதியை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மிகச்சிறந்த நாளான இன்று அன்னதானம் செய்வது நன்மை தரும்.

Last Updated : Apr 18, 2018, 12:49 PM IST
அட்சய திருதியை: அன்னதான பலன் என்ன தெரியுமா? title=

ஐஸ்வர்யம் தேடிவரும் அட்சய திருதியை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மிகச்சிறந்த நாளான இன்று அன்னதானம் செய்வது நன்மை தரும்.

அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வது சிறப்பான பலனைத் தரும். அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்த இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

அட்சய திருதியை நாளன்றே வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார். 

பாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் 'அட்சய' என்று கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியை நாளன்றுதான்.

அட்சய என்றால் குறைவில்லாதது என்று பொருள். இந்த அட்சய திருதியை மகாலட்சுமிக்கான நாள். 

மகாலட்சுமி பூஜை செய்வது பெண்களுக்கு நல்லது....!

இந்த நாளில் பெண்கள் மகாலட்சுமி பூஜை செய்வது அற்புதமான பலன்களைத் தரும். இந்த நாளில்தான் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது.

இன்று காலை 6:19 முதல் 4-மணி வரை அட்சய திருதியை பூஜை மேற்கொள்ளலாம்.

அட்சய திருதியை நாளில் அன்னதானம்....!

அட்சய திருதியை தங்கம் வாங்கினால் பலன் என்று அனைவரும் கருதுகின்றனர். 

ஆனால் அதே சமயம் அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்யதால் செல்வம் பெருகும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்தாள் என்பர். 

இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும் மற்ற நாட்களில் இறைவனுக்கு நிவேதனம் என்ற பெயரில் உணவு படைக்கிறோம்.

அட்சய திருதியை நாளில் கிருஷ்ணர் வழிபாட்டை மேற்கொண்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும். 

ஏழை எளியவர்களுக்கு தானதர்மம், அன்னதானம் செய்வதன் மூலம் பெருமாளின் கருணையால் குடும்பத்தில் உள்ள வறுமை, கஷ்டம் விலகும்.

Trending News